Wednesday, August 21, 2013

Dwadashi Annadanam Thiruvannamalai 18-07-2013


Dwadashi Annadanam Thiruvannamalai 18-07-2013


With Guru wish we started Valarpirai Dwadashi Annadanam last year.  This'll be our 12th month we are doing in Thiruvannamalai on 18/08/20!13 (sunday)  at Thavathiru thiru padha swamigal  'Sathguru Chadaiswamy Ashram' at Palamaram cave..

Why we want to do “Dvadashi Tithi Annadanam” ?

https://sadhanandaswamigal.blogspot.com/2012/09/thiruvannamalai-dwadashi-annadanam.html



President ...

Thavathiru Thirupatha Swamigal
Sathguru Chadaiswamy Charitable Trust
Near Palamaram cave, Mulaipal Theertham
55/1 , Pay Gopuram 6th street  ,Thiruvannamalai 606601




















Friday, August 16, 2013

parikaram enral enna ?

ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் அவர்களின் அனுபவக்கருத்து



உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்னும் குறள்படி உலக சமுதாயத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதன் சமுதாயத்தை அனுசரித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது.முற்றும் துறந்த முனிவர் ஊர் பிடிக்காமல் வனத்துள் போய் விடுவதால்,அவருக்கு எந்த விதக்கட்டுப்பாடும் இல்லை.இப்பொழுது மனித மன விடுதலைக்கு யோக மார்க்கங்கள் இருந்தாலும் 90% மக்கல் கிரியா மார்க்கத்தை விரும்புகிறார்கள். மந்திரம், தந்திரம்,எந்திரம் ஆகியவைகளின் பேரில்தான் முழு நம்பிக்கை வைக்கின்றார்கள். அதனால்தான் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் தாங்கமுடியாத அளவு பெருகிக்கொண்டே செல்கிறது.கலியுகத்தில் வாழும் மக்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் பிரச்னைதான்.

என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று ஒரு மனிதனுக்கு ஏற்பட்டதோ அன்றே தீர்வு என்ற ஒன்றும் உள்ளது.அது என்ன தீர்வு என்பது நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை.ஏதோ ஒரு மாற்றுவழி இருக்கத்தான் செய்கிறது. அதைத்தான் பரிகாரம் என அழைக்கின்றனர்.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதுதான் பரிகாரத்தின் தத்துவம்.


நம்பிக்கைதான் பல மதங்களின் மூலதனம்.மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பல மதங்கள் கிடையாது.எனக்கு அருளாளர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை குறைவுதான்.ஆனால் அருளாளர்கள் கூறும் பரிகாரங்கள் மேல் முழு நம்பிக்கை உண்டு.கடந்த 40 ஆண்டுகளில் பல முறை பரிகாரங்களை பரீட்சை செய்து பார்த்துள்ளேன்.பரிகாரம் ஒரு முழுமையான தீர்வு இல்லை.விபத்தில் சிக்கியவனுக்கு முதலுதவி மாதிரிதான்.

பரிகாரங்கள் தற்காலிகமானவை.கொஞ்சம் சிந்திக்க,மூச்சுவிட கால அவகாசம் கிடைத்தவுடன் நிரந்தர நிவாரணத்தை மனிதன் தேட வேண்டும்.மனித காரியங்களுக்குத் தடையாக இருப்பது அவன் மனமும் உடலும்தான்.வெளி எதிரியே கிடையாது.கொல்லாமல் கொல்லும் நோய் அவனவன் உள்ளத்தில் இருக்கின்றது. கெட்ட நேரம் வரும்போதுதான் அடுத்தவர் சொத்தை அபகரிக்க எண்ணுகிறான்.அவனுக்கு நல்ல புத்தி சொல்ல ஆளில்லை.அதனால்தான் விநாசகாலே விபரீத புத்தி என பெரியோர்கள் கூறினர்.ஒன்று சுயபுத்தி வேண்டும்.அது இல்லாவிட்டால் சான்றோர்கள் புத்திமதியைக் கேட்டு அதன்படி நாணயமாக நடக்க வேண்டும்.இரண்டும் இல்லை எனில் ஒரு மனிதன் என்னதான் கலைகள் கற்றிருந்தாலும் அவன் தரித்திரமடைகிறான்.


நன்றி:ஆன்மீகப்பயணம் பக்கம் 223,224.

Thank: https://www.aanmigakkadal.com/2010/12/parikaram-enral-enna.html

Thursday, July 18, 2013

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்



காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)

அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.


இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.


என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.


ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் எஎனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.

Thank: https://www.aanmigakkadal.com/2009/09/blog-post

Wednesday, July 3, 2013

Appar swamy guru poojai - Mylapore

50.Appar swamigal jeeva samadhi temple -

Royapettah high road When u start at radhakrishnan salai you will find the bridge passing over this road .That road is royapettah high road.Take right from that bridge and go around 300 meters then you will find this temple at your right.It is just Opposite to Sanskrit College. Arulmighu Apparswamy Thirukoil, 171, Royapettah High road, Mylapore, Chennai – 600004 Time 7 to 12 and 4 to 8 pm

Add caption








Wednesday, June 19, 2013

LOOKING YOUR FUTURE LIFE

A SPIRITUAL METHOD FOR "LOOKING YOUR FUTURE LIFE"

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி

வேப்பங்குச்சி

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி? ஒரு சுலபமான ஆன்மீக வழிமுறை

நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.இனிமேல் இப்படிச் சொல்லாதீர்கள்.உங்கள்வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை இன்று முதல் நீங்களே காணலாம்.

ஒரு சனிக்கிழமையன்று ,குளித்து சுத்த மனதுடன் நூறு ஆண்டு ஆன வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.

அதில் ஏறி கையினால் பெருவிரல் தடிமனாக உள்ள ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒடித்து எடுத்த குச்சி வளையாமல் கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்க வேண்டும்.குச்சியின் நீளம் இரண்டு சாண் அளவு இருக்க வேண்டும்.வீட்டிற்குக் கொண்டு வந்து இருபக்கமும் உள்ள பிசிறுகளை கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும்.பின் அதன்மேல் நயம் சந்தனம் பூசிக்காய வைத்து விடவும்.இப்போது தெய்வீக வேப்பங்குச்சி தயார்.

இதை மற்றவர்களுக்காகவும் நீங்கள் தயாரிக்கலாம்.ஒரு அமாவாசை தினத்தில் மேற்படி குச்சியை எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.படுக்கை விரித்துஅதில் சிறிய தலையணைமேல் ஒரு புது சிவப்புநிற டர்க்கிடவல் விரிக்கவும்.அதன்மேல் மேற்படி குச்சியை வைக்கவும்.அதன்மேல் ஒரு சிவப்புத்துணி விரித்து குச்சியை மூட வேண்டும்.இரவு 9 மணிக்குமேல் மூடிய குச்சிமேல் தலைவைத்துப் படுக்க வேண்டும்.வடக்கே நோக்கி தலைவைத்துப் படுக்க வேண்டும். “ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ” என மனதால் ஜபித்துக் கொண்டே தூங்கிவிட வேண்டும்.

15 நாட்கள்தினமும் செய்ய சிறு நட்சத்திரங்கள் தோன்றும்.பின் அவை மறைந்து 30 நாட்களுக்குப்பின் ஒரு பிரகாசமான நட்சத்திரம் மட்டும் தோன்றும்.45 நாட்களுக்குப்பின் முழுநிலவு தோன்றும்.60 நாட்களுக்குப்பின் உங்களது வருங்காலம் திரைப்படம்போல் தோன்றும்.பின் தங்கள் யுக்தியை உபயோகப்படுத்தி பல விதங்களில் விருத்தி செய்து கொள்ளலாம்.

90 தினங்களுக்குள் வெற்றி உறுதி!!!
அம்மா!பத்திரகாளி!!! உன் கருணையே கருணை!!!

நன்றி:ஆன்மீகத்திறவுகோல்,பக்கம் 274,275.
ஆசிரியர் ஜோதிட ஆன்மிக இமயம் மிஸ்டிக் செல்வம் அவர்கள்.




https://www.aanmigakkadal.com/2009/009/blog--post_44 66.html

Wednesday, May 22, 2013

Jeeva Samadhi in and around Madurai



சித்தர்களின் ஜீவசமாதிகள்-மதுரை

Jeeva Samadhi in and around Madurai
















































சதுரகிரி மகாலிங்கத்திடம் நேரிடையாக பேசிய முனியாண்டி சித்தர் ஜீவ ஆலயம் அமைவிடம். மதுரை to திருமங்கலம் ரோட்டில் T.குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கே.ரங்கப்பாளையத்தில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தவர்.

Image may contain: one or more people and fire


Thalai Viritha Swamigal story  
mp3 audio https://goo.gl/KFUiR9

Birama Sri Thalai Viritha Swamigal Jeeva Alayam
2A Thalaiviruchan Lane Opp Supreme Hotel, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
098428 98800
Google MAP https://goo.gl/0ESS1t


























ROCK-CUT Siddhar temple – Arittapatti Village, Madurai

Image result for Kudaivarai Sivan Temple (Arittapatti)

Click : Story Arittapatti Siddhar cave temple [ mp3 ]
                                          22 minutes











Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்



                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good



Thank to :https://jnanabhoomi.blogspot.com/2013/05/blog-post_9275.html



Tuesday, May 14, 2013

அஞ்சனம் கண்களுக்கு தீட்டும் மையே


அஞ்சனம்

கண்களுக்கு தீட்டும் மையே 


 திரு. மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அஞ்சனப்பிரயோகம் அனுபவங்களை 

 அஞ்சனம் என்பது கண்களுக்கு தீட்டும் மையே 
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம். 

அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல்லை பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள்,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும். 





எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது நூலில் விவரித்துள்ளார்.


முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.


கண்மை தயாரிக்கும் முறை:-
 வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச் சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச் சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி,மீண்டும் தோய்த்து மீண்டும் உலர்த்தி,பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ள வேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்,மேற்படி கரிசலாங்கண்ணிச் சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தச் சட்டியை அந்த விளக்கின்மீது மூன்று புறமும் செங்கலிட்டு காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியை வழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள் அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒரு காதந் தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம் இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட வெள்ளைக் கரிசலாங் கண்ணி,மஞ்சள் கரிசலாங் கண்ணி,மற்றும் பொன்னாங் கண்ணி, ஆகியவற்றுக்கு சோழர்கள் காலத்தில் வரி விதிக்கப்பட்டது.அதற்கு கண்ணிக் காணம் என்று பெயர்.வரி செலுத்தினாலும் இதன் அருமை மற்றும் பெருமை எண்ணி அக்காலத்தில் உபயோகித்தார்கள். இன்றோ நாம் இலவசமாய்க் கிடைத்தாலும் உபயோகம் அறியாது,இதன் அருமை மற்றும் பெருமை தெரியாது வெளிநாட்டு விஷங்களை மருந்தென்று பெருமை பேசித் திரியும் அவலம் நேராது.


வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் வழக் கொழிந்து போனதே!!!கண்மைக்கு போய் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது????

கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.



Thank to https://machamuni.blogspot.com/2011_12_01_archive.html 

       https://en.netlog.com/thillairaj/blog/blogid=5223413