Monday, August 29, 2016

குரு கீதை


எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை

– “ஸ்ரீ குரு கீதை”

shiva_dhyanam
ருத்திரன் +கோசம் +மங்கை

உலகிலேயே முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில் !ஆதி காலத்தில் நவ கிரகங்கள் அறியப்படாத காலத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதிலிருந்து இக்கோவில் கட்டப்பட்ட காலம் பழமையானது என்பதை அறியலாம் !

சிவன் பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் இது !உத்திரன் +கோசம் +மங்கை =மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் !``குருகீதை `` என்பது சிவன் பார்வதிக்கு குருவின் மகத்துவத்தை பற்றி உபதேசித்தது (இது தற்போது சமஸ்கிரத பாடலாக உள்ளது -இதனை தமிழ் படுத்தி திரிபுகளை நீக்கி விரிவுரை கடவுள் சித்தத்தால் செய்வேன் )

அடுத்து அதே உபதேசத்தை அவர் சனகாதி முனிவர்களுக்கு சொன்ன இடம் பட்டமங்கலம்

இந்த குருகீதையில் அவர் ஒரு குருவைப்பற்றி சொல்லியிருக்கிறார்

அவர்தான் வரப்போகிற அவதாரம் . எந்த அவதாரம் வந்தாலும் அவர் தேவராக இருந்து மனிதனாக பூமிக்கு அவதரித்து வருவதால் - முருகன் - கந்தன்

கந்தன் என்ற வார்த்தை ரட்சகர் என்ற பொருள் உள்ளது
கடவுளை அடைய பக்தன் குருவை நாடி அடைவது பற்றி அற்புதமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது !இது அவர்கள் ஆதிமனிதர்கள் என்பதையும் பின்னாளில் மனிதர்கள் தங்கள் குல தெய்வ வழிபாட்டின் படி இவர்களை கடவுளுக்கு இணை வைத்திருக்க வேண்டும்

குரு கீதை (2) !!

யுகபுருஷன்  சிவன் பார்வதிக்கு உபதேசித்ததாவது :
1 . மகாதேவி ! சகல ஆனந்தத்தை அளிப்பதும் ; சகல சுகங்களை அருளுவதும் ; தூய அறிவையும் முக்தியையும் அளிப்பதுமான தியானத்தைப்பற்றி கூறுகிறேன் கேள் !
2 . பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனை உணர்ந்து கொள்வாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனைப்பற்றியே பேசுவாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே சேவிப்பாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே நமஸ்கரிப்பாயாக !!
3 . பிரம்மானந்தத்தையும் பரம சுகத்தையும் அடைய வழிகாட்டியும் ; ஞானமே வடிவானவரும் ; மயக்கும் இருமைகளின் ஆளுமைக்குள்ளாகாதவரும் ; ஆகாயம் போன்ற பரிசுத்தரும் ; ````தத்- த்வ – மஸி என்ற இலக்கை காட்டிக்கொடுக்கிரவரும் ; தனித்தவரும் ; அழிவற்றவரும் ; நிர்க்குணமானவரும் ; கலங்கமற்றவரும் ; எல்லோருடைய ஆத்மாவுக்கும் சாட்சியானவரும் ; கற்பனைகளுக்கெட்டாதவரும் ; ஜட இயல்பாகிய முக்குணங்களை கடந்தவரும் குருவிற்கெல்லாம் குருவாகியவரும் ஆன சற்குருவையே நமஸ்கரிக்கிறேன் !!


4 . சந்திரகலை போலப்பிரகாசிப்பவரும் ; சச்சிதானந்த அபீஸ்ட்டா வரத்தை அளிக்க வல்லவருமான குருவின் திவ்ய மூர்த்தியை இருதயத்தாமரை கர்னிகத்தின் மத்தியிலே சிம்மாசனத்தில் வீற்றுக்கச்செய்து தியானித்து வரவேண்டும் !!
5 . தூய (வெண்மையான) ஆடையுடுத்தவரும் ; தூய வடிவுடையவரும் புஷ்பமும் முத்துமாலையும் அணிந்தவரும் ; மகிழ்சி ததும்பும் இரு விழிகளுடன் இடது மடியில் லக்ஷ்மியை ஏந்தியவரும் ; பரிபூர்ண கிருபைக்கு உறைவிடமும் ஆன குருவை தியானித்து வரவேண்டும் !!
6 .  பேரின்பமே வடிவானவரும் ; பேரின்பத்தை அளிப்பவரும் ; எங்கும் நிறைந்திருப்பவரும் ; ஞான சொருபியும் ; பரமாத்வாவிலே நிலைத்தவரும் ; யோகிகளுக்கெல்லாம் தலைவரும் ; போற்றுதலுக்குரியவரும் ; பிறவிப்பிணிக்கு வைத்தியரும் ஆன சற்குருவை எப்போதும் நான் நமஸ்கரிக்கிறேன் !!
7 . ஜனத்திரள் கூட்டத்திற்கு யாருடைய பாதார விந்தங்கள் குளிகையாக இருந்து உலக பந்தம் என்ற ஆலகால விசத்தின் துக்கசாகரத்தில் நிவாரணம் அளிக்கிறதோ ; ஆத்ம ரட்சிப்புக்கு கடவுளுடன் ஒப்புறவாக்கள் என்ற அமிர்தத்தை வாரிவழங்குகிறதோ அந்த சற்குருவை வணங்குகிறேன் !!
8 . ஆக்கல் , காத்தல் , அழித்தல் , தீமைகளை அகற்றுதல் , நன்மைகளை அருளுதல் ஆகிய ஐந்து செயல்களாகிய கடவுளின் இயல்புகள் யார் மூலமாக வெளிப்படுகிறதோ அந்த குருவையே வழிபட வேண்டும் !!
9 . குருவின் பாதகமலத்தில் பிறவித்துன்பம் அனைத்தையும் பொசுக்கும் காலாக்னி உள்ளது ! அவரின் பிரம்மரந்திரம் என்ற சகஸ்ராரத்தில் சிந்தைகளை சமப்படுத்தும் நலம் உள்ளது !!
10 . நமது சகஸ்ராரம் என்ற ஆயிரம் இதழ் தாமரையில் அ ,  க ,  த  என்ற அஷரங்களை முதலாக கொண்ட மூன்று பத்மங்களை உடைய ஹம்ச முக்கோணத்தின் மத்தியிலே குருவை தியானிக்க வேண்டும் !!
11 . நித்தியமானவரும் ; பரிசுத்தரும் ; அநித்திய உலகியல் மாயைகளால் பீடிக்கப்படாதவரும் ; தேவையற்றவரும் ; மாசற்றவரும் ; குன்றாத ஞானம் உள்ளவரும் ; ஆத்மாவிலே பேரின்பம் நிறைந்து வழிபவரும் ; பிரம்மமே குருவாக வெளிப்படும் சற்குருவை நான் நமஸ்கரிக்கிறேன் !!
12 . புவனங்கள் அனைத்தையும் (ஈரேழு பதினான்கு லோகங்களை) சிருஸ்டித்தவரும் ; யுகங்கள் தோறும் தர்மத்தை நிலைநாட்டுபவரும் (அவதரிப்பவரும்) ; நீக்கமற வேத ஆகமங்களை உலகிற்கு கற்பிப்பவரும் ; ஸத் – பரம் என்னும் பதத்தின் அர்த்தமானவரும் ; அனாதி குணங்களின் மேலாதிக்க நிர்வாகியும் ; ஸத் – பரம் என்னும் பதத்தை உலகிற்கு கற்பிப்பவரும் ; பிறவி குணங்களின் மேலாதிக்க நிர்வாகியும் மரணமில்லா பெருவாழ்வை ஜீவாத்மாக்களுக்கு கற்பிக்க வல்லவருமான சற்குருவின் பார்வை என் மீது நிலைத்திருக்கட்டும் !!
13 . புவனங்கள் அனைத்தின் வளர் சிதை மாற்றங்களின் அளவுகோலாகவும் ;கருணாரசத்தின் பிரவாகமாகவும் ; சகல மார்க்கங்களையும் உலகில் ஆங்காங்கு தோற்றுவித்தவரும் ; ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக தெரியும் தத்வ மாலைகளின் மத்யஸ்தரும் (சமரச வேதம் ) ; சத்,சித்,ஆனந்தம் (பரமாத்மா , ஜீவாத்மா . பேரானந்தம் ) ஆகியவைகளின் ஒத்ததிர்வை உலகிற்கு உபதேசிக்க வல்லவருமான சற்குருவின் அருட்பார்வை எப்போதும் ஏன் மீது நிலைத்திருக்கட்டும் !!
14 . சிவனாகிய எனது பிரமாணத்தில் குருவுக்கு மிஞ்சியது ஏதுமில்லை என எழுதப்படுவதாக ! சிவனாகிய எனது பிரமாணத்தில் குருவுக்கு மிஞ்சியது ஏதுமில்லை என எழுதப்படுவதாக ! சிவனாகிய எனது பிரமாணத்தில் குருவுக்கு மிஞ்சியது ஏதுமில்லை என எழுதப்படுவதாக ! சிவனாகிய எனது பிரமாணத்தில் குருவுக்கு மிஞ்சியது ஏதுமில்லை என எழுதப்படுவதாக !
15 . சிவனாகிய எனக்கு உபதேசிக்கப்பட்டபடி இதுவே உயர் நலம் ! சிவனாகிய எனக்கு உபதேசிக்கப்பட்டபடி இதுவே உயர் நலம் ! சிவனாகிய எனக்கு உபதேசிக்கப்பட்டபடி இதுவே உயர் நலம் ! சிவனாகிய எனக்கு உபதேசிக்கப்பட்டபடி இதுவே உயர் நலம் !
16   .   ஹரியின் உபதேசத்தால் உண்மை உணரப்பட்டது ! ஹரியின் உபதேசத்தால் உண்மை உணரப்பட்டது ! ஹரியின் உபதேசத்தால் உண்மை உணரப்பட்டது ! ஹரியின் உபதேசத்தால் உண்மை உணரப்பட்டது ! வெற்றி வெற்றி ! வெற்றி மேல் வெற்றி !
ஓம் நமோ குருவாய ! - குருவாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் !!
17 . இவ்வாறு இடைவிடாது தியானிக்கவேண்டும் ! அப்போது நிறை ஞானம் தானாகவே சித்திக்கும் ! குருவை உணர்ந்து அவரால் உபதேசிக்கவும் பட்டவன் நிச்சயமாக ஜீவன் முக்தனாவான் !!
18 . குரு உபதேசத்த வழிகளில் மனதை சுத்தியாக்கவேண்டும் ! தன்னோடு இடைபடும் அநித்தியங்களை – மாயைகளை இழிவாக கருதி ஒதுக்கவேண்டும் !!
19 . விளங்கும் பொருட்களெல்லாம் பிரம்மம் என உணர்ந்து நேயம் கொள்க ! மணம் உய்வடையும் போது ஞானத்தால் நிறையும் ! ஞானத்தையும் நேயத்தையும் சமபடுத்திக்கொள்க ! இதுவல்லாது இரண்டாவது ஒரு வழியில்லை !!
20 . நூறு கோடி சாஸ்தரங்களாலும் ; அதனை விரிவாக ஆராய்வதாலும் பலன் ஏதும் உண்டாகாது ! சற்குருவின் கிருபையாலன்றி சித்தியும் சாந்தியும் உண்டாகாது !!
21 . எட்டுவகை பற்றுகளை அறுத்து ; ஆனந்தம் என்னும் குழந்தையை நன்றாக பிறப்பிக்க வைப்பவரே சற்குரு எனப்படுவார் !!


குருவின் மகத்துவம்:
22 . மகாதேவி ! இங்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் ! குருவை எவன் நிந்தனை செய்கிறானோ அவன் சந்திரசூரியர்கள் உள்ளளவும் கொடும் துயரத்துக்கும் சிக்கலுக்கும் ஆட்படுவான் !
23 . தேவி ! தேகம் உள்ளளவும் ; கல்பம் முடியுமளவும் ஒருவன் குரு பக்தியில் லயிக்கவேண்டும் ! சுதந்திரமானவனாக இருந்தாலும் குருவுக்கு லோபம் செய்யலாகாது !!
24 . தெளிவுள்ள சிஷ்யன் ஒரு போதும் குருவின் அருகாமையில் குசுகுசுவென பிறரோடு பேசலாகான் ! ஒருபோதும் உலகியல் விசயங்களை அலட்டித்திரியான் !!
25 . குருவின் சந்நிதியில் அவரை அலட்சியப்படுத்தியும் ; அவமானப்படுத்தியும் பேசுகிறவன் தனது குருநிந்தனையால் அடர்ந்த காட்டிலும் தண்ணீரில்லாத வணாந்திரத்திலும் பிறந்து உழல்வான் !!
26 . குரு இட்ட பணியை விட்டு விலகிச்செல்லலாகாது ! அவரின் உத்தரவில்லாமலும் அவ்விசயத்தில் தலையிடலாகாது ! குருவின் திருவருளால் பிரகாசிக்கிற ஞானத்தின் வழியில் மட்டுமே வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் !!
27 . குருவின் ஆசிரமம் உள்ள தளத்தில் சுற்றி பொழுது போக்குவதும் ; குடிகூத்தில் ஈடுபடுவதும் கூடாது ! குருவே செய்யவேண்டிய தீஷை ; சாஸ்திர வியாக்கியானம் செய்து பிறருக்கு வழிகாட்டுதல் ; தூண்டுதல் ; உத்தரவிடுதல் போன்றவற்றில் முந்திரிக்கொட்டை போல ஈடுபடக்கூடாது !!
28 . சிரமபரிகாரம் செய்து கொள்ளுதல் ; அங்கங்களுக்கு போகத்தை நாடுதல் ; களிக்கூத்தை நடத்துதல் ; சுற்றுலா செல்லுதல் ஆகியவற்றை குருவின் ஸ்தலத்தில் செய்யலாகாது !!
29 . குருவின் ஸ்தலத்தில் தங்கியிருக்கும்போது அவரின் அடிமை போல இரவுபகலாக இட்ட கட்டளையை மட்டுமே செய்யவேண்டும் ! குருவால் எது சொல்லப்பட்டதோ அது நன்றாக தெரிந்தாலும் தீதாக தெரிந்தாலும் முரண்படாமல் ஈடுபாடோடு செய்யவேண்டும் !!
30 . குருவிற்கு சமர்பிக்காமல் எந்தப்பொருளையும் அனுபவிக்கலாகாது ! சமர்பித்ததன் எஞ்சியதையே பிரசாதமாக உட்கொள்ளவேண்டும் ! இதனால் நித்ய ஜீவனை அடைந்துகொள்ளமுடியும் !!
31 . குரு அணுக்கமாக பயன்படுத்தும் பாதுகை ; படுக்கை ; ஆசனம் அனைத்தையும் புனிதமாக பாவிக்கவேண்டும் ! காலால் அவற்றை கைப்பிசகாக கூட தொடக்கூடாது !!
32 . குருவை பின்தொடர்ந்தே நடக்கவேண்டும் ! அவரைத்தாண்டி செல்லலாகாது ! அவரின் அருகாமையில் பகட்டாக அலங்காரமும் செய்து கொள்ளாமால் அடக்கத்தை பேணவேண்டும் !!
33 . குருவை நிந்திப்போர் இருக்குமிடத்தை விட்டு அகன்று விடவேண்டும் ! ஏனென்றால் சக்தியிருந்தாலும் அவன் நாவை அறுக்காமல் அகன்று விடுவதே உத்தமம் !!
34 . குரு உண்டு மிஞ்சியதை அடுத்தவருக்கு கொடுத்துவிடலாகாது ! அதை அப்படியே கைப்பற்றிக்கொள்வது நல்ல சீடனுக்கு அதிஸ்ட்டம் !! நித்தியத்தை அளிக்கவல்ல குருவின் கட்டளையை ஒருபோதும் மீறலாகாது !!
35 . அநித்யமானதும் ; விரும்பப்படக்கூடாததும் ; அகம்பாவமுள்ளதும் ; புனையப்பட்டதும் ; குருவின் வழிகாட்டுதல்களுக்கு மாறுபாடானதுமான விசயங்களை பேசுவதை தவிர்த்து அவரின் வார்த்தைகளைப்பற்றியே சிந்தித்து வரவேண்டும் !!
36 . பிரபோ ; தேவோ ; சாமி ; ராஜா ; குலவிளக்கே ; குலேசுவரா என்றிவ்வாறு குருவை மரியாதையுடன் அழைப்பவனாகவும் ; எப்போதும் அவருக்கு கீழ்படிதலுள்ளவனாகவும் இருப்பாயாக !!
37 . பார்வதி ! முனிவர்களின் சாபத்திலிருந்தும் ; பாம்புகளிடமிருந்தும் ; தேவர்களின் அபசாராத்திலிருந்தும் ; இடி மின்னல்களிலிருந்தும் ; சந்தர்ப்ப சுழ்நிலையால் பகையாவோரின் தாக்குதல்களிலிருந்தும் குருவின் தயவு காப்பாற்றும் !!
38 . குரு சாபத்தை அடைந்தவனை முனிவர்களாலும் காக்க இயலாது ; இவ்விசயத்தில் தேவர்களும் சக்தியற்றவர்களே !!
39 . மந்திரங்களுக்கெல்லாம் ராஜமந்திரம் குரு என்ற இரண்டெழுத்து ஆகும் ! ஸ்மிருதி  - வேத விளக்கங்களுக்கும் குருவின் வார்த்தையே பரம உறைவிடமாகும் !!
40 . பிறரால் மதிக்கப்படவும் ; பூஜிக்கப்படவும் ; வெகுமானத்தையும் எதிர்பார்த்து காவியும் தண்டமும் தரித்தவன் சந்நியாசி எனப்படான் ! ஞானத்திலே பொதிந்து நிற்பவனே உண்மையான சந்நியாசியாவன் !!
41 . யாரை சரணனடைந்து சேவை செய்தாலே மகாவாக்கியங்கள் பலரால் புரிந்துகொள்ள முடிகிறதோ அவரே சந்நியாசி ஆவார் ; மற்றவர்களெல்லாம் வேஷாதாரிகளே !!
42 . என்றுமிருப்பதும் ; வடிவமற்றதும் ; நிர்க்குணமானதும் ஆன பிரம்மபாவத்தை தானும் மென்மேலும் உணர்ந்துகொண்டும் ; ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுவதுபோல பிரம்மபாவத்தை பிறருக்கும் போதிப்பவனே சந்நியாசியாவான் !!
43 . குருவின் அருளாகிய பிரசாதத்தால் தனது ஆத்மாவை பரமாத்மாவின் குமாரனாக (ஜீவாத்மாவாக) உணரப்பெறலாம் ! மனச்சமநிலை அடைந்து முக்திமார்க்கத்தில் ஆத்மஞானம் பெருகிப்பரவும் !!
44 . அசையும் பொருளாயும் அசையாப்பொருளாயும் ; சிறு புல் முதல் சகலமாயும் ; உலக வடிவங்கள் அனைத்துமாயும் பரமாத்ம சொருபமே துலங்குகிறது என்னும் ஞானம் உணரப்பெறலாம் !!
45 . சச்சிதானந்தம் உறையப்பெற்ற வடிவானவரும் ; உணர்வுகளை (பாவனையை) கடந்தவரும் ; என்றுமுள்ளவரும் ; பரிபூர்ணமானவரும் ; குணங்களை கடந்தவரும் ; உருவமில்லாதவருமான பரமாத்மாவே(அருவ உருவம்) வடிவெடுத்து வருபவரான சற்குருவையே(உருவம்) நான் வணங்குகிறேன்



8 comments:

  1. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! (திருமந்திரம்) சிவாயநம!

    ReplyDelete
  2. guru vadi saranam thiruvadi saranam

    ReplyDelete
  3. guru vadi saranam thiruvadi saranam

    ReplyDelete
  4. Sathya guru tks subramaniyam ayyavin thiruvadiyai vanagukiren

    ReplyDelete
  5. guru is more than god. the most achievement in one's life is guru deciple relationship. when you are at your guru's feet nothing exist other than ecstasy in oneness.

    ReplyDelete
  6. guru is more than god. when you surrender at your guru's lotus feet there is nothing for you to achieve. guru is satchithananda parapiramam.

    ReplyDelete
  7. pls. correct Point No.13 line no. 8 "eppothum en meethu". thanks

    ReplyDelete