ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை விழா (02/02/2018)
ஆன்மநேய அன்பர்களே !
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும், அறிவு ஒளி பெருகவும் ஆன்ம ஒளி நல்கவும் தஞ்சைத் தரணியில் அவதரித்து தத்தாத்ரேய பீடம், சுயம்பிரகாச சுவாமிகளென்னும், திருவிடைமருதூர் மௌனசுவாமிகளின் சீடராகி உலக மக்களின் துன்பம் நீவி இன்பம் அடைவதற்காக தவங்கனிந்து, நவங்கனிந்து, சிவங்கனிந்து இறையனுபூதி பெற்று, இரண்டற்ற, ஏகமான இறைவனில் இரண்டறக் கலந்து, மறைபொருளின் சத்தியமாய், ஓங்காரமாய், நித்தியமான பேருணர்வில் பிரம்மதத்துவாய் ஒளிரும் சத் - குரு பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் காரண குருவாய், காரிய உருவாய், சிவவடிவமாய் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டி , சென்னையில் ஆலப்பாக்கம் சதானந்தபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சுவாமிகளின் இந்த வருடத்திய 96 ஆவது மகா குரு பூஜைக்கு விழா சிறப்புடன் நடைபெற இருக்கின்றது. நிகழும் ஹேவிளம்பி வருடம் தைத்திங்கள் 20ம் நாள் (02/02/2018) வெள்ளிக்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்மிக அன்பர்கள் மூலமாக நடக்க உள்ள குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் திருவருளும், அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் அறக்கட்டளை சார்பாகவும், நமது தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாகவும் அழைக்கின்றோம். Thank : https://tut-temple.blogspot.com/2018/01/96-02022018.html
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 96வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்
சுவாமிகளின் இந்த வருடத்திய 95வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 20ம் நாள் (02-02-2017) மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .
சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு - சிறு குறிப்பு
சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது.
சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார்.
சுவாமி சதானந்தா தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் முலமாக கற்றுக்கொண்டார்....
இவ்வண்ணம்
தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
சதானந்தபுரம் , சென்னை -600063
சுவாமிகள் 96வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் :
Om –Dath – Sath Guruparabrammane Nam:
Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal 96th Annual Guru Pooja Invitation
02-02-2017 On Friday You please kindly come to the Gurupooja and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar
President –Swamy Chinmayananda
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
Sadhanandapuram (near to New Perungalathur)
Chennai – 600 063
email: sadhanandaashramam@gmail.com
Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.
MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G,55D,M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station
Swami Biography in Brief
Swami Sadhananda lived in this village Alapakkam (1909-1922), his last phase of life spent here serving the mankind and teaching spiritual exercises, and still living here with spiritual body and blessing the devotees. This place Alapakkam is located near Perungalathur, Chennai, Tamil Nadu, India.
Swami Sadhananda was brought here by Sri Narayanasamy - his first and most disciple. The Guruji attained Jeeva Samathi in 1922. During his sadhu lifespan he did several miracles to save peoples and the village, besides guiding his students to be blessed with high levels in sprituality.
Swami Sadhananda was a Navakanda Yogi, learned the practice from Thiruvidaimaruthur Avaduth Mouna Swamigal...link About Ashramam
DONATION ARE ACCEPTED
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
No comments:
Post a Comment