Thursday, November 7, 2013

Rajarishi Vishwamithrar temple at Vijayapathi


Rajarishi Vishwamithrar at Vijayapathi temple



The Only Place you can see Temple for Raja Guru Vishwamitrar .


Every Anusham nakshathra Abishegham, Aaradhanai, Annadhaanam at Vijayapathi. 

Yagham is conducted at the place where Vishwamithrar conducted Yagha.. say Mystic Selvam...

Vijayapathi is a Village in Radhapuram Taluk , Tirunelveli District , Tamil Nadu State . Vijayapathi is located 11.5 km distance from its Taluk Main Town Radhapuram . Vijayapathi is 60.4 km far from its District Main City Tirunelveli . It is 608 km far from its State Main City Chennai . 








Thank pic :
https://www.aanmigakkadal.com/
https://koodalbala.blogspot.com/


பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி



Rajarishi Vishwamithrar Temple at Vijayapathi

ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதி



திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க - ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் - இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி - நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம்.



இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது; எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும். ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா கூறுவது    





ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் . 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக,விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது .இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது

எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம். 

நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் - நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !

இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம் ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.

விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை, விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி  இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.

ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .





இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.

ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய  பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.

உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.

தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.


விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர்


இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில், சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,  சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.

இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!



 


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Thank :
https://www.aanmigakkadal.com/
https://koodalbala.blogspot.com/
https://www.livingextra.com/

ruthratcham - Mystic Selvam




oru muga ruthratcham -  Mystic Selvam



ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் -மிஸ்டிக் செல்வம்
ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற்கை சீற்றம் பாதிக்காது.ருத்ராட்சம் ஒரிஜினலாக இருந்தால் தண்ணீரில் மூழ்கும்;வென்னீரில் வெடிக்காது.ருத்ராட்சத்துக்கு டூப்ளிகேட் பத்ராட்சம்.இந்த பத்ராட்சம் பூஜைக்கும்,ஜெபத்திற்கும் உதவாது.

தகுதி இல்லாத நபர்களையும் பொன்,பொருள்,புகழ் மூலம் தகுதியாக்கும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.ஒரு முக ருத்ராட்சத்தை வில்வ மரப்பெட்டியில் வைத்திருந்தாலே போதும்.பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை;பூர்வ புண்ணியம் செய்திருப்பவர்களுக்கு ஒரு முக ருத்ராட்சம் தானாகவே தேடிவரும்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒருமுக ருத்திராட்சம் உருவாகும்.




ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் ருத்ராட்சங்களுக்கு சாம்பிராணி தைலமிட்டு தேய்ப்பார்கள்.அதனால் அதன் சக்தி பல மடங்காகப்பெருகும். ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.


பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும்.




செட்டி நாட்டுப்பகுதிகளில் முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் சிவ தீட்சை பெற்று ஒரு முகருத்ராட்சம் வைத்திருந்தனர்.அதனால் அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்துள்ளனர்.பின்னர் வந்த அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு முக ருத்ராட்சத்தின் அருமை பெருமை தெரியாமல் அதைத்தூரப்போட்டுவிட்டார்கள்.அதனால் அப்பகுதியே களையிழந்தது.

பசுஞ்சாணவிபூதி அணிந்து ருத்ராட்ச மாலை அணிந்து ஓம்சிவசிவஓம் ஜெபித்து மகா வில்வாதிலேகியம் சாப்பிட்டு பசும்பால் குடித்துவந்தால் சகல விதமான சித்துக்களும் கிடைக்கும்.

 மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் 40 வருட ஆன்மீக ஆராய்ச்சி அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அந்த புத்தகத்தின் பெயர்:ஆன்மீகப்பயணம் இரண்டு பாகங்கள்.


ஜோதிடம்,மாந்தீரீகம்,சகல விதமான ஆன்மீக சந்தேகங்களையும் ஆராய்ந்து மிஸ்டிக் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.ஜோதிடர்,சிவ ஆராய்ச்சியாளர்கள்,மாந்திரீகப்பாதிப்பிலிருந்து மீள விரும்புவோர்,செல்வச்செழிப்பினை ஆன்மீக ரீதியிலும் அல்லது நேர்மையாகவும் அடைய விரும்புவோருக்கு இந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்...



thank :https://www.aanmigakkadal.com/2010/12/oru-muga-ruthratcham.html

Wednesday, November 6, 2013

SUMMA IRU சும்மா இரு


சும்மாஇரு

அன்புடையீர் ,

          ஒரு  பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை  எடுத்துக்கொண்டு  அதை ஆடாமல் அசையாமல்  ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்கள் நீங்கி தண்ணீர் தெளிவாகி விடும் . ஏதும் செய்யாமல் சும்மா வைத்திருந்தால் தானே தெளிந்து விடுகிறது . அது போல்  எந்த நேரமும் இயங்கி கொண்டே இருக்கும் மனதை ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் வேறு ஒன்றையும் நாடாமல் சும்மா வைத்திருந்தால் மனதில் இருக்கும் களங்கங்கள் தானே விலகி தெளிவாகி விடும் .



         தெளிவு என்பது இல்லாத இடமே இல்லை . தெளிவாக இருந்தால் தான் நன்றாக பார்க்க முடியும் . பாட்டு சத்தம் தெளிவாக இருந்தால் தான் நன்றாக கேட்க  முடியும் . அறிவு  தெளிவாக இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் .




          "  தெளிவை தெளிவாய் தெளிந்து தெளிவே தெளிவாய் தெளிவாய் "
              தெளிவு குரு மேனி காண்தல் ----திருமூலர் பாடல் .
               இதில் குரு (இறைவன் ) மேனி தெளிவு .

மனம் இயங்காமல்  எண்ண மற்ற (சும்மா இரு ) நிலையில் இருந்தால் தானே தெளிந்துவிடும் .  ஆதலால் சும்மா இரு .



TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OURSELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OURSELF TO GIVE DEATHLESS LIFE.

Thank to: Dr Dheena Dayalan : https://suthasivam.blogspot.com/




Thanks - Regards

Harimanikandan .V
chamundihari@gmail.com

Tuesday, November 5, 2013

Pandit Balan Devotional Speech Pandit Balan(Younger Brother of Mystic Selvam)


Tamil Devotional Speech

 

 பண்டிட் பாலன் அவா்களின் கருத்துக்கள்


 1. "Om SivaSiva Om" mantram ( 16-oct-2013)


Friday, November 1, 2013

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் 

                                     [கௌரிக் காப்புத் தோத்திரம்]


கணவன், மனைவி ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக இணைபிரியாது வாழ வரம் தரும் விரதம் 

click: Very rare book (old story )[pdf]

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்
ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.
கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிபதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானதுசக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

Wednesday, October 30, 2013

Mystic Selvam Book

திரு.மிஸ்டிக் செல்வம்  நூல்

.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’,  ‘ஸ்ரீசொர்ணபைரவர்',  ‘ஆன்மீகத்திறவுகோல்' என்னும் நூல்களை எழுதியுள்ளார். 




Mystic Selvam Book "Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva"...

I got information from  Younger Brother of Mystic Selvam 
He have copyright for all this book .
This year end Mystic Selvam Ayya three book will reprint ...