Friday, August 23, 2019

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் - 1 பதிவு

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் ................1 பதிவு
இந்த பதிவு நம் நாட்டில் உள்ள கோவில்களின் தன்மைகளைப்பற்றியும்
சித்தர்கள் கோவிலை பற்றிய கூரிய ரகசியம்களையும் பதிகப்பட்டுள்ளது 
அறிந்து பயன்பெறவும் .......
கோவிலை பற்றி முகநூல் அன்பர்கள் நிறைய தகவல்கள் பதிகிறார்கள்
இந்த பதிவில் சித்தர்கள் ஏன் ,எப்படி ,கோவில் உண்டாக்கி ,பயன்படுத்தி
அதை நமக்கு கொடுத்து உள்ளார்கள் என்பதனை பார்போம் .
கோவில் .........
தலம்,தீர்த்தம் ,மூர்த்தம் .......
கோவில் அமைந்த இடம் தலம் ....
கோவிலில் உள்ள ஊற்று நீர் (தீர்த்தம் )
கோவிலில் செய்யப்பட்டு உள்ள மூர்த்தம் (சிலைகள்)
உருவ வழிபாடு என்ற நகைப்பு ஒரு புறம்
இதை வைத்து சம்பாத்தியம் ஒரு புறம்
இது தவறு என்பது ஒரு புறம்
இவைகள் எல்லாம் இன்று நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
அவர்களுக்குகாகவும் சித்தர்கள் நிறைய நான்மைகளை செய்து உள்ளார்கள்
ஆம் நாம் நாட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் ,பல நபர்கள் கோவிலின் தன்மைகளை கெடுக்க ,மாற்றவோ ,அழிக்கவோ ,முற்பட்டாலும் முடிவில் தோல்வியாகி அவர்களிடம் மாற்றத்தை கொடுத்து உள்ளது நிறைய கோவில்கள் இதை நாம் பல புராணம் ,சரித்தரம் படிக்கும் பொழுது அறியலாம் .
எப்படி இந்த கோவில்கள் மனிதர்களுக்கு உதவி செய்கிறது என்று பார்போம் .....
கோவில்களின் அமைப்பு ...
ஒரு ஊற்று ,ஒரு மரம் ,ஒரு மூர்த்தம் என்பதனை பார்த்தோம் இவைகளை விரிவாக பார்க்கும் மூன் விருட்சி சாஸ்திரம் என்னும்
மரம்களை புரிந்து கொள்ளவேண்டும் .......
நம்முடைய நாட்டில் மட்டும் தான் அறிய வகை முலிகை உடைய வனங்கள் உண்டு .
இதில் மனிதனின் வியாதிகளை குணபடுத்தும் மரம் ,தாவரம் நிறைய உண்டு என்பதனை நாம் அறிவோம்
ஆம் நாம் மரம் ,தாவரம் என்று நினைப்பது என்ன என்பதனை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அவைகள் எல்லாம் மனிதனாக இருந்து சிவா பெருமானை வழிபாடு செய்து அமரர்களாக மாறி இறைவனிடம் தாம் பூமியில் என்றும்
சஞ்சீவியாக இருந்து மனிதர்களுக்கு உதவி செய்ய பூமிக்கு வந்தது ...
சிவனின் பக்தரான ,சைவ முறையாக வாழ்ந்து உயிரை உண்டாக்கும்
மந்திரத்தை சிவனிடம் இருந்து பெற்ற அசுர (சைவர்கள் )குல ஆசான்
சுகர பகவான் நூலை படிக்கும் பொழுது நான் புரிந்து கொண்டது ...
ஆம் , சுக்ரஆசான் சைவர் ,அசுரர்கள் சைவர்கள் சிவ நெறியாளர்கள்
இவர்கள் தான் பூமியில் முலிகை ,செடி ,மரமாக வந்தார்கள் .இதை
சதுரகிரி மலை அந்தரங்க நூலில் அறியலாம்
எந்த முலிகை எப்படி ,எந்த நேரத்தில் ,என்ன சொல்லி பறிக்க வேண்டும்
என்ற விவரம்களை கும்ப முனி சொல்லி உள்ளார்
இந்த மரம்கள் மூலிகைகள் மலை மேல் வளரும் ,அவைகளை அழைத்து வந்து சிவபெருமானுடன் சேர்க்கும் பொழுது அவைகள் மருந்தாக
மாறும் தன்மையுடையதாக ஆகிவிடும் .
இந்த அமைப்பை முதலில் கண்டுபிடித்து அங்கே கோவிலை தேர்ந்து
எடுத்தார்கள் சித்தர்கள் ....
ஆம் சிவ பெருமான் வன நாதர்
அகில்மரம் வாழ்ந்த இடம் என்றால் கண்களுக்கு மருந்து ,இதை போல
தனி தனியாக விவரம்களை தரபோகிறேன் கவனித்து படித்து புரிந்து கொள்ளவும் ..
தல விருட்சம் என்றால் என்ன ?.............

No comments:

Post a Comment