Wednesday, June 13, 2018

நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !

Thank : Aademalan Eswaran  FB
நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !
Image may contain: one or more people
பொதுவாக , ஆவுடையார்மீது சிவலிங்கபாணம் அமையப் பெற்றிருக்கும் .ஆனால் ,அபூர்வமாக ஒன்றிரண்டு இடங்களில் நந்தியெம்பெருமான் மீது இலிங்கபாணம் அமைந்துள்ளது மிகவும் வியப்புக்குரியது தானே ?
௧ . வாலாஜா அடுத்த அனந்தலைமலை மீதுள்ள ஆலயத்தில் ஆவுடையார் மேல் உள்ள 
நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !

வாலாஜா அருகே கல்குவாரிகளில் பழமையான நந்தி மீது சிவன் காட்சி தரும் குகைக்கோயில் உருக்குலையும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை உள்ளடங்கிய வடாற்காடு மாவட்டத்தில் நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்திருத்தலங்களும், ஆழ்வார்களால் பட்டியலிடப்பட்ட வைணவத்திருத்தலங்களும், சமண, பவுத்த கோயில்களும் நிறைந்துள்ளன.
இதுதவிர ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் குகைகள் மட்டுமின்றி ரிஷிகளும், முனிவர்களும், சித்தபுருஷர்களும் தங்கி நடமாடிய குகைகளும் நிறைந்துள்ளன. இந்த குகைகளில் பல இன்றும் வழிபாட்டுக்குரிய தலங்களாகவும் விளங்குகின்றன. இதுதவிர பல்வேறு வரலாற்று சான்றுகளை தாங்கிய குகைகளும் நிறைந்துள்ளன. இத்தகைய குகைகள்தான் இன்று கல்குவாரிகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. அத்துடன் கோயில்கள் கொண்ட மலைகளும் குவாரிகளால் சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தகைய குகைக்கோயில் ஒன்று கல்குவாரிகளால் காணாமல் போகுமோ என்ற அச்சத்தில் வாலாஜா பகுதி மக்களை தள்ளியுள்ளது.
வாலாஜா அடுத்த அனந்தலை புராண சிறப்பு வாய்ந்தது. இங்கு ஈசனை நோக்கி அனந்தபத்மநாபன் தவம் இருந்ததாக கருடபுராணம் தெரிவிக்கிறது. இத்தகைய புராண சிறப்புமிக்க கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இவ்வூரை ஒட்டியுள்ள எடக்குப்பத்தில் சுமார் இருபது கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலை உள்ளது. இம்மலையில் தட்டினால் இசையெழுப்பும் பாறைகள், புராதன கல்வெட்டுகள், கிருஷ்ணரின் சிற்பங்கள், பாறை ஓவியங்கள் கொண்ட குகை கோயில் உள்ளது.
இக்கோயிலில் இந்தியாவில் எங்குமே கண்டறியாதபடி ஆவுடையார் மீது அமர்ந்த நந்திபகவான் மீது லிங்க வடிவில் சிவன் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். ஏற்கனவே இந்த மலையில் அமைந்துள்ள குவாரிகளால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக மலையை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்கள் புகார் எழுப்பி வந்தனர். அவர்களுக்கு இங்கு இப்படி ஒரு அதிசய கோயில் இருப்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த குகை கோயில் இருப்பது அப்பகுதி மக்களால் கண்டறியபட்டது.
தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கிறார்கள்.
இக்குகையில் சித்தர்கள் வந்து தங்கி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
௨ . மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டத்தில் உள்ள பாதேஸ் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம் இருக்கும் விதமாக மிகவும் வித்தியாசமான திரு உருவமாக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது .
௩ . அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இது போன்ற அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை உள்ளது .அற்புத வேலைப்பாடுகள் கொண்ட நந்தி சிலையில் சிவலிங்கபாணம் அற்புதமாக அமைந்துள்ளது .The Norton Simon Museum is an art museum located in Pasadena, California, United States. It was previously known as the Pasadena Art Institute and the Pasadena Art Museum.
௪ . என்னே வியப்பு! அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு வித்தியாசமான நந்தியின் சிற்பத்தைத் தர்பார் மண்டபத்தின் [இராஜகோபுரத்தினை ஒட்டியுள்ள மணடபம் ] தூணில் காணலாம் .நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார் .
அன்பர்களே ,இதுபோன்று வித்தியாசமான நந்தியெம்பருமான் பற்றிய தகவல்கள் இருப்பின் புகைப்படங்களுடன் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
நன்றி ==
வாலாஜா முகநூல் பக்கம் ,The Norton Simon Museum is an art museum located in Pasadena .
புகைப்படங்கள் ==
௧ , ௨ , ௩ . வாலாஜா அடுத்த அனந்தலைமலை மீதுள்ள ஆலயத்தில் நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு.
௪ . அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம்.
௫ , ௬ .அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் உள்ள அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை.
௭ .அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தர்பார் மண்டபத்தின்தூணில் உள்ள நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார்.


அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம்.
No automatic alt text available.

அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் உள்ள அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை.

Image may contain: plant and outdoor
அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தர்பார் மண்டபத்தின்தூணில் உள்ள நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார்.

Image may contain: sky and outdoor

No comments:

Post a Comment