அருள்மிகு தான யான வன மகா கணபதி திருக்கோயில்,சௌதடுக்கா,தக் ஷிண கன்னடா,கர்நாடகா.
சென்ற ஆண்டில் இதே நாள் .இஃதொரு மீள் பதிவு .
அகன்ற ஆகாயமே விமானம்! ஓங்கி உயர்ந்த மரங்களே கோபுரங்கள்!!சூழ்ந்துள்ள மரங்களே மதில்கள்!!
இயற்கையின் அழகுக்குள் அருள்பாலிக்கும் சௌதடுக்கா தான யான வன மகா கணபதி தரிசனம்!!!
அருள்மிகு தான யான வன மகா கணபதி திருக்கோயில்,சௌதடுக்கா,தக்ஷிண கன்னடா,கர்நாடகா.
விநாயகப் பெருமானின் வலப்பக்கத்தில் வீரபத்திரரும் இடப்பக்கத்தில் திருமாலும் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஒரே கல்லில் இது போன்ற மூர்த்தம் வேறெங்கும் காண முடியாது;வெகு அபூர்வ தரிசனம்!!!
தக்ஷிண கன்னட மாவட்டத்தில், பெல்தங்கடி தாலுக்காவில், கொக்கடா என்ற இடத்திற்கு அருகில் மூன்று கி.மீ தொலைவில் “சௌதடுக்கா விநாயகர்” கோவில் வயல்கள் சூழ்ந்த, கிராமபுறத்தில் உள்ளது. குக்கி சுபரமண்டய கோவிலிலிருந்து ௫௮ [ 58 ]கி.மீ தூரத்தில் உள்ளது. [தர்மஸ்தலாவிலிருந்து ௨௬ [ 26 ]கிலோமீட்டர் தொலைவில்]
“சௌதே” என்றால் வெள்ளாரிக்காய், “அட்கா” என்றால் வயல், அதாவது, வெள்ளாரிக்காய் போன்ற காய்கள் விளையும் பச்சை பசேல் என்று இருக்கும் வயல் வெளியில் இருக்கும் விநாயகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். கர்ப்பகிருகம், கோவில், கோபுரம் என்றில்லாமல், வெட்ட வெளியில், இந்த விநாயகர் விக்கிரகம் உள்ளது.
பக்தர்கள் கனவில் வந்து ''கோயில் கட்டுங்கள்'' என்று ஆணையிட்டசெய்திகளைக் கேட்டுள்ளோம்; பக்தர்கள் பலமுறை கோவில் கட்டத் தீர்மானித்தபோது, அவர்கள் கனவில் தோன்றி விநாயகர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இக்குறையைப் போக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியன்று மலர்களால் கோயில் கட்டி அழகு பார்க்கின்றனர் பக்தர்கள்.
எப்பொழுதுமே திறந்திருக்கும் இவ்விநாயகரை பக்தர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து தரிசிக்கலாம்.
வெள்ளரிக்காயே விநாயகருக்குப் படைக்கப் படுகிறது.
''பஞ்சகஜ்ஜயா சேவை ''என்னும் அவுல் ,வெல்லப்பாகு,தேங்காய் துருவல்,தேன்,வாழைப்பழம் ஆகியனக் கலந்த நைவேத்தியம் இங்கு வெகு பிரசித்தம்.
பக்தர்கள், அவரவர் மன நிலைகளுக்கு தக்க கோரிக்கைகளை வைக்கின்றனர் .திருமணம்,பிள்ளைப்பேறு,கல்வி, நோய்களில் இருந்து விடுபடல் போன்றவை.௪௮ [ 48 ]நாள்களுக்குள் நிறைவேறிவிடும் என்பது அதிசயமான உண்மை.அதற்கு சாட்சி, இங்கு பக்தர்கள் கட்டி உள்ள எண்ணற்ற மணிகளே ஆகும். கோயில் முழுதும் ஆயிரக்கணக்கான மணிகள் !
மோட்சத்தை அளிக்கக் கூடிய ''அதர்வ சிக்ஸா மந்திர ''யாகம் தினந்தொறும் நடைபெறுகிறது.
திறந்த மனதுடையவர்களையும் திறந்த இதயம் உடையவர்களையும் இந்த வெட்டவெளி மகா கணபதி காப்பார் என்பது உறுதி.
இங்கு தங்குவதற்கு இடம் இல்லை;௧௬ [16 ]கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மஸ்தலாவில் தங்கி, இங்கு வருவது சௌகரியம்.கர்நாடாகாவின் மற்றத் திருக்கோயில்கள் போலவே இங்கும் அன்னதானம் நடைபெறுகிறது.
புகைப்படங்கள்==
முதற்கண் ,விநாயகப் பெருமானின் வலப்பக்கத்தில் வீரபத்திரரும் இடப்பக்கத்தில் திருமாலும் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஒரே கல்லில் இது போன்ற மூர்த்தம் வேறெங்கும் காண முடியாது;வெகு அபூர்வ தரிசனம்!!!
மற்ற புகைப்படங்கள்.
இறுதியாக செல்லும் வழி.
No comments:
Post a Comment