ஹரிதாளிகா விரதம்
01.09.20195
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.
பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது.
திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள் இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன் அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய் நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து ""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)
என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும்.பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்..இவ்வாறு செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..
ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன் பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .
ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப் பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.
பலன்கள் : நோய்கள் தீரும். ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர். உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்
ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.
அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.
அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்
.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில்.
ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி
இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.
ஸெளபாக்கிய கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ த்ருதீயை திதி ; இதை செய்வதனால் படிப்புக்குகந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும்.
சித்ரா பெளர்ணமி, ஸம்பத் கெளரி வ்ரதம்.
வைசாக மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி. வார்த்தா கெளரி வ்ரதம்.
இதை செய்வதால் தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.
புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும்
.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.
கதளீ கெளரீ வ்ரதம். ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி
வாழை மரத்தடியில்/ வாழை இலை மீது அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையில் 108 வாழை பழங்கள் நிவேத்யம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால் ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கி திருமணம் , குழந்தை செல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.
சமீ கெளரி வ்ரதம்:-ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி திதி: வன்னி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். அல்லது வன்னி மரத்து கிளைகளை கொண்டுவந்து அதன் நடுவில் அம்மனை வைத்து கெளரி பூஜை செய்யவும்
.வன்னி மர இலைகளால் அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்யவும். கல்வியில் நாட்டம், தேர்வில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி ஞாபக சக்தி கிட்டும்.
.:-
ஸ்வர்ண கெளரீ வ்ரதம்:-ஷ்ராவண மாத சுக்ல பக்ஷ த்ருதியை திதி
தங்க நகைகளில் அம்மனை ஆவாஹணம் செய்து தங்க நகைகளால் விசேஷ அலங்காரம் செய்து பூஜை செய்யவும்.
இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் சக்தி வசதி, அதிர்ஷ்டம் கிடைக்கும். தங்க ஆபரணங்கள் போட்டுகொள்ளும் யோகமும் கிட்டும்.
ஹரிதாளிகா கெளரி வ்ரதம்.(). ஹரிதாளம் என்பது ஒரு வாஸனை பொருள். இதை தமிழில் அரிதாரம் என்பார்கள். நிறைய வாஸனை பொருட்களால் அம்மனை அலங்கரித்து , பூஜை செய்பவரும் வாஸனை த்ரவ்யங்களை
பூசிக்கொண்டு வாஸனையுள்ள மலர்கள் இருக்கும் செடிக்கடியில் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் கிடைக்கிறது. நாம் எதிர்பாராமல் நமக்கு நேரும் அனைத்து விபத்துகளிலிருந்தும் அம்மன் அருளால் விடுபட்டு விடலாம்.
அனந்த கெளரீ வ்ரதம்:-பாத்ரபத மாத சுக்ல பக்ஷ சதுர்தசி திதி:-
பாம்புகளின் தலைவர்களில் ஒருவனுக்கு அனந்தன் என்று பெயர். பாம்பு புற்று அருகில் அல்லது பாம்பு விக்கிரஹம் அல்லது பாம்பு படம்அருகில் அம்மனை வைத்து பூஜை செய்யலாம்.
இதனால் முடிவற்ற குறைவற்ற செல்வம் நிம்மதியும் கிட்டும். ராஹு கேதுக்களால் ஏற்படும் ஸர்ப்ப தோஷம் விலகும்.
பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ அமாவாசை திதி. மாஷா கெளரி வ்ரதம்.. மாஷம் என்றால் உளுந்து. . உளுத்தம் பருப்பு உபயோகித்து செய்யும் எல்லா பொருட்களும் நிவேத்யம் செய்யலாம்.. இதனால் பித்ரு சாபம் பித்ரு தோஷங்கள் நீங்கும்.வம்ச வ்ருத்தியாகும்.
பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி. ப்ரஹதி கெளரி வ்ரதம். ப்ருஹதி என்றால் கண்டங்கத்ரிக்காய். இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்யலாம்.
அல்லது கண்டங்கத்ரிக்காய் அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கவும். கத்திரிக்காய் சாதம் நிவேத்யம் செய்யவும்..இதனால் நாம் விரும்பும் அளவை விட மிக பெரிய அளவில் நாம் எதிர் பாராத நேரத்தில் நன்மைகள் வருகிறது.
ஆஸ்வயுஜ மாத சுக்ல பக்ஷ தஸமி திதி;.தசரத லலித கெளரி வ்ரதம். லலிதா என்றால் அழகானவள் என அர்த்தம். தேர் போல் கோலம் போட்டு
அதன் மேல் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும்.இதனால் கார், ஸ்கூட்டர், சைக்கில் போன்ற வாஹனங்கள் கிடைக்கும். வாஹன பிரயாணமும் ஆபத்து இல்லாமல் அமையும்.
ஆஸ்வயுஜ மாத க்ருஷ்ண பக்ஷ த்விதீயை திதி சந்திரோதய கெளரி வ்ரதம்:-சந்திரன் உதயமான பிறகு சந்திரன் கிரணங்கள் விழும் இடத்தில்அம்மனை பூஜிக்கவும்.
இதனால் மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கும். மன நிலை பாதிக்கபட்டவற்கு ஆரோக்யம் கிட்டும். விரைவில் தீர்மானம் எடுக்கமுடியும்.
ஆஸ்வயுஜ க்ரிஷ்ண பக்ஷ அமாவாசை திதி.(தீபாவளி).. கேதார கெளரி வ்ரதம். கேதாரம் என்றால் விவசாயம் செய்யும் வயல் என்று அர்த்தம்.வயலின் நடுவில்
அல்லது அப்போது விளைந்த பயிர்களின் நடுவில் அம்மனை வைத்து பூஜிக்கவும். இதனால் விவசாயம் நன்கு செழிக்கும். ஸத்தான உணவு தான்யங்கள் குறைவின்றி கிடைக்கும்.
கார்திக சுக்ல பக்ஷ த்ருதியை –த்ரீலோசன ஜீரக கெளரி வ்ரதம். அம்மனுக்கும் மூன்று கண்கள் உண்டு. அம்மனை மூன்று கண்களுடன்
படம் வரைந்து அல்லது கோலம் போட்டு பூஜிக்க வேண்டும். ஜீரக பொடி சாதம் நிவேத்யம். ஜீரகம் கரைக்கப்பட்ட வெந்நீர் நிவேத்யம். இதனால் நீண்ட பார்வை கிட்டும். கண்கள் நோய் அகலும்.
கார்த்திக மாத சுக்ல பக்ஷ பெளர்ணமி திதி கார்தீக கெளரீ வ்ருதம்;
முருகனுடன் சேர்த்து அம்மனை பூஜிக்கவும். முருகனுக்கு தேனும், தினை மாவும் நிவேத்யம். இதனால் சொந்த வீடும் பூமியும் கிடைக்கிறது. நிலம், வீடு ஸம்பந்தமான ப்ரச்னைகள் தீரும். ரத்த ஸம்பந்தமான நோய்கள் தீரும்.
மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை. திந்திரிணீ கெளரி வ்ருதம்.
திந்திரிணீ என்றால் புளி. புளிய மரத்தினடியில் பூஜை செய்யலாம்.புளிப்பு பொருட்கள், புளியஞ்சாதம் நிவேத்யம். இதனால் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கிடைக்கிறது.
மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ சதுர்தி திதி;- பத.ரீ கெளரி வ்ருதம். இலந்தை மரத்தினடியில் அம்மனை பூஜிக்கவும்..இலந்தை பழம் நிறய நிவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கவும்.
இதனால் சிறந்த ஞானம் கிட்டும்.வாழ்க்கை இறுதியில் ஆத்ம தரிசனம் கிட்டும். உபநிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.
புஷ்ய மாத க்ருஷ்ண பக்ஷ தசமி திதி. த்ரைலோக்ய கெளரி வ்ருதம்.
த்ரைலோக்ய கெளரி வ்ருதம். மூன்று உலகங்களுக்கு அரசியாக அம்மனை பாவித்து வழி பட வேண்டும்.இத்னால் நாம் விரும்பும் உயர் பதவி கிடைக்கும்.உயர்ந்த அரசு வேலை கிடைக்கிறது.