Friday, March 1, 2024

சம்க்ஷேப தர்மசாஸ்திரத்தை

 *கர்மாக்கள் செய்ய சில பொது விதிகள்*


1.குறிப்பிட்ட காலத்தில் கர்மா செய்ய முடியாமல் போனால் கௌண காலத்தில்
செய்ய வேண்டும்.அதாவது கர்மா செய்யும் காலத்திற்கு பின்வரும் காலத்திற்கு
கௌண காலம் என்று பெயர்.

2.அந்த கௌண காலத்தில் கர்மா செய்யும் பொழுது முக்கிய காலத்தில் செய்ய
முடியாததற்கு ப்ராயச்சித்தம் செய்து,பிறகே கர்மா செய்யவேண்டும்.

3.பகலில் செய்ய வேண்டிய கர்மாக்கள் செய்ய முடியாமல் போனால் ராத்திரியின்
முன் யாமத்தில்(9மணிக்குள்)செய்யலாம்.ஆனால் சூரிய நமஸ்காரம்,ப்ரம்ம
யக்ஞம் இந்த இரண்டையும் தவிர மற்ற கர்மாக்களை செய்யலாம்.

4.முக்கிய காலத்தில் செய்ய வேண்டிய கர்மாவுக்கு சொல்லப்பட்ட பொருட்கள்
கிடைக்கவில்லையானால் கௌண காலத்தில் கிடைக்கும் என்றால் காலம்தான்
முக்கியம்.கிடைத்த பொருளை வைத்துக்கொண்டு  குறிப்பிட்ட காலத்திலேயே கர்மா
செய்யவேண்டும.

5.சில கர்மாக்கள் தன்னால் செய்ய முடியாவிட்டால்
மகன்,மனைவி,தந்தை,சகோதரன்,நண்பன்,புரோகிதர் இவர்களைக்கொண்டு செய்யச்
சொல்லலாம்.
6.எதுவும் பொதுவாக வலது கையால் செய்ய வேண்டும்
7.யக்ஞோபவீதம் இல்லாமல் கர்மாக்களை செய்யக்கூடாது(For brahmins only)
8.பொதுவாக எந்த கர்மாக்களையும்  உட்கார்ந்துகொண்டு செய்ய வேண்டும்.விசேஷ
விதி இருந்தால் நின்றுகொண்டு செய்யலாம்.

9.எந்த கர்மாக்களும் கிழக்கு அல்லது வடக்கு முகமாக செய்யவேண்டும்.
10.எந்த கர்மாவும் ஆசமனம்,சங்கல்பம் செய்து ஆரம்பிக்கவேண்டும்.

11.கர்மாவில் செய்ய வேண்டிய முக்கிய கார்யம் மறந்துபோனால் மறுபடியும்
செய்ய வேண்டும்.

12.எந்த கர்மாவும் அவர் அவர் சூத்ர ப்ரகாரம் செய்யவேண்டும்.அதாவது
ஆபஸ்தம்பம்,போதாயனம்......இப்படி

13.முக்கிய பொருள் கிடைக்காவிட்டால் அதற்கு சமமான பொருளை வைத்து கர்மாவை
செய்யலாம்.

14.தங்கள் சூத்திரத்தில் சொல்லாததை வேறு சூத்திரத்திலிருந்து ப்ரமாணமாக
எடுத்து செய்யலாம்.ஆனால் தங்கள் சூத்திரம் கூடாது என்று மறுப்பதை
செய்யக்கூடாது.

15.தங்கள் சூத்திரத்தில் விதிகள் கடுமையாக சொல்லியிருந்தாலோ,கடைபிடிக்க
கஷ்டமாக இருந்தாலோ போதாயன சூத்திரத்தை அனுஷ்டிக்கலாம்.

16.சொல்லப்பட்ட காலத்திற்கு முன்பே எந்த கர்மாவையும்
செய்யக்கூடாது.அப்படி செய்தால்  பலன் இல்லை.

17.கழுத்தில் வஸ்திரம் சுற்றிக்கொண்டு கர்மாக்கள் செய்யக்கூடாது.

18.எந்த கர்மாவும் செய்யும்போது இரண்டு முழங்காலுக்குள் செய்யவேண்டும.
19.கர்மா செய்யும் போது அவரவர் குல வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக்கொண்டு
செய்ய வேண்டும்(அபர கார்யத்திற்கு இது விதிவிலக்கு)
20.எந்த கார்யங்களுக்கும் க்ருஷ்ண ஸ்மரணம் ப்ராயஸ்சித்தமாகும்.
 [அடுத்த பாகத்தில்-40 சம்ஸ்காரங்கள்]

No comments:

Post a Comment