திருமழபாடி இந்த திருத்தலம் திருவையாற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் வடமேற்கில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம், திருச்சியிலிருந்தும் புள்ளம்பாடி வழியாகவும் செல்லலாம்.
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வைத்தியநாத சுவாமி, அம்மனின் பெயர் சுந்தராம்பிகை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருடா என்னும் மிருகம் பிரம்ம உலகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பூசித்துகொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்து செல்லவந்த பிரம்மாவால் முயன்று அவரால் முடியாமல் இது என்ன வயிரதூணோ என்று கூறியதால் இறைவன் வயிரதூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார்.
திருஞானசம்பந்தரோ
வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே
என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று பாடி அருள் செய்திருக்கின்றார்.
இந்த இறைவனை மூவரில் இருவர் தேடி வந்து பாடினார்கள் ஆனால் இறைவனோ ஒருமுறை சுந்தரர் மற்ற அருகில் உள்ள தளங்களை தரிசித்துவிட்டு திருவாலம்பொழிலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் கனவில் தோன்றி "மழபாடி வர மறந்தனையோ? என்று வினவினார்" இதனை கேட்டு விழித்த சுந்தரர்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அண்ணே உனையல்லால் இனியாரை நினைக்கேனே
என்று பாடி பின்னர் மழபாடி சென்று தரிசனம் செய்தார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும் மேலும் ஒரு சிலர் இங்குள்ள சிவா பெருமானின் மழு நர்த்தனம் செய்ததால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குலத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே மேலும் மேலும் மேலும் சில இருக்கிறது.
இந்த கோவிலின் விமானம் முதலாம் ராச ராச சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள சிறப்பு விசேஷம் என்னவெனில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு திருமணம் வெகு விமரிசையாக நடக்கும், இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இத்தனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்
"நந்தி திருமணம் பார்த்தல் முந்தி திருமணம்" என்பது வாக்கு ...இங்கு வந்து நந்தி திருமணத்தை பார்த்து சென்றவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்தில் திருமணம் நடந்து வருகிறதை கண்கூடாக பார்த்து வருகின்றோம் ...
திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார்.
அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.
No comments:
Post a Comment