Tuesday, March 5, 2024

கணேசாயினி வழிபாடு


கணேசாயினி வழிபாடு

ஸ்ரீ விநாயகர், பெண் உருவம் கொண்டு தோற்றமளிப்பதை கணேசாயினி என்பர்

மதுரை, நாகர்கோயில், சுசீந்திரம், திருநெல்வேலி அருகே வாசுதேவநல்லூர் போன்ற இடங்களில் ஸ்ரீ கணேசாயினி திரு உருவத்தை தரிசித்திடலாம்.

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தரும் கணேசருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது

அதேபோல்  போர்க்கோல கணேசாயினி திருக்கோலம் வாசுதேவ நல்லூர் தேரில் உள்ளது.

பலருக்கு எத்தனையோ திறமைகள் இருப்பினும் தொழிலிலோ வாழ்க்கையிலோ அலுவலகத்திலோ அவற்றை வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புகள் இல்லாமலிருக்கும் அல்லது பொறாமையால் பலர் அதனை ஒதுக்கிவிடுதலும் உண்டு. 

மேலும் எத்தனையோ பேருக்கு குறிப்பாக ஓவியர்களுக்கு தம்முடைய திறமையால் தான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டத்தால் அன்றும் இன்றும் விரக்தியான வாழ்க்கையைத்தானே பெற்றிருக்கிறோம் என்று மனம் குமுறுவர். 

இத்தகையோர் நன்முறையில் தங்கள் திறமைக்குரிய வருமானம் கௌரவம் பதவி உயர்வு மற்றும் பலவிதமான வசதிகளை நியாயமான முறையில் பெற்றிட உத்தராயான புண்ய காலத்தில் துவாதசி திதிதோறும் ஸ்ரீ கணேசாயினி மூர்த்திக்கு பச்சைநிற வஸ்திரங்களைச் சார்த்தி வருதல் வேண்டும்.

No comments:

Post a Comment