Thursday, April 13, 2017

குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி


thank : https://bakthi-yugam.blogspot.com/2012/03/blog-post_15.html

குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நகரின் அருகிலே சுமார் 12  km தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் குருமலை.(GURUMALAI). ஆனால் நடைமுறை வழக்கில் மக்கள் இதை Kurumalai என உச்சரிக்கின்றனர்.கோவில்பட்டியில் இருந்து நகர பேருந்துகள் இந்த கிராமத்திற்க்குச் செல்கின்றன.

 திரு."சித்தர்". மணி , சித்த-மார்க்க ஆராய்ச்சியாளர் திரு."வசியன்" ஜோதி கிருஷ்ணா, மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரோடு என்னையும் சேர்த்து நாங்கள் ஐந்து நபர்கள்  கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டோம்.

வறண்ட பாதைகளின் வழியாக சுமார் 1 /2  மணி நேரம் பேருந்தில் பிரயாணப் பட்டால் இந்த கிராமத்தினை அடையலாம். ஒன்றிரண்டு டீ கடைகள் உள்ளன. பேருந்து இறக்கிவிடும் இடத்தில் இருந்து நடக்கத் துவங்கினால் , கிட்டத்தட்ட 4 km தூரம் நடக்க வேண்டும்.நாங்கள் சென்றது  நல்ல வெயில் கால முற்பகல் நேரம்.  எங்கள் ஐவர் குழு , பேசியபடி மெதுவாக   நடக்கத்துவங்கியது. வழி முழுவதும் நல்ல செம்மண் சரள் பாதை  , இருபுறமும் குறுங்காடு.

சுமார் 2 km சென்றதும் நாம் ஒரு அய்யனார் கோவிலை அடையலாம். அதன்  அருகிலேயே ஒரு ஊற்று உள்ளது. தெள்ளிய நீர் வருடம் முழுவதும் அதில் ஊறி வந்துக் கொண்டே இருக்கிறது. குடிப்பதற்கு அருமையாக உள்ளது. அந்த இடத்தில் இருந்து , நாம் "குரு மலை" மீது ஏறத் துவங்கினோம்.

    ( வற்றாத நீர் ஊற்று )

சரள் பாறைகள் நிறைந்த பாதை. கிட்டத்தட்ட உச்சி வெயிலில் வியர்வை சொட்ட , மேலே ஏறத் துவங்கினோம்.இது ஒரு சிறு குன்று  போல அமைந்துள்ள , சிறு காடு. ஒரு காலத்தில் இங்கே  மிகப் பெரிய காடுகளும், கொடிய விலங்குகளும், இருந்ததாகவும் , தற்போது அவை அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

காற்றின் ஒலி ஒரு விதமான  லயத்தோடு கேட்கிறது. அது அந்த சூழலின் அமானுஷ்ய தன்மையினை அதிகமாக்குகிறது.பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் , யாரோ எடுத்து பொருத்தி வைத்தது போல இருப்பது, காண வியப்பான ஒன்றாகும். அவை காற்றினால்  அரிக்கப்பட்டு, காணப்படுகின்றன. 


( நந்தி போன்ற தோற்றம் உடைய பாறை )



(பாறைகளின் வழியாக மலை அடிவாரத்தின் தோற்றம் )




மலையின் உச்சியினை அடைந்த பின் அங்கே , ஒரு சிறு குகை ஒன்றினை காண்கிறோம். நிசப்தமான இடம். நிறைய அபூர்வமான மூலிகைகள் இருக்கின்றன. ஆனால் பசுமையான காடு இல்லை.

குகையின் முகப்பிலே ஒரு சிறு லிங்க வடிவம் காணப் படுகிறது. அதன் முன்னால்  காணப்படும்    சிறு பள்ளம் "யாக குண்டமாக" விசேஷ நாட்களில் பயன்படுத்தப் படுகிறது.
( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும்)


 குகை வாசலில் ஒரு மரம் வளைந்து நிழல் கொடுத்தபடி உள்ளது. அதை "கன எருமை மரம் " எனவும் , லிங்கத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குகையினுள் ஒரு நீண்ட பாதை உள்ளதாகவும் , ஆனால் அதனுள் செல்ல இயலாது எனவும் நண்பர் "வசியன்" ஜோதி கிருஷ்ணா  கூறினார்.               (யாக குண்டம் )--->                                                                            
ஆங்காங்கே நிறைய அகல் விளக்குகள் காணப்படுகின்றன.உச்சி பாறை ஒன்றினில் திருகார்த்திகை சமயத்தில் பயன்படுத்திய மிகப் பெரிய மண் விளக்கு காணப்படுகிறது. மாத பௌர்ணமி நாட்களில் இந்த மலையில் மக்கள் கூடுவதாகக் கூறுகிறார்கள்.

தவசி தம்பிரான் சுவாமிகள் முருக பெருமானின் பூரண அருள் பெற்றவராகவும் , ரசவாததிலே தேர்ச்சிபெற்றவராகவும் திகழ்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அவரது ஜீவ சமாதி  எட்டயபுரம் அருகே வேறு ஊரிலும் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்நாட்களில் இந்த காடு எட்டயபுரம் சமஸ்தானதிற்குச் சொந்தமானதாக இருந்ததாகவும், எட்டயபுர அரசர்களுக்கு தம்பிரான் சுவாமிகள் தனது ரசவாதத்தின் மூலம் தங்கம் செய்துக் கொடுத்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறதாம்.


 திரு." சித்தர் " மணி (இடது) மற்றும் திரு. "வசியன்" ஜோதி கிருஷ்ணா (வலது)


குகையின் முன்னால் ஒரு கற்றாழை மரத்தின் நிழலிலே நாங்கள் அமர்ந்து , சித்தர்கள் பாடல்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். "சித்தர்கள் கோவை " எனும் புத்தகத்திலே இந்த "குருமலை" குறித்து, சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதாக ஜோதி கிருஷ்ணா கூறினார்.இந்த மலை முருகபெருமான் தவம் செய்து, சூரனை அழிக்க இங்கிருந்து புறப்பட்டு திருசெந்தூர் சென்றதாகவும் தகவல் உள்ளதாகவும்  அவர் கூறினார்.

நாங்கள் சித்தர்கள் குறித்தும் முருகப் பெருமானைக் குறித்தும் பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே ஒரு  மயில்   அவ்விடம்  வந்து , குகை வாசல் வரை சென்று பின் மலை சரிவிலே சென்று விட்டது. மீண்டும்  ஒரு முறை வந்து இதேமாதிரியாக செய்தது. முருகனை குறித்து பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே மயில் வந்தது எங்களுக்கு  ஆச்சரியமாக   இருந்ததது.( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும் )
எங்கள் ஆச்சரியம் தீரும் முன்னே , மேலும் ஒரு ஆச்சரியம். நாங்கள் பேசிக்கொண்டு இருந்த நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும் , அந்த உச்சி வெயிலிலே அங்கே ஒரு சாது வந்தார். குருந்தாடியோடும் , பச்சை உடையிலும் அவர் காணப்பட்டார். அவர் எங்கே இருந்து வருகிறார் எனக் கேட்டதற்கு "கைலாயம்" எனக் கூறி விட்டு , குகைக்குள் சில அடிகள் இறங்கி வழிபடத் துவங்கிவிட்டார்.  (இந்த காட்சியும் அடுத்து வழங்கப்படும்).

நாங்களும் அவரோடு சேர்ந்து , சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, மெல்ல இறங்கினோம். நேரம் இன்மையால் ,  1 k.m  தூரத்தில் உள்ள முருகனின் ஆலயத்திற்க்குச் செல்ல இயலவில்லை.

மொத்தத்தில் ஒரு அருமையான சத்சங்கம் குரு மலையிலே நடைபெற்றது.

jeeva samadhi in and around ooty

jeeva samadhi in and around ooty

நமது நாட்டில் சிறியதாக, பெரியதாக ஆயிர கணக்கில் மலைகள் இருக்கிறது. அந்த ஆயிர கணக்கான மலைகளில் 8 மலைகளை மிகவும் புனிதமான மலைகளாக பிரும்மாண்ட புராணம் முதலான பழமையான புராணங்கள் சொல்கின்றன.
அந்த 8 புனித மலைகள்.
No automatic alt text available.
1] இமயம்
2] மந்தரம்
3] கயிலாயம்
4] விந்தியம்
5] நிடதம்
6]ஏமகூடம்
7]கந்தமாதனம்
8] நீலம்
நீலம் என்பது நீலகிரி மலை. அதாவது சென்னையின் பிரபலமான பிகினிக் ஸ்பாட்டான ஊட்டி.
இந்த ஊட்டியில் பல புராதன கோவில்கள் இருக்கிறது. சக்தி வாய்ந்த பல சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கிறது. ஊட்டியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்
1] வேலி வியூ என்னும் பகுதி. அங்கே சப்த ரிஷிகள் முதலான பல சித்தர்கள் இன்றும் தினமும் உலாவி கொண்டிருக்கிறார்கள்.
ஊட்டி மெயின் பஸ் ஸ்டான்ட் எதிரே இருக்கும் ஐயாயிரம் ஆண்டுகளை கடந்த
2] பாறை முனீஸ்வரன் கோவில், ஊட்டி காந்தலில் அமைந்திருக்கும் சுவாமி
3] ஓம் பிரகாஷ் சுவாமிகளின் ஜீவசமாதி. மற்றும் அதே போல்
4] 10 மகான்களின் ஜீவசமாதிகள், அதிஷ்டானங்கள், அதே காந்தலில் அமைந்திருக்கும்
5]துட்கா பாபா ஜீவசமாதி, அம்மன் சுயம்புவாக வெளிப்பட்ட
6] மாரியம்மன் கோவில்,
வேலி வியூ பகுதியில் மலை மீது அமைந்திருக்கும் மிக பழமையான ஹநுமாரின்
7] குகை கோவில். மேலும்.
தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் கேலண்டரில் இருக்க மாட்டாரா?
கேலண்டரிலும் இருப்பான்
30 ஆண்டுகளுக்கு முன் ஹனுமான் ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ ஸ்டுடியோ அருகே ஒரு கேலண்டரில் இருந்து வெளிப்பட்டார். அந்த
8] ஹனுமான் கோவில். மற்றும் ஊட்டி எடப்பள்ளியில் அமைந்திருக்கும்
9] சதானந்தர் ஜீவசமாதி
10] ராஜராஜேஸ்வரி சுயம்புவாக வெளிப்பட்ட கோவில்
இதுபோல் இன்னும் கூட ஒரு 5, 6 கோவில்கள், சித்தர் பீடங்கள் ஊட்டியில் இருக்கிறது.
இந்த மேமாத நீலகிரி யாத்திரைக்கு முதலில் புக் செய்யும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி.
தொடர்புக்கு
ஹரிகேசா டிராவல்ஸ்- டோர் நம்பர் 22/32, தில்லை கங்கா நகர் 23 வது தெரு, நங்கநல்லூர் தேவி கருமாரி அம்மன் கோவில் அருகில். செல்- 9445671614, 9962224441

Saturday, April 8, 2017

Dashboard-il Dheivam, Car-kul Kumbaabhishegam

Thank my bro Sashikumar

Note: If you are keeping any image(s) / statue(s) of Hindu deity in your car and will somehow say : "that's my car, and its my wish", I suggest you don't read any further. But if you care about the Hinduism and its sacred practices, enjoy the article and spread the word. This is a personal opinion, accept or reject at your own will. Thanks.


Many of our Hindu friends and family members are fond of keeping various images / statues of deities in their personal vehicles. Yeah, nothing really wrong about it, as many will say it gives them sense of security, confidence and feel closer to God. However, do we take care of the idols placed in vehicles as what we do in our prayer rooms or temples? Do we keep the place clean and free of any items/acts that can be deemed unholy? Think ...

What are the things we don't do / prohibited in prayer room / temples?

  • we don't wear shoes inside
  • we don't dress scantily
  • we don't go inside if we are dirty, or have not washed our feet / hands
  • ladies don't access if they are menstruating
  • we don't consume any food items, particularly non-vegetarian food
  • we don't drink any drinks, particularly alcoholic beverages
  • we don't keep any items like shoes, dirty clothes etc. inside
  • we don't speak loudly, chat away or make jokes
  • we don't play / listen to songs other than religious ones
  • we don't use vulgar / swear words
  • we don't smoke or allow anyone else to smoke
  • we don't use mobile phones

When we have Hindu deity images / statues in our vehicle, can we ensure all of the above is not done in our vehicles? Its impossible for us to assure that none of the above is violated by the owner / driver or the passengers.  Can we keep our vehicle as clean, holy or sacred as our prayer room or temple?

In addition to these, we also usually perform proper pooja and offerings for deity images / idols at home or temple. This cannot be properly done in vehicles. Some people go further by 'erecting' mini temples / shrines in their car, most are done with elaborate decorations and lighting, which can rival your local temple. We frown upon people who simply build shrines everywhere, not taking care of the sacred practices, but we close an eye when its done in private vehicles. Why?


As I've stated in the beginning of this article, some of the reader may say ... "its not your car!", but I want to say "its our religion, and I care about it". Whatever the responses are, I don't condone the act of keeping any religious images / idols at a place where its not suitable, without proper care. What say you?



In case someone asks : No, I don't have any such items in my car.


Monday, April 3, 2017

தோஷ பரிகாரம்

thank: https://kaalapirakasigaijothidam.blogspot.com/2015/04/blog-post_3.html



தோஷ பரிகாரம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்,

ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. மனநிம்மதியின்மை, உடல் ஆரோக்கியக் குறைவு,பொருளாதாரம் ,சமுகம்,குடும்பம், வழக்கு, வியாபாரம் போன்ற பலதரப்பட்டவற்றில் இருந்து பலவிதமான கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.இவைகள் அனைத்தும்வாழ்க்கையின் போராட்டத்தின் ஒரு பகுதியே,அனால்,ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக்  காட்டிலும்,ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன, இதற்கு மனிதன் தன்பணவலிமை,மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து,அந்தப்பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம் .அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான்.அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது .

ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள் .அதாவது ,ஒரு குறிப்பிட்டஹோமம்,கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவதுஒரு சாந்தி ஒருவர் செய்து ,அதனால் ஒருவருக்கு பிரச்னைதீர்ந்து,நன்மை ஏற்படுகிறது.மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்னை வரும் சமயத்தில் அதே சாந்தி,வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல அபாலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள்.இது தவறு ,இது போன்று செய்யக்கூடாது.ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும்.ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால்,அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை

கேள்விப்பட்டிருக்கிறோம்.தலைவலி ஜூரம் ஆகியவை பலவிதமான வெவ்வேறு உடல் கோளாறுகளின் அறிகுறிகளே .அது போல ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது ,மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும்,இதற்கு காரணங்கள் வேறுபடலாம் பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம்.பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும்,ஆனால்,அதற்கான காரணமான கிரஹங்கள் வேவ்வேறுக் இருக்கும்.கிரஹத்தின் தோஷத்தினாலும் ,அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன.ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை,ஹோமம் மற்றும் அதன்குணம் ,சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .



ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது ,அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது ,என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி ,அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும் ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்துசெய்யவேண்டும்.மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையோட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும் 

Saturday, April 1, 2017

சகுனம்

சகுனம்
சகுனம்,ஜோதிட சாஷ்திரத்தின் ஒரு அங்கமே.இது ஒரு உண்மையான சாஸ்திரம் .நமது நாட்டில் அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் சகுனம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது .நாம் வெளியே புறப்படும்போது சகுனம பார்த்து புறப்படுகிறோம்.
பலர் ,குடும்பங்களில் திருமணம் நிச்சயம் செய்யும்போது அந்தஸ்து
(சமூக,பொருளாதார,குடும்பம்).ஜாதகப்பொருத்தம் , படிப்பு ...போன்ற பலவற்றை பார்த்துத்தான் நிச்சயம் செய்கிறார்கள் .இதில் ஏதவது ஒரு சில குறைகள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் வேறு சில காரணங்களினாலும்குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்தத் குழப்பங்களைசகுனம்தான் முடிவு செய்கிறது.சில திருமணங்கள் சகுனம் சரியில்லாமல் நின்று போய்விடுகின்றன.இப்படி சகுனம் ஒருவருடைய வாழ்கைகையை தீர்மானிக்கிறது இது போல் பல முடிவுகள் சகுனத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.


சகுனம் உண்மைதான்,சகுனம் ஜோதிட சாஸ்திரத்தின்  ஒரு அங்கம்.ஜோதிட சாஸ்திரம்
1.சித்தாந்த ஸ்கந்தம் ]
2.ஹோரா ஸ்கந்தம்
3.ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று மூன்று பெரிய கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.சகுன சாஸ்திரம் ஸம்ஹிதா ஸகந்தத்தில் வருகிறது.
‘சகுனம் ‘என்பது ‘சகுனி’ என்ற ஒருவகை பறவை இனத்தைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது.(மகாபாரத சகுனிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ) பறவைகளின் அசைவு சப்தம் போன்றவற்றால் நமக்கு முன்கூட்டியே சூசகமாக புலப்படும் செய்திகளுக்கு சகுனம் என்று பெயர் வந்தது .,சகுனம் நிமித்தத்திலிருந்து வேறுபடும்.சகுனம்கள் பறவைகளின் அசைவுகளால் ஏற்படுவன.
நிமித்தம் பாறவை கலித் தவிர(பூனை,நாய் போன்றவை)மிருகங்கள் ,மனிதர்கள் போன்ற மற்ற இனங்களில் சலங்களிருந்து நமக்கு புலப்படுவது ஆகும்.

சகுனம்-நிமித்தம் போன்றவை புராணம் ,தமிழ் இலக்கியங்ககள் /நாடகங்கள் ஆங்கில நாடகங்கள் இவைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.உதாரணமாக ராமாயணத்தில் அசோகவனத்தில் சீதாபிராட்டிக்கு இடதுகண் துடித்தது அது நல்ல சகுனம் (நிமித்தம்)-உடனே அனுமன் சந்தித்தான்.அதே போல் சிலப்பதிகாரத்தில் மாதவிக்கு வலதுகண் துடித்தது-கெட்ட சகுனம் (நிமித்தம்).கோவலன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .மேலும் சிலப்பதிகாரத்தில் கோவலன் சிலம்பை எடுத்துக்கொண்டு விற்க புறப்படும்போது ,சகுனம் சரியில்லை என்று கண்ணகிக்கு பல அபசகுனங்கள் நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதிலிருந்து இது தொன்றுதொட்டு நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரத்தில் என்பது புலப்படுகிறது.

மகரிஷிகள் ,” உலகத்திலுள்ள அனைத்திற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது .சம்பந்தம் இல்லாமல் எதுவும் இல்லை.நடைபெறுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் நேராகவோ ,மறைமுகமாகவோ சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.நடப்பவை எல்லாம் ஒரு கணக்கில் அடிப்படையில்தான் 


நடைபெற்றுவருகிறது.ஆகவே ஒன்றின் மூலம் மற்ற எல்லாவற்றையும் அறிய முடியும்.இதற்கு அதன் கணக்கு தெரியவேண்டும்.அதில் ஒன்றுதான் சகுனம்” என்று கூறுகின்றார்கள்.சகுனத்தில் ஏற்படுகின்ற செயலுக்கும் நாம் செய்யப்போகிற வேலைக்கும் ஏதோசம்பந்தம் இருப்பதால்தான் சகுன சாஸ்திரம் நமக்கு முன் கூட்டியே ,நாம் செய்யப்போகிற செயலுக்கான பலனை அறிவித்து விடுகிறது என்றும் முனிவர்கள் கருதுகிறார்கள்.

சகுனம் உண்மை ,அனால் அதன் பலனை அறிந்து நமக்கு விளக்கிக் கூறுபவர்கள் குறைவு .ஆகவே சில சகுனங்களின் பலனை புரிந்து கொள்ள முடியாமல் தவறாகஎண்ணி விடுகிறோம்.


கேரள மாநிலத்தில் ஜோதிடர்கள் பிரச்சனை காலங்களின்போது இத சகுன/நிமித்த சாஷ்திரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.இந்த சகுன சாஸ்திரம் காட்டில் வேட்டையாட செல்பவர்களுக்கும் ,காட்டுவாசிகள் /மலைவாழ் ஜனங்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் உபயோகமாகிறது .இன்னும் நாட்டில் விலைவாசி நிலவரம் ,விவசாயம்,பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் பலவற்றையும் முன்கூட்டியே இந்த சாஸ்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் . 


தினமலரில் இருந்து :
இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுனமும் நிமித்தமும் முக்கியமானவையாக இருந்தாலும்,   சில குறிப்பிட்ட சகுனத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு  விளக்கங்கள்:
1. வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா?
இந்த விஷயம் சற்று சுவாரசியமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும்விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோவீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டுஇரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவதுதேவைப்பட்டால் அங்கே சமைப்பது - இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறைதோட்டம் இவை இடம்பெறும்)அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்துசுற்றியுள்ள மரங்களில் அமரும் காக்கைகள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும்விருந்தினர் சாப்பிட்ட பின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும்இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டுகாக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது.
2. வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கூறுகிறார்களே இது உண்மையா?
பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால்அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைப் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவரைக் கடிக்க முற்படும். ஆனால்பூனைஎதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல்கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும்போது அப்படிப் பூனை பாய்ந்தால் நாம் பயந்து விடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
3. நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா?
அந்தக் காலத்தில்இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது. அதிலும்ஆண்வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால்கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூபொட்டுவளையல்வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக் கட்டுப்பாடு. திருமணமான தம்பதிகளோஅலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால்இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில்இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் பெண்/தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும்அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்துகொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமேஅந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லைஅவசியமும் இல்லை.
4. சாலையில் செல்லும்போது எதிரே பிணம் எடுத்துச் சென்றால் பார்க்கலாமா?

இதன் அடிப்படையும் சுவாரசியமானது. நமக்குத் தெரிந்தவர் யாரேனும் இறந்துவிட்டால்நாம் அந்த மனிதரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்துசெல்வது வழக்கம். எதிரில் அப்படி ஒரு இறுதி ஊர்வலம் வந்தால்நல்லவேளை இறந்தவர் நமக்கு வேண்டியவர் இல்லை என்று சிறு நிம்மதியும் கொள்ளலாம். ஆகஊர்வலத்தின்பின் செல்லவேண்டி வந்தால் நாம் துக்கமாகவும்எதிரிலே வந்தால் சற்று நிம்மதியுடன் இருப்பதும் இயல்பு. இந்த மனநிலையைத்தான் காலப்போக்கில்எதிரே பிணம் வந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..

சூரியனை பார்த்து நாய் குலைத்தால்..




“சகுனம் (நிமித்தம்) என்பது ஒருவரின் முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் கெட்ட கர்மாக்களை அனுசரித்து,என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிவிக்கும்”-என்று “வராஹமிஹிரா’இயற்றிய “ப்ருஹத் ஸம்ஹிதை” என்ற நூல் கூறுகிறது.மேலும் ஒருவன் தான் தனியாகப் போகும்போது தோன்றும் சகுனம்,அவனை மட்டும்தான் பாதிக்கிறது.ஒரு படை (ராணுவம்)செல்லும் போது ஏற்படும் சகுனம்.அந்த நாட்டின் அரசனையும் பாதிக்கும்.பாலர் கூட்டமாக செல்லும்போது நிகழும் சகுனத்தின் பலன்,அந்தக் கூட்டத்தில் உள்ள முக்கியமான மனிதருக்கு (வயது, அறிவு, அந்தஸ்து அடிப்படையில்) பாதிப்பு ஏற்படும்.ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் நிகழும் சகுனத்தில் அல்லது நகரத்தின் தர்ம தேவதையின் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். இவ்வாறெல்லால் அந்த நூல் கூறுகிறது .

மேலும் கூறும்போது ஸ்ரீ வராஹமிஹிரர் –நாட்டில் ஏற்பட போகின்ற அரசியல் மாற்றம், விவசாயம்,பொருளாதார வளர்ச்சி மற்றும் நிகழக்கூடிய ஆபத்துகள் போன்றவற்றை,சில பறவைகள் மற்றும் பிராணிகளின் சலனத்தையும் அவை ஏற்படுத்தும் சப்தங்களையும் வைத்து சொல்ல முடியும் என்கிறார். உதாரணமாக நாய்,பசு,யானை போன்ற பிராணிகளின் சலங்களையும் (சேஷ்டைகளையும்), அதன் மூல நாம் அறியக்கூடிய பலன்களையும் பார்ப்போம் .

கிராமங்களில் நம் பெரியோர்கள்,யாரவது எந்த பயனுமில்லாமல் அளந்து திரிபவர்களை ‘நாய்க்கு வேலை இல்லை: நிற்க நேரமில்லை’என்று கூறிக்கொண்டிருப்பார்கள்.அதாவது ‘நாய் மாதிரி எந்த பயனுமின்றி ,அலைந்து திரிகிறாய் என்று பொருள்பட கூறுவது வழக்கம். ஆனால் நாய்க்கு நிறைய வேலை இருக்கிறது. அது மனிதனால் அறிய முடியாததை முன்கூட்டியே அறிந்து, நமக்கு அதன் சேஷ்டைகள் மூலம் தெரியப்படுத்துகிறது. சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குத்தான் கஷ்டம் என்ற வசனகளையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாய் (அல்லது பால் நாய்கள்) ஒரு நகரத்தின் அல்லது கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு , சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரியனைப் பார்த்து குரைத்தால், ஆட்சியாளர்கள் மாறுவார்கள் . அரசனுக்கு அனர்த்தகம்.

ஒரு நாய் சூரியனைப் பார்த்து ,தென் கிழக்கே நின்று கொண்டு குரைத்தால்நாட்டில் திருட்டு பயம்,நெருப்பினால் அழிவும் ஏற்படும் நண்பகலில் குரைத்தால், தீ விபத்தால் பாலர் இறந்து போவார்கள்.பிற்பகலில் குரைத்தால்கொலை கொடூரமான சண்டை (ரத்தவெள்ளம் )ஏற்படும். அந்திம நேரத்தில் குரைத்தால், விவசாயிகளுக்கு ஆபத்து நேரிடும் என்று நாய்களின் செஷ்டையினால் ஏற்படும் நிமித்தங்களை கூறுகிறார்.பசுவை பற்றி கூறுகையில்,ஒரு பசு சோர்வடைந்து பரிதாப நிலையில் காட்சியளித்தால் ,அரசனுக்குத் துக்கத்தைக் கொடுக்கும்.ஒரு காரணமுமின்றி ,உலகத்திற்கு துர்பிசஷாம்  ஏற்படப் போவதை முன் கூட்டி அறிவிக்கிறது.


யானையைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீ வராஹ மிஹிரா ,யானை தந்தம் அதன் , இடது, வலது தந்தங்களின் லஷணம் ,அது உடைத்தால் இன்னின்ன பலன் என்பதையெல்லாம் கூறிய பின் ,ஒரு யானை தன நடை மாறி,நிலை தடுமாறி நடந்தாலும், திடீரென்று அதன் அசைந்து கொண்டிருக்கும் காதுகள் அசையாமல் நின்றாலும்,சோர்வடைந்து காணப்பட்டாலும் ,மூச்சுத்திணறி / மாறி பெருமூச்சுவிட்டுக் கொண்டோ,தூக்க கலக்கத்துடனும்,தாறுமாறாக சேஷ்டைகள் செய்து கொண்டும்,சரிவர உணவு அருந்தாமல் இருந்தால்,அது உலகத்திற்கு பெரிய ஆபத்தை முன்கூட்டி அறிவிப்பதாக ஆகும்.அது சந்தோஷத்துடன் காணப்பட்டு அதுவாகவே எறும்பு புற்றை இடித்து தள்ளியும்,பச்சை மரங்களையும் கிளைகளையும் ஒடித்தும் , ஆரவாரத்துடன் தன்  முகத்தை நிமிர்த்தி நடை போட்டுக்கொண்டு, தனது துதிக்கையை தன் வலது தந்தத்தை சுற்றிக்கொண்டு  காணப்பட்டால், அது தேசத்திற்கு பெரிய வெற்றியைக் குறிக்கும் .

முதலையால் ஒரு யானை நீர்நிலைக்குள் இழுத்து செல்லப்பட்டால், அரசனுக்கு அழிவையும், அதே சமயத்தில் முதலையை இழுத்துக் கொண்டு தண்ணீர்லிருந்து கரைக்கு அந்த யானை வந்து விட்டால் அரசனுக்கு சுபிஷத்தையும் கொடுக்கும்.

இதே போல் இன்னும் சில பிராணிகள் மற்றும் பறவைகள் அதன் சலங்கள் அதனால் ஏற்படும் நிமித்தங்கள். அது ஏற்படும் நேரம்,திசை, இடம் போன்றவைகளினால்அறியக்கூடிய பலன்களையும் விவரித்து கூறுகிறார் ஸ்ரீ வராஹமிஹிரா .

ஆகவே ஒவ்வொரு செயலும் ஒரு கர்மாவின் பலனாக ஏற்படுகின்றன. அதை பல வழிகளில் தெரிந்து கொள்ளமுடியும். அதில் ஒரு வழிதான் இந்த நிமித்த மற்றும் சகுன சாஸ்திரம் ஆகும்.

Friday, March 31, 2017

கவுமாரி

சப்த கன்னியர்..!

Image may contain: 1 person
🌺 தேவி பெயர்: கவுமாரி
🌺 அம்சம்: முருகப் பெருமான்
🌺 நிறம்: குங்கும நிறமுடையவள்
🌺 வாகனம்: மயில்
🌺 கோடி: சேவல் கோடி
🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
மூலவர்: பஞ்சவடீசுவரர்
அம்பிகை: கல்யாண சுந்தரி,
பெரியநாயகி

🌺 தோற்றம்:
தமிழ் கடவுள் என புராணங்களால் புகழப்படும் குமரக் கடவுளின் சக்தியே கவுமாரியாகும்.
மயில் வாகனமாக கொண்டு அதன் மீது அமர்ந்து, சேவல் கொடியாகவும் கொண்டு அஷ்ட திக்கிற்கும் அதிபதியாக அருளாட்சி புரிகிறார் அன்னை.
ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என
ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது.
பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க
மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி,  தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை திருகரங்களில் தரித்திருப்பார்
என விவரிக்கின்றன.
அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில்
அன்னைக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது.
அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல்,சேவல் என்பனவற்றினை
தரித்திருப்பார் என விவரிக்கின்றன.

🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம்
அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும்.
இத்தலத்தில் கல்யாண சுந்தரி,பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள்
தனித் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம்.
மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

🌺 வழிபடுவதால் ஏற்படும் பலன்:

குமரக் கடவுலை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும் அன்னை கட்டளைக்கு காத்திருப்பர். ஆதலால் அன்னை உபாசித்தால் வேண்டியது கிட்டும். பதவியடையலாம்,திருமண தடைகள் நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும். முக்கியமாக பல கிராமங்களில் ஆடி மாதத்தில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் அகல வழிபடுகிறார்கள்.

🌺 மந்திரம்:
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

🌺 காயத்ரி மந்திரம்:
ஓம் சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

🌺 தியான ஸ்லோகம்:
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

****** சர்வமும் சக்தி மயம் ******
thank: FB post ...

ஸ்ரீ வித்யா

ஸ்ரீ வித்யா

Thank to My Friend Mr.Suman - Srilanka ( Sithhavidya@gmail.com ) allowed Publish 
Reposting
ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை




கீழ்வரும் இணைப்புகளை முதலில் பார்வையிடவும்;

1.      ஸ்ரீ வித்யா பற்றிய முழுமையான விளக்கம் : Page1
2.       ஸ்ரீ ஜோதியில் இணைவதற்கான அறிவுறுத்தல்கள் : Doc formet
3.       ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவம்: Doc formet


இது செயற்படும் முறை: 

முதலில் நீங்கள் உங்கள் பூஜை அறை அல்லது வசதியான இடத்தில் கீழே அறிவுறுத்தப்பட்ட படி ஒரு ஸ்ரீ சக்கரமும்எண்ணை விளக்கும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் இங்கு தரப்பட்ட எளிய யோகப்பயிற்சியினை சில வட்டங்கள் செய்து அமைதியான நிலையில் இருந்து கொண்டு உங்கள் பிரார்த்தனையினை செய்து வர வேண்டும்.

 மறுமுனையில் எமது குருமண்டலத்தில் உள்ள குருமார்களால் வாராந்திரம் (ஒவ்வொரு ஞாயிறும்) நீங்கள் தியானிக்கும் போது ஸ்ரீ சக்கரத்தில் செலுத்தும் ஆன்ம சக்தியிற்கு ஸ்ரீ வித்யா மந்திரங்களால் சக்தி ஏற்றப்படும்.




இந்த செயல்முறையினை நீங்கள் விட்டிற்கு மின்சாரம் பெறும் முறையுடன் ஒப்பிட்டு மேலும் விளங்கி கொள்ளலாம். அதாவது பெரும் அணைக்கட்டில்/உலையில் உற்பத்தி செய்யப்படும் பல்லாயிரம் கிலோ வோட் மின்சாரம்குறித்த வாரியத்தின் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டும் என விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் ஏற்று தகுந்த இணைப்பினை கொடுத்து உங்களுக்கான மின்சாரத்தினை பெறுவது போன்றது. மின்சாரம் இணைப்பு கொடுத்தாலும் அதனை பாவித்து பலன் பெறுவதற்கான ஸ்விட்ச் உங்கள் கையில் இருப்பது போல இதில் பரிபூரண பலன் பெற உங்களது சிறு முயற்சியும் அவசியம்!

இதை நீங்கள் சரியாக செய்துவர உங்கள் வாழ்வில் ஸ்ரீ தத்தும் எனும் போகமும் மோக்ஷமும் பெறும் பாதையில் முன்னேற ஆரம்பிப்பிர்கள்.

இந்த ஸ்ரீ ஜோதியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முன் ஆயுத்தங்கள் கீழே பகுதி ௦1  இல் தரப்பட்டுள்ளது. 

பகுதி ௦1

1.     ஸ்ரீ சக்கரம் படம் ஒன்று (வர்ண படம் சென்னையில் ஆத்மா ஞான யோக சபாவில் கிடைக்கும்தொடர்பு கொண்டால் தபாலில் அனுப்பி வைப்பார்கள். முடியாதவர்கள் இந்த இணைப்பில் உள்ள  படத்தினை போட்டோ பிரிண்டு போட்டு லேமினேட் செய்து பிரேம் செய்து கொள்ளவும்.

2.     எண்ணை விளக்கு : நெய் விளக்கு உத்தமம்அல்லாவிடில் தேங்காய் எண்ணை விளக்கு வைத்துக் கொள்ளலாம்.

3.     இடம்: பூஜை அறை அல்லது வசதியான சுத்தமான இடத்தில் ஒரு சிறிய மேசையில் கிழ்வரும் அமைப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

4.     இந்த இணைப்பில் உள்ள படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி எமக்கு தபாலில் அனுப்பி வைக்கவும்.


பகுதி - ௦2
இந்த பகுதியில் மேலே கூறிய ஒவ்வொன்றினதும் அவசியமும் முக்கியத்துவமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம்
இதுவே அனைவரையும் இணைக்கும் சிம் காட் (Sim card), ஸ்ரீ சக்கரத்திலுள்ள கேத்திர கணித அமைப்புகள் பிரபஞ்ச சக்திகளை சரியான விகிதத்தில் ஆகர்ஷித்து குவிக்கும் செயலை செய்விக்கும். அத்துடன் குரு மண்டலத்தில் இருந்து அனுப்பும் சக்தியினை சேர்த்து நீங்கள் பிரார்த்திக்கும் வேளையில் உங்களிற்கு தரும்.
விளக்கு
இது அக்னிபிரபஞ்சத்தில் எந்த சக்தியினையும் இணைப்பது அக்னிஇதனாலேயே அனைத்து விடயங்களிலும் அக்நியிற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. தற்கால நடைமுறையில் கூறுவதானால் செல்போனிற்கு பற்றரி மாதிரி!
இடம்
குறித்த ஒரு இடம் இந்த சக்தி பரிமாற்றத்திற்கு ஒதுக்குவதால் அந்த இடத்தில் சக்தி தேங்கி உங்கள் பிரார்த்தனைமனவிருப்பங்கள் நிறைவேறும்.  
படிவம்
இதுவே மூல சக்தியுடன் உங்களை இணைக்கும் இணைப்புஇந்த படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து பேர் இதனால் பலன் பெற வேண்டுமெனில் அவர்கள் ஐந்து பெரும் தனித்தனி படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த படிவங்கள் நவாவரண பூஜை நடக்கும் மகா மேருவிற்கு கீழே வைக்கப்படுவதால் அந்த நபர்களுக்கு ஸ்ரீ யந்திரத்தின்  சக்தி எப்போதும் செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்.


 பகுதி ௦3
தியான முறை

நீங்கள் அனுப்பிய படிவம் எம்மை அடைந்தவுடன் அதன் முலம் உங்களது ஆத்மா சக்தியிற்கு சித்தர்களின் சில இரகசிய முறைகள் முலம் குரு மந்திரமான ஓம்” கார தீட்சையும்தேவியின் மூல மந்திரமான ஹ்ரீம்” கார மந்திரமும் உங்கள் சூஷ்ம உடலில் பதிவிக்கப்படும். இதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரத்தின் முன்னாள் அமர்ந்து தியானிக்க தொடங்கும் போது மூல சக்தியுடன் தொடர்பினை பெறுவீர்கள்!
தினசரி குறித்த நேரத்தில் குரு மந்திரமான ஓம்” தேவியின் மந்திரமான ஹ்ரீம்” இரண்டையும் கீழே கூறப்பட்ட முறைப்படி அப்பியாசித்து தரப்பட்ட பிரார்த்தனையினை செய்யவும்.


1.    முதலில் விளக்கை ஏற்றி சற்று நேரம் ஆழமாக மூச்சினை எடுத்து மனதினை அமைதிப்படுத்தவும். பின்னர் உள்முச்சு எடுக்கும் போது ஓம்” எனும் மந்திரத்தினை ஓம் ம் ம் என்று ம் சப்தம் முன்று தடவை வரும் அளவிற்கு உச்சரிக்கவும். வெளிமுச்சுடன் ஹ்ரீம்” என்ற மந்திரத்தினை உச்சரிக்கவும். இப்படி இயலுமான அளவு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடம் செய்யவும். இதன் போது உங்கள் உடல்மனம் என்பன சக்தியினை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உரிய வகையில் அமைதியடையும்.

2. உங்கள் தாய்தந்தைகுருவினை, குலதெய்வம், கிராம தெய்ய்வத்தினை  வணங்கவும். பின்னர் மூலாதாரத்தில் இருக்கும் கணபதியினை மனதில் வணங்கவும்.
3.     இரண்டாவது அமைதியாக கண்ணை திறந்து எரியும் விளக்கின் ஜோதி யினை சில வினாடிகள் பார்த்துவிட்டு அத்தகைய ஜோதி உங்களது மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கண் வரை பயணித்து வெளிவந்து உங்கள் முன்னாள் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் புள்ளி” “பிந்து” வில் வந்து இணைவதாக பாவிக்கவும். இந்த பாவனையின் நடுவில் மனதில்அல்லது வாயினை அசைத்த வண்ணம் ஓம் ஹ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் இருக்க வேண்டும்.
4.     பின்னர் சில வினாடிகள் ஸ்ரீ சக்கரத்த்தின் பிந்துவினை கண்களால் உற்றுப்பார்த்து ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரத்தினை உச்சரித்தவண்ணம் பிந்துவிலிருந்து ஜோதி வந்து உங்கள் உடலில் சேர்வதாக பாவிக்கவும். இந்த ஜோதி நீங்கள் முதலில் செலுத்திய ஜோதியிலும் பார்க்க பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஏனெனில் முதலில் செலுத்திய ஜோதியில் உங்கள் ஆத்ம சக்தி மாத்திரம் இருந்ததுஇப்போது நீங்கள் பெறும் ஜோதியில் இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஆன்மாக்களது சக்தியும்குருமண்டல சக்தியும் சேர்ந்து வரும். இதனை பெற்றவுடன் உங்களால் உங்கள் இன்ப வாழ்க்கைக்கு தேவையான வற்றை பெறும் சக்தி பெற்றவர்கள் ஆவீர்கள்.
5.     பின்னர் இந்த பிரார்த்தனையினை மனதில் மூன்று முறை உச்சரித்து அமைதியாக தியானிக்கவும்.

a     அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்
கழிந்தன வினைகள் எல்லாம் காய்ந்தன பாப்பம் எல்லாம்
இன்பமும் சுகமும் பெறும் இருந்திடும் பாக்கியங்கள்
நன்மையையும் செல்வம் கீர்த்தி நல்கிடும் அருளும் ஞானம் நாடிய பொருள் கைகூடும் நலிவெல்லாம் அகன்று ஓடும்
தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இதன் பின்னர் ஸ்ரீ சக்கரத்தினை பார்த்த வண்ணம் உங்களால் இயன்ற அளவு ஓம் ஹ்ரீம் ஓம்" மந்திரம் ஜெபம் செய்யவும்.