Saturday, November 23, 2013

Ribhu gita [ ரிபு கீதை ]

ரிபு கீதை
Ribhu gita 

you can get this book from : https://bookstore.sriramanamaharshi.org/

ரிபு கீதை:  வட மொழி சிவா இரகசியத்திலுள்ள ஆறாவது அம்சத்தின் நான்காவது அத்தியாயம் முதல் நாற்பத்தி ஏழாவது அத்தியாயம் வரையிலான சுலோகங்களின் விரிந்த மொழிபெயர்ப்பே தமிழ் ரிபு கீதை.

காணும் அனைத்துமே பிரும்மம்நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே பேத புத்திலுள்ளமோகத்தை விலக்கு என்று பிரும்ம புத்திரரான ரிபு அவரது சீடர் நிதாகருக்குஅருளியது ரிபு கீதை.


மகாபாரதத்துக்கு இதயத்தானமாக பகவத்கீதைஇருப்பதுபோல இந்த சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது. இதை திருவிடைமருதூர் பிக்ஷு சாஸ்திரி தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 பாடல்களில் பாடியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷிஅவர்கள் இரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். சம்பூர்ணம்மாள் என்ற அம்மையார் தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ரமணர் 'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று சொல்லி ஊக்குவித்தார். இன்று ரிபு கீதை இரமணாசிரம்த்தின் வெளியீடாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.
அருணாச்சல சுவாமிகளின் உத்தரவுப்படி திருவிடைமருதூர் ஸ்ரீ பிட்சு சாஸ்திரிகள் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தார். பதிப்பு: ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை. 


அகம் ப்ரும்மாஸ்மி என்பதே மனதின் வ்ருத்தி என்று சொல்கிறார் ரமணர் காவ்ய கண்டரின் ஒரு கேள்விக்கு. அதே போல சிவ ரஹஸ்யத்தில் ஒரு பகுதியான ரிபு கீதை அகம் ப்ரும்மாஸ்மி என்ற ஒரு மந்திரத்தை விட உயர்வானது எதுவுமில்லை என்கிறது. 

ஜீவனது பேத நாட்டமாகும் சுக துக்கானுபவங்கள் ஒழிய வேண்டுமானால் மும்மூன்றாக உள்ளவைகளும் நாமரூப நாட்டமும் அழியவேண்டும். இந்த நிலை அகண்டாகார விருத்தி (துண்டாடப்படாத செயல்)தத்வத்தினால் தான் அமைய வேண்டும். இந்த அகண்டாகாரவ்ருத்தியே தான் இங்கு ஸாதகனுடைய பூஜையில் அம்ருதமாக ப்ரதம பாகத்தை வகிக்கிறது.

தேகமுதனா னென்னறு வித விர்த்தி - திகழ் நானென்னல் சாக்ஷிவ்ருத்தி
ஏகபரநானென்னல் அகண்ட விர்த்தியாம் மூன்று விருத்திகளிரண்டைத்தள்ளி
ஆகுமகண்டாகார விருத்தி தன்னை அனவரதமாய் ஆதாரவாயப்யஸித்து
சோகமுறும் சித்தவிகற்பங்கள்தீர்த்து சொன்னவகண் டேகரஸ சொரூபமாய் - ரிபு கீதை.
இந்த அம்ருதத்தின் வடிவம் ஞானகாண்டத்தில் இவ்வாறு கூறப்படுகிறது, - நான் ஜீவன் என்ற மயக்க அறிவு நீங்கி நான் ஸத்-சித்-ஆனந்தமான பரசித் உன்ற உண்மையறிவும், இதுஉலகம் என்னும் மயக்க அறிவு நீங்கி இதுவே சத் -சித்-ஆனந்தமான சிவம் என்ற உண்மை அறிவுமே. 

நிர்குண பூஜை யென்பதென்ன?
நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் சர்வ யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் அஹம் ப்ரஹ்மம் என்னும் தியானமே யாகலான் சர்வ பிரகாரத்தாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டு மென்பதே நிர்குண பூஜையின் தாற்பரியம்.

நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் எல்லா யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் " அஹம் ப்ரஹ்மம்" என்னும் தியானமே ஆதலால், எல்லா வழியாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டும் என்பதே நிர்குண பூஜையின் தாத்பரியம்.

சுயமதுவாம் தத்வமசி என்னும் வாக்கியம்
சொல்லும் உபதேச மகா வாக்யமாகும்
இயலும் அகம்பிரம்மாஸ்மி என்னும் வாக்யம்
இலகு அநுபூதி மகா வாக்யமாகும்
மயன் மருவாப் பிரஞ்ஞானம் பிரம் வாக்யம்
மனனத்தின் அப்பியாச வாக்யமாகும்
அய்மான்மாப் பிரமமென அறையும் வாக்யம்
அதற்கெல்லாம் சம்மதமாம் வாக்கியந்தானே - ரிபு கீதை

திடஞானி தரிசனமே தீர்த்த மாடல் 
திடஞானி தரிசனமே தேவபூஜை 
திடஞானி தரிசனமே செப தபங்கள் 
திடஞானி தரிசனமே செய்யும் அறங்கள். 
                                                    -ரிபு கீதை 

பலவிதமாம் பூதம் பொய் புவனம் பொய்யே 
யுரைதருபா வாபாவ மியாவும் பொய்யே 
யுற்பத்தி திதிநாச மனைத்தும் பொய்யே 
விரிவுபெறு போகம்பொய் பந்தம் பொய்யே 
விடயமுத லியாவும் பொய் விதியும் பொய்யே 
சுருதியோடு நூலும்பொய் சொல்லும் பொய்யே 
சுககனமாம் பரபிரம மொன்றே மெய்யாம் 
.........
தகுகுரவன் சீடன்பொய் குணதோடம் பொய்
.......
பரவியிடு முலகும் பொய் யுயிர்களும் பொய் 
பந்தமொடு மோட்சசுக துக்கம் பொய்யே 
....
சுத்தமதா மனதும் பொய் வாக்கும் பொய்யே 
...
எனக்கயலாய்த் தூலமுதற் றேகமில்லை
எனக்கயலாய் நனவுமுதலவத்தை இல்லை 
எனக்கயலாய் விசுவன்முத லாருமில்லை 
...
எனக்கயலா யாந்தரமாஞ் சகத்துமில்லை 
எனக்கயலா எவையுமில்லை பிரம மேநா
னென்று உரமா இருந்திடுவோன் சீவன் முக்தன் 

எனக்கயலாய் தீர்த்தமில்லை தானமில்லை 
எனக்கயலாய் தலங்கலில்லை தெய்வமில்லை 
எனக்கயலாய் தெய்வத்தின் சேவையில்லை 
எனக்கயலாய் தருமமில்லை பாவமில்லை 
எனக்க்யலாய் ஞானமில்லை மோட்சமில்லை 
எனக்கயலாய் வேதமில்லை நூலுமில்லை 
எனக்கயலாய் விதியுமில்லை நிதேதமில்லை 
எனக்கயலாய் பூதமில்லை புவனமில்லை 
எனக்கயலா ஒருமையில்லை இருமை இல்லை 
எனக்கயலா உயர்வுமில்லை தாழ்வுமில்லை 
எனக்கயலா புகழ்வுமில்லை இகழ்வுமில்லை
.......
யான்பிரம மென்ருனர்வோன் சீவன் முக்தன் 

-----ரிபு கீதையிலிருந்து

கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய்
                                                       … ரிபுகீதை, 18-13


Thank to :



No comments:

Post a Comment