Saturday, November 23, 2013

மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்

மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்

சீகண்ட யோகம் 
shivapadamஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.




ஸ்ரீநாத யோகம் 
paramapadamஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.



விருஞ்சி யோகம் 
lord_brahmaஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.

இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.


No comments:

Post a Comment