Saturday, November 9, 2013

என் தந்தை








                           என் தந்தை எனக்கு ஒரு வீடு வாங்கிகொடுத்தார். சிலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தேன். என் தந்தையை எதிர்த்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். என் மனைவியின் அசைகளை நிறைவுசைவதிலேயே என் காலம் கழிந்தது. என் வீட்டுக்கு வர்ணம் பூசினேன். வீட்டில் பல துஷ்ட்ட நண்பர்கள் வந்துசேர்ந்தனர். அவர்களுடன் உல்லாசமாக காலம் கழித்தோம். இப்போது அந்த நண்பர்கள் எதிரிகள் ஆகிவிட்டனர். மேலும் பல துஷ்டர்களை வீட்டுக்கு வரவழைத்தார்கள். எல்லோரும் சேர்ந்து எங்களையும் வீட்டையும் நாசபடுதினார்கள். நானும் என் மனைவியும் அவர்களை எதிர்த்து போராடினோம். என்னையும் மனைவியையும் கஷ்டபடுதினர்கள். நான் பலவாறு கஷ்டப்பட்டு, கடன்பட்டு என் மனைவி, வீட்டையும் காபாற்றிவந்தேன். நிலைமையை சமாளிக்கமுடியவில்லை. தவித்தோம், கதறினோம்.


                            இப்போது தான் என் தகப்பன் நினைவு வந்தது. அவனை உதசினபடுதிவிட்டோமே என்று வருந்தினேன். என் மனைவியிடம் தகப்பனை பற்றி சொன்னேன். முதலில் என் தகப்பனின் உதவியை கேட்க மறுத்துவிட்டாள். பின் வேதனை தங்காமல் தகப்பனின் உதவியை பெற சம்மதித்தாள். பலகாலம் தந்தையை பிரிந்து வாழ்ந்ததால் இப்போது அவர் இறுக்கும் இடம் தெரியாமல் தவித்தோம். எங்கு எங்கோ தேடி அலைந்து ஓய்ந்துபோனோம். கதறி அழுதோம் நாங்கள அழுவதை பார்த்து ஒரு வழிபோக்கர் எங்களை விசாரித்தார். எங்களை தேற்றி கவலைபடாதீர்கள் உங்கள் தகப்பன் இருக்கும் இடம் எனக்கு தெரியும் நான் அழைத்து போகிறேன் என்றார். இப்போது நாங்கள் அவருடன் பயணப்பட்டோம்.

                                             வழியில் எங்கள் எதிரிகள் வந்து துன்பபடுதினர். அந்த துஷ்டர்ககளை வழிபோக்கர் விரட்டியடித்தார். இன்று முதல் கவலைபடாதீர்கள் என்று ஆசீர்வாதம் பண்ணினார். எங்கள் கடனை அவரே அடைத்தார். எங்கள் வீட்டையும் சீர்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். இப்போது எங்கள் குறை எல்லாம் தீர்ந்துவிட்டது. என் மனைவியும் மனநிறைவு பெற்றுவிட்டாள். எதையும் ஆசைப்பட்டு கேட்பது இல்லை. நாங்கள் இப்போது அந்த வழிபோக்கரை பின்தொடர்ந்ந்து சென்றோம்.

நாங்கள் என் தகப்பனை என்று சந்திகபோகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காலம் போனது .

                                               இப்போது அந்த வழிபோக்கரிடம் நீங்கள் யார் என்று கேட்டோம். அப்போது அவர் தன் சுயருபத்தை காட்டினார். அவர் யாருமல்ல என் தகபனே தான். நாங்கள் ஆனந்தத்தில் மிதந்தோம். எங்கள் தகப்பனே எங்களை காப்பாற்றி கரை சேர்த்தார்.இப்போது அவருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த கதையில் நான் என்பது ஆன்மா, மனைவி என்பது மனம், வீடு என்பது உடல், வழிபோக்கர் என்பது குரு, தகப்பன் என்பது இறைநிலை ஆகும்.


குரு என்பவர் நாம் தகப்பன் மேல் தீராத அன்புவைத்தால் மட்டுமே வருவார். வழிநடத்துவார். குருநிலை உள்ளிருந்து வழிநடத்தும். வெளியில் இல்லை என்பதை முழுமையாய்தெரிந்துகொள்ளல் வேண்டும். இல்லையாகில் சொர்குருக்களிடம் சிக்கி சிறுமைபட நேரிடும்.


இப்படிக்கு, 

உயிர். 



TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OURSELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OURSELF TO GIVE DEATHLESS LIFE.

Thank to: Dr Dheena Dayalan : https://suthasivam.blogspot.com/

No comments:

Post a Comment