உத்தவ கீதை
கண்ணன் சொன்னது இரண்டு கீதைகள்!
* ஒரு கீதை = பகவத் கீதை!
* இன்னொரு கீதை = உத்தவ கீதை!
முன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்!
* ஒரு கீதை = பகவத் கீதை!
* இன்னொரு கீதை = உத்தவ கீதை!
முன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்!
பின்னது = வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவில்!
கண்ணன் சொன்னது...
24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்
அவர்கள் முறையே:
- பூமி
- காற்று
- ஆகாயம்
- நீர்
- அக்கினி (நெருப்பு)
- சந்திரன்
- சூரியன்
- மாடப்புறா
- மலைப்பாம்பு,
- சமுத்திரம்,
- விட்டில் பூச்சி,
- தேனீ,
- யானை,
- தேனெடுப்பவன்,
- மான்,
- மீன்,
- பிங்களையெனும் வேசி,
- புறா,
- குழந்தை,
- குமரி,
- அம்பு தொடுப்பவன்,
- பாம்பு,
- சிலந்திப்பூச்சி,
- குளவி.
பூமி;
மனிதம் மிருகம் எல்லோராலும் மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற
இதுவே எனது முதல் குரு; மக்கள் வருத்தியதை மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்; துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும் உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;
வாயு, உடலென்ற நாம் வாழ உறுதுணையாயிருக்கிறது;
உடல் இன்ப துன்பத்தில் சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா இதிலெல்லாம் அகப்படாமல்
தனித்திருக்கிறது; அதுபோல் ஞானம் வேண்டுபவன் தேவையில்லாத பொருட்கள் மேல்
சிந்தை கொள்ளது தனித்திருக்கவேண்டுமேன்பது வாயு எனக்கு வழங்கியப் பாடம்.
ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;அளவிட முடியாதது;
எதனோடும் எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும் தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது
ஆகாயம் எனக்கு அறிவித்த பாடம்.
தண்ணீர்
தனக்கென்று ஓர் நிறமற்றது;...... https://uddhavagitatamil.blogspot.com/2013/11/2.html
No comments:
Post a Comment