Monday, March 3, 2014

"ஓம் சிவசிவ ஓம் " பிரச்னைக்கு ஒரு தீர்வு நிவாரணி

"ஓம் சிவசிவ ஓம்" மந்திரம் சித்தர் அருள் பெற உதவிய 
சில நாட்களுக்கு முன் "திண்ணை சித்தரை" தரிசிக்கும் பாக்கியம் இறை அருளாலும் , குரு அருளாலும் கிடைத்தது. மௌன குருவின் பார்வையிலே, மகத்துவம் பல உண்டு. 

அன்று  "திண்ணை சித்தரைக் " காண வேண்டும் என்ற ஒரே நோக்கோடு , குடும்பத்தோடு சுவாமிமலை நோக்கிப்  பயணப் பட்டோம் .

சுவாமிமலை அடைந்தவுடன் , ஆற்றினில் நீராடி புத்துணர்வு அடைந்தோம்.   நாங்கள் குளித்து முடித்தவுடன் கோவில் யானை அங்கே நீராட வந்தது. அது ஒரு நல்ல சகுனமாக பட்டது. 

வழியிலே ஒரு சீப்பு பழமும் , கல்கண்டும் , பிஸ்கட்டும் வாங்கிக்கொண்டு சித்தரைக் காணச்  சென்றோம். 

முதலில் ஒரு விநாயகர் கோவில் வந்தது. அவரிடம் ஒரு வாழைப் பழத்தை வைத்து சித்தர் பிரான் அருள் கிடைக்க மனதார வேண்டிக்கொண்டு நடந்தோம். 
 ஆனால் "திண்ணை  சித்தர்" அங்கே இல்லை. 

"அவர் எப்போது வருவார் எனத் தெரியவில்லை"  என அங்கு உள்ளோர் கூறினர் . நேரமோ மாலை 6 .30 மணியைத் தாண்டி விட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. மனமோ ஏக்கத்தில் தவித்தது.
அங்கே ஒரு ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது . இந்த ஆஞ்சநேயர் மூலமாய்"திண்ணை சித்தரிடம்"  மற்றொரு அன்பருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து  பிறகு ஒருமுறை கூறுகிறேன் .

அந்த ஆஞ்சநேயர் சன்னதிக்குச்  சென்று ஒரு சீப்பு பழத்தினையும் வைத்து எப்படியும் திண்ணை சித்தர் தரிசனத்தினைப்  பெற்றுத் தர வேண்டும் என மனதார வேண்டிய  அக்கணமே , அந்த  தெரு வழியே "திண்ணை சித்தர்" நடந்து வரலானார்கள்.

"ஜீ தமிழ்" தொலைக்காட்சியில் "திண்ணை சித்தரைப்"  பற்றி ஒளி பரப்பியதில் இருந்து , நாள் தோறும் மக்கள் கூட்டம் அவரைக் காண வந்த வண்ணம் உள்ளது.

 வருபவர்கள் அவரைத் தொழும் பொருட்டு அவரின் பாதங்களைத் தொடுவதும் , தாங்கள் கொண்டு வந்த பண்டங்களை அவரிடம் தந்து உண்ணும் படி வேண்டுவதும் என தொடர்ந்து தொல்லை செய்ததால்  , அவர் அன்று முழுவதும் ஓரிடமாய் நிற்காமல் , கால் ஓய அலைந்துக் கொண்டே இருந்தார்.

அவரைக் கண்ட பரபரப்பில் நாங்களும் முதலில் அவர் பின்னோடு அலையத் தொடங்கினோம்.

அப்போது அங்கே உள்ளவர்கள் " நீங்கள் எல்லோரும் அமைதியாக அமருங்கள் , அப்போது தான் அவரும் எங்கேனும் அமருவார் ' எனக் கூறினார். 

நாங்கள் தெரு ஓரமாக  ஓரிடத்தில்  அமர்ந்து , அவர் நடப்பதையே பார்த்த வண்ணம் இருந்தோம். மனம் மட்டும் பரபரப்போடு இருந்தது.

அப்போது திடீரென  "ஓம் சிவசிவ ஓம் " ஜபிக்க வேண்டும் எனத் தோன்றியது. உடனே  நானும் என் மனைவியும் மனதினுள்   "ஓம் சிவ சிவ ஓம் " ஜபித்த வண்ணம் , சித்தர் அருள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிய படி அமைதியாக இருந்தோம். 

"திண்ணை  சித்தரோ"  தெருவின் ஒரு முனைக்கும் மறு முனைக்கும் நடந்துக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் அவரைப்  தரிசித்தப்  படியே தொடர்ந்து  "ஓம் சிவசிவ ஓம் "ஜபித்தபடி இருந்தோம் .

சித்தர் சுவாமிகள் தெருவின் ஒரு முனை வரை சென்றவர் மீண்டும் திரும்பி வந்து , நாங்கள் அமர்ந்து இருக்கும் இடம் வரை வருவதும் , மீண்டும் தெருமுனை வரை செல்வதுமாக இருந்தார்கள் .

 இப்படியாக பல முறை நடந்த படியே இருந்தார்கள். அனால் ஒவ்வொரு முறை எங்கள் அருகில் வரும்போதெல்லாம் , எங்களை நோக்கி தனது அருள் பார்வையை வீசியபடி செல்வார்கள். 

அந்த பார்வையில் தான் எத்தனை வீச்சு.

சில முறை இவ்வாறு கழிந்த பின் , "திண்ணை சித்தர்" நாங்கள் அமர்ந்து இருந்த இடம் அருகிலேயே வந்து அமர்ந்துக் கொண்டார்கள். நாங்களும் சிறிது நேர இடைவெளியில்  அவர் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டோம். 

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அவரின் நயன வீச்சிலே , நனையும் பாக்கியம் கிடைத்தது. சில உள்ளார்ந்த அனுபவங்களும் கிடைத்தன. 

எங்கள் மனம் நிறைந்து இருந்த அந்த  நிலையிலே , 
"இன்று இது போதும்" என்பது போல
"திண்ணை சித்தர்" சுவாமிகள்  எழுந்து சென்று விட்டார்கள். 

உயர்ந்த ஒரு குருவின் அருளை அன்று எங்களுக்கு "ஓம் சிவசிவ ஓம் " மந்திரம் பெற்றுத் தந்தது.
 நன்றி  "ஓம் சிவ சிவ ஓம் ".

 "ஓம் சிவசிவ ஓம் " பிரச்னைக்கு ஒரு தீர்வு நிவாரணி –   அருட்திரு: டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா  Link...

About ‘Om siva siva Om’ Manthira Speech (1hr mp3)
https://www.mediafire.com/?0x24ki9f2szkbw2 


1 comment:

  1. namaskaaram hari..thangal anubavam meisilirkka vaithathu..engalukku antha bakiyam kidaikkavillai.. aanaal ungal moolam..avarai paathathu peria bakiyam...." siddham thelinthu sivamaanor ellaarkkum kothadimai aana kudi naan paraaparamey"..sri thaayumaanavar..

    ReplyDelete