Tuesday, March 4, 2014

ஸ்ரீ சிவன் சார்

பெரியவா சரணம்.
09

ஸ்ரீ சிவன் சார்:

கோவிந்த தீக்ஷிதரின் வம்சத்தில் தோன்றியவரும் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவாளுடைய பூர்வாஸ்ரம தம்பியுமாகிய ஸ்ரீ சதாசிவ சாஸ்திரி என்கிற திருநாமமுடைய ஸ்ரீ சிவன் சார் 3-10-1904-ல் புனித காவிரி நதிக்கரையில் உள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள ஈச்சங்குடி எனும் கிராமத்தில் அவதரித்தார்.

திருமணமான ஸ்ரீ சிவன் சார், போட்டோகிராஃபராக தன் வாழ்க்கையை நடத்தி வந்ததுடன் ஒரு அற்புதமான ஓவியராகவும் திகழ்ந்ததோடல்லாமல் மௌனியாகவும் வைராக்யமுடையவராகவும் திகழ்ந்தார்.

கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடம் மற்றும் திருவெண்காட்டில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமஸ்வேந்திர ஸரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் முதலிய இடங்களில் நந்தவனம் ஏற்படுத்தி அதை ஒரு தெய்வீகப் பணியாக ஆற்றினார்.

சென்னை நர்மதா பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் குரு நாதரால்( ஸ்ரீ சிவன் சார்) எழுதப்பட்ட  ஆன்மீகப் பொக்கிஷமாக புத்தக வடிவில் "ஏணிப்படிகளில் மாந்தர்கள்" என்ற நூலை படித்து பாருங்கள் பிறகு ஆன்மிகம்,ஜோதிடம் ,கிரகங்கள் எந்த அளவு உண்மைகள் என்று தெரியும்.ஸ்ரீ சிவன் சார் அவர்கள் 20 வருடம் நீர் அருந்தவில்லை ,மூன்று விரல் அளவுதான் உணவு அதுவும் பல நாட்களுக்கு ஒருமுறை தான்.


வாழ்க்கைக்கு இன்றியமையாத ஸ்நான பான ஆகாரத்தைக்கூட தவிர்த்து, தன் வாழ்ந்த காலத்தை புனிதப்படுத்தினார் ஸ்ரீ சிவன் சார். இன்றும் அவருடைய நினைவு அவருடைய நினைவு அவருடைய பக்தர்களைப் பண்படுத்துகிறது.


ஸ்ரீ சிவன் சார், 07-03-1996 அன்று, தன்னுடைய 91-வது வயதில் மஹாசமாதி அடைந்தார்.
01003

பெற்றவர்களுக்கு அன்னமிடாதவன் பாபி !
தெய்வத்தை உள்ளத்தில் இருத்தி உணவை ஏற்பவன் பாமரன் !
தாழ்ந்தோரின் உணவு பண்டங்களை ஏற்காதவன் விவேகி !
மிதத்துடன் புசிப்பவன் சிறந்த விவேகி !
சிற்றுண்டியை போல் உண்பவர் மகான் !
மருந்தளவு ஏற்கவும் கூடியவர் துறவி !!

- ஸ்ரீ சிவன் சார் (“ஏணிப்படிகளில் மாந்தர்கள்”)

You tube : 

https://mahaperiyavaa.wordpress.com/2013/04/02/sri-sivan-sir-aradhana-videos/

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xJ81Nr2aRpA


ஸ்ரீ சிவன் சார் ஆராதனை

18 மார்ச் 2014 செவ்வாய் கிழமை, சென்னை, தியாகராயா நகர், பஸுல்லா ரோடில், விவேக் & கோ அருகில், வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள ஆர்.கே. மிஷன் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் நடைபெறுகிறது.

மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை, மஹான் சிவன் சாரின் மகிமைகளையும், தம் வாழ்வில் கண்ட மஹத்துவங்களையும் அவரது அத்யந்த பக்தர்கள் பகிர்வு.

தொடர்ந்து அர்ச்சை, ஹாரத்தி.

இரவு மணி 7 முதல் 8.45 மணி வரை பம்பாய் ஞானம் குழுவினரின் "நாம போதேந்திராள்" நாடகம்.

இரவு 8.45 மணிக்கு பிரசாத வினியோகம்.

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஆராதனை வைபவத்தில் கலந்துகொண்டு குருவருள் பெற பாத்திரமாக, கலியுக தெய்வம் ஸ்ரீமத் பரமாச்சார்யாளின் க்ருபாகடாக்ஷம் வேண்டி ப்ரார்த்திக்கின்றேன்.

பெரியவா சரணம்.

- சாணு புத்திரன்.

03
Thank:  lakshmikanthan shankar ,
https://sivansir.wordpress.com/
https://mahaperiyavaa.wordpress.com/

2 comments:

  1. Manikandan,Thanks for the info on another Mahathma!

    ReplyDelete
  2. I happened to get the book last month only. Enippadiyil Mandargal deserves a thorough study. Thanks Hari

    ReplyDelete