மாணிக்கவாசகரும் “ மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே ” என்று குறிப்பிடுகின்றார். இதில் நாம் பழகிய பின்பு கண்களால் செய்யும் பயிற்சியை பழகுதல் வேண்டும்.
சுவாசம் இடகலையாக வைத்து. நம் இடது கண்களை வலது கண்காளல் பார்த்தல் வேண்டும். பின்பு பிங்களையில் சுவாசம் வைத்து நம் வலது கண்களை இடது கண்களால் பார்த்தல் வேண்டும்.
இவற்றை வார்த்தைகளில் புரிந்து கொள்வது கடினம் இப்பயிற்சியில் நாம் முன்னேற நமக்கு கண்ணாடித்தவம் உதவும். இவை அனைத்திலும் நம் புருவமத்தியில் உணர்வை கூட்டுவதே நம் பிரதான முயற்சியாகும்.
நம் உடலானது அடிப்படையாக நான்கு விதமான தன்மைகளால் ஆனது அவை.
1. உயிரற்ற பொருட்கள் (அடிப்படை வேதிப்பொருட்கள்)
2. உயிருள்ள பொருட்கள் ( இவை நம் சதை மஞ்ஜை போன்றவை)
3. உணர்வுப் பொருட்கள் (இவை நம் தோல் மற்றும் உணர்வு போன்றவை)
4. அறிவுப் பொருட்கள் (அறிவுச்செல்கள்)
அணுக்கள் இவற்றில் ஒளியை உணரும் தன்மை கொண்டவை நம் அறிவுப் பொருட்கள் அறிவுச்செல்கள் மட்டுமே
இவ்வாறு நம் உயிரற்ற அணுக்களை உயிருள்ள அணுக்களாக்கி அவ் உயிருள்ள அணுக்களை உணர்வு அணுக்களாக்கி. பின்பு அவ் உணர்வு அணுக்களை அறிவு அணுக்களாக மாற்றம் செய்வதே யோகம் ஆகும் இதையே சாகாக் கலை என்று உணர்த்தினர்.
நாம் எளிமையாக புரிந்துகொள்வதற்கு இச்சிறிய முயற்சி ...
No comments:
Post a Comment