Thursday, September 24, 2015

குணங்குடி மஸ்தான் சாகிபு

Thank : HMVKrishnaPrasad

பேரானந்த நிலை உணர்ந்தேன் பராபரமே
குணங்குடி மஸ்தான் சாகிபு சுமார் 27 கீர்த்தனைகளும், 1057 பாடல்களும் எழுதியுள்ளார்.
குருவணக்கம் பகுதி பத்துப் பாடல்களைக் கொண்டது. அதில் இவரது குரு முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் செய்த அற்புதங்கள், அதிசயங்கள் பற்றி வருகிறது.
கடலில் மூழ்கிய கப்பலைக் கொடிக்கம்பத்துடன் திரும்பி வரச் செய்தது, கம்பத்துடன் ஓடி வந்த ஒரு கப்பலைப் பூனையாகச் செய்தது. கர்ப்பத்தில் இருந்த போது தன்னைக் கொல்லவந்த ஒரு முனியைக் கொல்வதற்காகக் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து அந்த முனியைக் கொன்று இருதுண்டாக்கிவிட்டு மீண்டும் கர்ப்பத்திற்குள் சென்றது, பிள்ளையைப் பிடித்து சந்நியாசி ஒருவன் தின்றுவிட அப்பிள்ளையை அச்சந்தியாசியின் குடலைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்படி செய்தது என இவரது குரு அதிசயங்கள் அனைத்தும் இப்பாடலில் பதிவாக முன் வருகின்றன.
மற்றும் அகஸ்திய முனிவர் மீது இவர் பாடிய அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. குருவருள்நிலை, தவநிலை, துறவுநிலை, நியமந நிலை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுகின்றன.
இதைத் தவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப் பாடல்களும், பல்வித மனநிலை களையும், உணர்வுச் சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, ரகுமான் கண்ணி, எக்காளக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன.
குணங்குடியார் எழுத்துத் தொகுப்பும் பதிப்பும்
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைத் தொகுத்துப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த சீயமங்கலம் அருணாசல முதலியார். பிறகதனைத் தொகுத்து வெளியிட உதவியவர் சேகனாப் புலவர் என்னும் புலவர் நாயகம் அவர்கள். குணங்குடியாரின் சம காலத்தவரான இவர் பெயர் செய்தப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் என்பதாகும்.
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களுக் கான விரிவான உரையை இக்காலப்பகுதியில் எழுதியவர் மா.வடிவேலு முதலியார் அவர்கள். 1908-இல் பூ.ச.துளசிங்க முதலியார், விரிவுரை யோடு கூடிய பதிப்பை வெளியிட்டார். 1928-இல் இரண்டாம் பதிப்பை வடிவேலு முதலியார் உரை யுடன் சென்னை ஷாஹுல் ஹமீதியா நிறுவனம் வெளியிட்டது.
1997-இல் வெளியிடப் பட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடான சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் நூலில் குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றியதொரு விரிவான ஆய்வுரையை டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் எழுதியுள்ளார்.
1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆகி பின் தண்டையார் பேட்டை ஆனது.
இவர் சூஃபி ஞானி. பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.
பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,

சென்ற ஆண்டு இவரது அதிஸ்டானம் சென்றேன். அங்கு அடியேன் உணர்ந்த தெய்வீக அதிர்வலையை, என்னை ஈர்த்த காந்த சக்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
பல் பிறவி புண்ணியத்தின் பயனாய்
பேரானந்த நிலை உணர்ந்தேன் பராபரமே.
இவர் ஆலயம். தண்டையார் பேட்டையில் பிச்சாண்டி லேந் என்கிற தெருவில் உள்ளது. தண்டையார் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள GRT க்கு எதிரே போகும் தெருவில் போய் வலது பக்கமாக திரும்பினால் இவர் ஆலயத்தை அடையலாம்.
No comments:

Post a Comment