Thursday, September 3, 2015

சும்மா இருப்பது சுகம் !!!!!



தியானம் செய்வது எப்படி, தியானம் செய்வது எப்படி என்று நிறையப்பேர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.தியானம் செய்வது எப்படி என்று கேட்பதை விட சும்மா இருப்பது எப்படி என்று அறிந்துக்கொள்வது சிறப்பு.தியானம் என்பது தானாகவே நடக்ககூடியது.சும்மா இருக்கத் தெரிந்தால்தான் தியானம் முழுமையாக சித்தியாகும்.

சும்மா இருப்பது எப்படி?முருகக்கடவுள் அருணகிரியாருக்கு உபதேசித்ததுவும் இதுவே,"சும்மா இரு சொல்லற",தாயுமான ஸ்வாமிகளும் இதை "சும்மா இருக்கும் திறம் அரிது" என்கிறார்.நன்றாக கவனியுங்கள் மனித மனம் எப்போதும் கடந்தக்காலம் அல்லது எதிர்காலத்தில்தான் இருக்கும்,நிகழ்காலத்தில் நிற்பது என்பது இயலாத காரியமாகும் இந்த மனத்திற்கு.

எப்பொழுது மனம் நிகழ்காலத்தில் நிற்க தொடங்குகின்றதோ,அதன் சக்தியானது மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.நாம் எதையாவது செய்யும் பொழுது நம் சக்தி விரயமாகி வெளி செல்லத்தொடங்கும் செய்கை எல்லாம் சக்தியை வெளிபடுத்தும்.செயலை கடந்த போது சக்தி உள்ளே கடந்துச்செல்ல தயாராகும் .இந்த உள்பயணம் தொடங்கிவிட்டால் வெளிப்பயணமாகிய மரணத்தின் வாசல் மூடப்பட்டுவிடும்.... எப்படி வசதி ???? வாழ்த்துக்கள் !!!!!!!

Thank: https://sivanandabbaraty.blogspot.com/2010/04/blog-post_7151.html

No comments:

Post a Comment