Saturday, September 5, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி

Thank to http://www.vastushastram.com/blog/golden-vimanam

ஸ்ரீ
lordperumalfeet
மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் கோவில் தக்கார் திரு.ரவிச்சந்திரன் ஐயா அவர்களும் இது சார்பாக என்னை தொடர்பு கொண்டு என் தரப்பில் கடைசி கட்ட முயற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் தங்க மகளின் விமானத்தை தங்கமயமாக்கும் பணி நிறைவுபெற உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.
ஏற்கனவே இத்திருப்பணிக்கு தங்கம் கொடுத்தவர்கள் மற்றும் பணம் கொடுத்தவர்களை மீண்டும் ஒரு முறை பாதம் தொட்டு தங்கம் தருமாறு கேட்டு கொள்கின்றேன்.
என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்கள் பாதம் தொட்டு தங்கம் தருமாறு கேட்டு கொள்கின்றேன்.
ஆண்டாளால் குழந்தை கிடைக்கப்பெற்றவர்கள், ஆண்டாளால் வாழக்கை கிடைக்க பெற்றவர்கள், ஆண்டாளால் திருமணப் ப்ராப்தி கிடைக்கப்பெற்றவர்கள், ஆண்டாளால் உயிர் கிடைக்கப்பெற்றவர்கள், ஆண்டாளால் குணமடைந்தவர்கள் அனைவரின் பாதம் தொட்டு தங்கம் தருமாறு கேட்டு கொள்கின்றேன்.
இதை படிக்கும் என்னுடைய FB நண்பர்கள் அனைவரின் பாதம் தொட்டு தங்கம் தருமாறு கேட்டு கொள்கின்றேன்.
ஷிரண்ய பிரகாரம் ஷரிணீம் என்கின்ற வார்த்தைக்கு சொந்தக்காரியான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தங்கம் கொடுப்பது என்பது இப்பணி முடிந்த பிறகு யாருக்கும், எப்போதும் கிடைக்கவே முடியாத வாய்ப்பு ஆகும்.
திரு.திருகோஷ்டியூர் மாதவனன் சாமிகளை தவிர வேறு யாரும் இந்தப் பணிக்கு சிறிய அளவில் கூட மெனக்கிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் காலை டிவி நிகழ்சிகளில் பெருமாளை பற்றி பேசி தங்கள் வயிற்றையையும், பேங்க் அக்கௌண்டையும் நிரப்பி கொண்டு இருக்கும் மகா புண்ணிய ஆத்மாக்கள் இந்த திருப்பணிக்காக பணமோ / தங்கமோ கொடுத்து உதவவில்லை. மாறாக இந்தப் பணியின் பாதிப் பகுதி முழுக்க, முழுக்க சாமானியர்களாலேயே நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் நமக்கு கிடைத்த பெரிய சந்தர்ப்பமாக எடுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
காலை 6 மணிக்கு September 9 – 2015 அன்று இப்பணிக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வாசலில்.
ஆண்டாள் / ரங்கமன்னார் / பெரியாழ்வாரை விசுவரூப தருணத்தில் தரிசித்து பின் நம்மிடம் இருப்பதை கொடுப்போம் ஆண்டாளுக்கு
கூடுமானவரை 24 Carrot தங்கமாக கொடுப்பது நல்லது.
இதைப் படிக்கும் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது: -
என் வாழ்நாளில் நான் கேட்கப் போகும் கடைசி உதவியாக இதை நினைவில் நிறுத்தி கொண்டு இத்திட்டம் முழுமைப் பெற உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இதை படித்து விட்டு தயவு செய்து Share பண்ணவும்.
September 9 – 2015 காலை 6 மணி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சந்திப்போம்.
ஆண்டாள் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆண்டாளை பெருமை படுத்துவோம்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment