Friday, June 29, 2018

ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் வைணவ கோவில்

Thank:

இன்று தக்ஷிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு திருச்சி மணச்சநல்லூர் அருகில் உள்ள புண்டரிகாக்ஷப்பெருமாள் கோவில் திருக்கதவுகள் ... பூஜைகள் செய்து அயனங்களுக்கு ஒப்ப திறக்கப்படும்.
தமிழகத்தில் இப்படி ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் இன்னொரு கதவு என்பதாக கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் இருப்பதாக அறிக்கிறேன் .
நான் முன்னமே சொன்ன படி ... சைவ வைணவ கோவில்களில் பிரதான மூர்த்திகள் இருப்பினும் .. காலத்தை ஒப்ப இந்திர வழிபாடும் .. சந்திர சூரிய வழிபாடும் இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் ஓங்கி இருந்திருக்க வேண்டும் ..
அதனால் சூரியனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு வாசல்கள் அமைக்கபெற்றும் ... இந்தரனுக்கு மிகப்பெரிய சுதை சிற்பம் அமைக்கப்பட்டு இருக்கிறது .
இந்த கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு பிரமாண்ட சுதை சிற்பங்கள் .. பிரும்மாவுடன் ..
இன்று என்னுடன் எனது நண்பன் ... Tiruchendurai Ramamurthy Sankar வந்து சிறப்பித்தான் ..
கோவிலின் உள்ளே மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டை தொட்டு அனுபவித்தோம் ..
பின்னர் .. வெளியே ஒரு வினோத எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை பார்த்தோம் .. எங்கள் ரெண்டு பேருக்கும் படிக்க தெரியாது .. ஆனால் டேய் .. மாமல்லன் அப்படீன்னு எழுத்தி இருக்கு என்று சங்கர் சொன்னான் .. எனக்கும் அப்படிதான் இருக்கு .. போட்டு பார்ப்போம் .. இதை படிக்க தெரிந்தவர்கள் என்ன எழுதி இருக்கு என்று சொல்லுங்க ..
விஜயராகவன் கிருஷ்ணன்

Gopala Krishnan இந்த கோவிலில் ஒரு குளம் உள்ளது அதில் நான்கு படித்துறை ஆதில் ஒன்றில் குளத்தால் அடுத்தபடித்துறையில் இருப்பவர்களுக்கு தெரியாது

Image may contain: 3 people, outdoor

Image may contain: 2 people, outdoor



கும்பகோணம் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.


படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது...... click' ...


Image result for 'சக்கரபாணி கோவில்'




Friday, June 15, 2018

அருள்மிகு தான யான வன மகா கணபதி திருக்கோயில்,சௌதடுக்கா,தக்ஷிண கன்னடா,கர்நாடகா.



அருள்மிகு தான யான வன மகா கணபதி திருக்கோயில்,சௌதடுக்கா,தக்ஷிண கன்னடா,கர்நாடகா.
Image may contain: indoor

சென்ற ஆண்டில் இதே நாள் .இஃதொரு மீள் பதிவு .
அகன்ற ஆகாயமே விமானம்! ஓங்கி உயர்ந்த மரங்களே கோபுரங்கள்!!சூழ்ந்துள்ள மரங்களே மதில்கள்!!
இயற்கையின் அழகுக்குள் அருள்பாலிக்கும் சௌதடுக்கா தான யான வன மகா கணபதி தரிசனம்!!!
அருள்மிகு தான யான வன மகா கணபதி திருக்கோயில்,சௌதடுக்கா,தக்ஷிண கன்னடா,கர்நாடகா.
விநாயகப் பெருமானின் வலப்பக்கத்தில் வீரபத்திரரும் இடப்பக்கத்தில் திருமாலும் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஒரே கல்லில் இது போன்ற மூர்த்தம் வேறெங்கும் காண முடியாது;வெகு அபூர்வ தரிசனம்!!!
தக்ஷிண கன்னட மாவட்டத்தில், பெல்தங்கடி தாலுக்காவில், கொக்கடா என்ற இடத்திற்கு அருகில் மூன்று கி.மீ தொலைவில் “சௌதடுக்கா விநாயகர்” கோவில் வயல்கள் சூழ்ந்த, கிராமபுறத்தில் உள்ளது. குக்கி சுபரமண்டய கோவிலிலிருந்து ௫௮ [ 58 ]கி.மீ தூரத்தில் உள்ளது. [தர்மஸ்தலாவிலிருந்து ௨௬ [ 26 ]கிலோமீட்டர் தொலைவில்]
No automatic alt text available.
“சௌதே” என்றால் வெள்ளாரிக்காய், “அட்கா” என்றால் வயல், அதாவது, வெள்ளாரிக்காய் போன்ற காய்கள் விளையும் பச்சை பசேல் என்று இருக்கும் வயல் வெளியில் இருக்கும் விநாயகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். கர்ப்பகிருகம், கோவில், கோபுரம் என்றில்லாமல், வெட்ட வெளியில், இந்த விநாயகர் விக்கிரகம் உள்ளது.
பக்தர்கள் கனவில் வந்து ''கோயில் கட்டுங்கள்'' என்று ஆணையிட்டசெய்திகளைக் கேட்டுள்ளோம்; பக்தர்கள் பலமுறை கோவில் கட்டத் தீர்மானித்தபோது, அவர்கள் கனவில் தோன்றி விநாயகர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இக்குறையைப் போக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியன்று மலர்களால் கோயில் கட்டி அழகு பார்க்கின்றனர் பக்தர்கள்.
எப்பொழுதுமே திறந்திருக்கும் இவ்விநாயகரை பக்தர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து தரிசிக்கலாம்.
வெள்ளரிக்காயே விநாயகருக்குப் படைக்கப் படுகிறது.
''பஞ்சகஜ்ஜயா சேவை ''என்னும் அவுல் ,வெல்லப்பாகு,தேங்காய் துருவல்,தேன்,வாழைப்பழம் ஆகியனக் கலந்த நைவேத்தியம் இங்கு வெகு பிரசித்தம்.
பக்தர்கள், அவரவர் மன நிலைகளுக்கு தக்க கோரிக்கைகளை வைக்கின்றனர் .திருமணம்,பிள்ளைப்பேறு,கல்வி, நோய்களில் இருந்து விடுபடல் போன்றவை.௪௮ [ 48 ]நாள்களுக்குள் நிறைவேறிவிடும் என்பது அதிசயமான உண்மை.அதற்கு சாட்சி, இங்கு பக்தர்கள் கட்டி உள்ள எண்ணற்ற மணிகளே ஆகும். கோயில் முழுதும் ஆயிரக்கணக்கான மணிகள் !Image may contain: plant, tree, table and outdoor
மோட்சத்தை அளிக்கக் கூடிய ''அதர்வ சிக்ஸா மந்திர ''யாகம் தினந்தொறும் நடைபெறுகிறது.

திறந்த மனதுடையவர்களையும் திறந்த இதயம் உடையவர்களையும் இந்த வெட்டவெளி மகா கணபதி காப்பார் என்பது உறுதி.

இங்கு தங்குவதற்கு இடம் இல்லை;௧௬ [16 ]கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மஸ்தலாவில் தங்கி, இங்கு வருவது சௌகரியம்.கர்நாடாகாவின் மற்றத் திருக்கோயில்கள் போலவே இங்கும் அன்னதானம் நடைபெறுகிறது.
புகைப்படங்கள்==
முதற்கண் ,விநாயகப் பெருமானின் வலப்பக்கத்தில் வீரபத்திரரும் இடப்பக்கத்தில் திருமாலும் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஒரே கல்லில் இது போன்ற மூர்த்தம் வேறெங்கும் காண முடியாது;வெகு அபூர்வ தரிசனம்!!!
மற்ற புகைப்படங்கள்.
இறுதியாக செல்லும் வழி.

No automatic alt text available.

Wednesday, June 13, 2018

நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !

Thank : Aademalan Eswaran  FB
நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !
Image may contain: one or more people
பொதுவாக , ஆவுடையார்மீது சிவலிங்கபாணம் அமையப் பெற்றிருக்கும் .ஆனால் ,அபூர்வமாக ஒன்றிரண்டு இடங்களில் நந்தியெம்பெருமான் மீது இலிங்கபாணம் அமைந்துள்ளது மிகவும் வியப்புக்குரியது தானே ?
௧ . வாலாஜா அடுத்த அனந்தலைமலை மீதுள்ள ஆலயத்தில் ஆவுடையார் மேல் உள்ள 
நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு !

வாலாஜா அருகே கல்குவாரிகளில் பழமையான நந்தி மீது சிவன் காட்சி தரும் குகைக்கோயில் உருக்குலையும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை உள்ளடங்கிய வடாற்காடு மாவட்டத்தில் நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்திருத்தலங்களும், ஆழ்வார்களால் பட்டியலிடப்பட்ட வைணவத்திருத்தலங்களும், சமண, பவுத்த கோயில்களும் நிறைந்துள்ளன.
இதுதவிர ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் குகைகள் மட்டுமின்றி ரிஷிகளும், முனிவர்களும், சித்தபுருஷர்களும் தங்கி நடமாடிய குகைகளும் நிறைந்துள்ளன. இந்த குகைகளில் பல இன்றும் வழிபாட்டுக்குரிய தலங்களாகவும் விளங்குகின்றன. இதுதவிர பல்வேறு வரலாற்று சான்றுகளை தாங்கிய குகைகளும் நிறைந்துள்ளன. இத்தகைய குகைகள்தான் இன்று கல்குவாரிகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. அத்துடன் கோயில்கள் கொண்ட மலைகளும் குவாரிகளால் சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தகைய குகைக்கோயில் ஒன்று கல்குவாரிகளால் காணாமல் போகுமோ என்ற அச்சத்தில் வாலாஜா பகுதி மக்களை தள்ளியுள்ளது.
வாலாஜா அடுத்த அனந்தலை புராண சிறப்பு வாய்ந்தது. இங்கு ஈசனை நோக்கி அனந்தபத்மநாபன் தவம் இருந்ததாக கருடபுராணம் தெரிவிக்கிறது. இத்தகைய புராண சிறப்புமிக்க கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இவ்வூரை ஒட்டியுள்ள எடக்குப்பத்தில் சுமார் இருபது கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலை உள்ளது. இம்மலையில் தட்டினால் இசையெழுப்பும் பாறைகள், புராதன கல்வெட்டுகள், கிருஷ்ணரின் சிற்பங்கள், பாறை ஓவியங்கள் கொண்ட குகை கோயில் உள்ளது.
இக்கோயிலில் இந்தியாவில் எங்குமே கண்டறியாதபடி ஆவுடையார் மீது அமர்ந்த நந்திபகவான் மீது லிங்க வடிவில் சிவன் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். ஏற்கனவே இந்த மலையில் அமைந்துள்ள குவாரிகளால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக மலையை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்கள் புகார் எழுப்பி வந்தனர். அவர்களுக்கு இங்கு இப்படி ஒரு அதிசய கோயில் இருப்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த குகை கோயில் இருப்பது அப்பகுதி மக்களால் கண்டறியபட்டது.
தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கிறார்கள்.
இக்குகையில் சித்தர்கள் வந்து தங்கி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
௨ . மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டத்தில் உள்ள பாதேஸ் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம் இருக்கும் விதமாக மிகவும் வித்தியாசமான திரு உருவமாக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது .
௩ . அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இது போன்ற அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை உள்ளது .அற்புத வேலைப்பாடுகள் கொண்ட நந்தி சிலையில் சிவலிங்கபாணம் அற்புதமாக அமைந்துள்ளது .The Norton Simon Museum is an art museum located in Pasadena, California, United States. It was previously known as the Pasadena Art Institute and the Pasadena Art Museum.
௪ . என்னே வியப்பு! அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு வித்தியாசமான நந்தியின் சிற்பத்தைத் தர்பார் மண்டபத்தின் [இராஜகோபுரத்தினை ஒட்டியுள்ள மணடபம் ] தூணில் காணலாம் .நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார் .
அன்பர்களே ,இதுபோன்று வித்தியாசமான நந்தியெம்பருமான் பற்றிய தகவல்கள் இருப்பின் புகைப்படங்களுடன் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
நன்றி ==
வாலாஜா முகநூல் பக்கம் ,The Norton Simon Museum is an art museum located in Pasadena .
புகைப்படங்கள் ==
௧ , ௨ , ௩ . வாலாஜா அடுத்த அனந்தலைமலை மீதுள்ள ஆலயத்தில் நந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு.
௪ . அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம்.
௫ , ௬ .அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் உள்ள அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை.
௭ .அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தர்பார் மண்டபத்தின்தூணில் உள்ள நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார்.


அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயிலில் ஆவுடையார் மீது உள்ள நந்தியின் மீது சிவலிங்கம்.
No automatic alt text available.

அமேரிக்கா ,கலிபோர்னியா ,பாசடீனாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் உள்ள அற்புதமான நந்தியெம்பெருமான் சிலை.

Image may contain: plant and outdoor
அடியேன் வாழும் ,சேலம் மாவட்டம் பேளூர் , அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தர்பார் மண்டபத்தின்தூணில் உள்ள நந்தி தேவர் தமது முதுகினில் சிவப்பரம்பொருளினைத் தாக்கியுள்ளார்.

Image may contain: sky and outdoor

Friday, June 8, 2018

அருள்மிகு விராலிமலை ஸ்ரீ சதாசிவ சுவாமிகள் வரலாறு



அருள்மிகு விராலிமலை ஸ்ரீ சதாசிவ சுவாமிகள் வரலாறு
Image may contain: 1 person, standing

கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள்கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் எனப்படுவர்.மாமனிதர்களும் கூட மிக குறுகிய காலமே நினைவில்
 கொள்ளப்படுகிறார்கள்மறைந்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக மறக்கப்படுகிறார்கள் . 

ஆனால் தவசீலர்களான ஞானிகள் சித்தர்களை ஒருபோதும் மறக்கப்படுவதில்லை..நம்மிடையே மிகச்சிறந்த சித்தராக வாழ்ந்து 85ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ஞான சித்தர் ஸ்ரீ விராலிமலை சதாசிவ சுவாமிகளின் வரலாற்றுச்சுருக்கம்.



சுவாமிகள் காசியில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர்சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் பராமரிப்பிலேயே இருந்துள்ளார்.இவருடைய தந்தையாரும் சிறந்த தவயோகியாக இருந்த காரணத்தால் இவருடைய இறுதிக்காலத்தில் சுவாமிகளுக்கு உபதேசம் செய்து தீட்சை அளித்து உள்ளார்பின்னர் சுவாமிகள் இமயமலை சென்று பல மகான்களை சந்தித்து ஆசிபெற்று பல தவயோகங்களைக்கற்று சுவர்ண சித்தி பெற்று பின்னர் தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். அக்கால கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட விராலிமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குகையில் பல காலம் தவமிருந்துள்ளார். இன்றும் அக்குகையில் சுவாமிகளுக்கு பூஜை 

செய்து வழிபடுகின்றனர்..
                          
 

குருவானவர் தவம் செய்த குகையின் முகப்பு...







குருவானவர் தவம் செய்த குகை.... உட்புறத்தில்...
          


சித்தர்களுடைய அடையாளமே அவர்கள் பல நோய்களை தீர்க்கும் மூலிகைகளையும் வைத்திய முறைகளும் கண்டு உணர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தீராத நோய்களையும்தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை தானே! அவ்வாறே சுவாமிகள் விராலிமலையில் இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு நோய் தீரவும்இடர்கள் தீரவும் பல சித்துக்களை செய்து உள்ளார்.இதன் மூலம் இவரை சித்தர் என அறிந்து கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் ரசவாதம் எனும் தங்கம் செய்யும் வித்தையை கற்றுத்தரும்படி வற்புறுத்தவே அதில் விருப்பமில்லாத சுவாமிகள்..அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள திருசடைவிளந்தை எனும் கிராமத்தில் மடம் அமைத்து தவமிருந்து வந்தார்.இக்காலகட்டத்தில் அங்கு ஒரு கோயில் கட்ட திருவுள்ளம் கொண்டு இடம் தேர்வு செய்து
பணிகளை தொடங்கினார்.



கோயில் கட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாக விபூதியை மடித்துக்கொடுத்து வீட்டிற்குச்சென்று பிரித்துப்பார்க்கும்படி தருவார். அவ்வாறு அவர்கள் வீட்டிற்குச்சென்றுவிபூதியை பிரித்துப்பார்த்தால் அவர்களுடைய கூலிக்கானப் பணம் இருக்கும்.

 இதைத்தெரிந்துகொண்ட சில பேராசைக்காரர்கள் இதே போல் நிறைய பொருள்பணம் வரவழைத்துத்தரும்படி தொடர்ந்து தொல்லை தரவே,அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம்,திருவிடைமருதூர் கோயில்களுக்குச் சென்று பின் திருபுவனம் அருள்மிகு கம்பகரேஸ்வரர் கோவில் (சரபர் ஸ்தலத்தில்) சில காலம் தங்கியுள்ளார்.





திருபுவனத்தில் அமைந்திருக்கும் ஜீவசமாதி ஆலயத்தின் முகப்புத்தோற்றம்....

அச்சமயம் சுவாமிகள் இவ்வூர் மக்களுக்கு தீராத பிணிகளை போக்கியும்,குழந்தைப்பேறு அருளியும்அருள்பாளித்து உள்ளார். திருபுவனத்தைச் சேர்ந்த நாயுடு சமூகத்தைச்சேர்ந்த பாலசுந்தர நாயுடுகிருஷ்ணசாமி நாயுடு ஆகியோர் சுவாமிகளிடம் ஆசி பெற்று கிருஷ்ணசாமி நாயுடுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால் சுவாமிகள் மீது பற்று கொண்டு திருபுவனம் அருள்மிகு கம்பகரேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு வலதுபுறத்தில் 
உள்ள இடத்தை வாங்கி சுவாமிகளுக்கு மடம் அமைத்து தங்க வைத்து பராமரித்துஉள்ளனர்..



சுவாமிகளுக்கு பணிவிடை செய்ய தவத்திரு சுந்தரேச அய்யர் அவர்களை நியமனம் செய்துள்ளனர். அவர்கள் தினமும் சுவாமிகளுக்கு பிரியமான சிற்றுண்டியான உப்புமாவும்,காப்பியும் தப்பாமல் செய்து கொடுத்து வந்துள்ளார்கள். இதே போல் திருபுவனத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்த ஆறுமுக செட்டியார் அவர்களின் முன்னோர்களும் சுவாமியின் பக்தர்களாக இருந்து சுவாமிகளுக்கு பணிவிடை செய்துள்ளனர். இந்த செட்டியார் வகையறாவில் சுவாமி வாழ்ந்த காலத்தில் அவரால் 
பெயர் சூட்டப்பட்டு சுவாமியின் விருப்பமான உப்புமாவை அவரது கையாலேயே வாங்கிபிரசாதமாக சாப்பிட்ட தனலெட்சுமி அம்மையார் தனது 91வது வயதில் இன்னும் நாகப்பட்டினத்தில் சட்டையப்பர் தெற்கு வீதியில் வசித்து வருகிறார்கள். இவருக்கும் இவரது சகோதரருக்கும் முறையே தனலெட்சுமிஆறுமுகம் என்று பெயர் சூட்டியுள்ளார். 


சுவாமிகளின் சமாதி அடையும் காலம் வரை இவர்களும் சுவாமிகளுக்கு பணிவிடைசெய்துள்ளனர்.

குரு பயன்படுத்திய சாய்வு நாற்காலி...

         




சுவாமிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்களை இந்த தனலட்சுமி அம்மையார் 
வாய்மொழியாகவே சொன்னதை அறிகிறோம். சுவாமிகள் சமாதி அடைந்த போது தனலட்சுமி அம்மையார் அருகிலேயே இருந்துள்ளார். இவருடைய முன்னோர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து சமாதியில் வைத்த நிகழ்வை அருகில் இருந்து தனது சிறு வயதில் பார்த்து உள்ளார்..





                                 

குருவின் ஜீவசமாதியின் மேல் சிவலிங்கம்....


. சுவாமிகள் பல்வேறு யோக முறைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் நவகண்ட
யோகத்தில் அமர்ந்து இருக்கும் போது உடல் ஒன்பது பாகங்களாக பிரிந்து 
காணப்படும். அப்படி ஒரு தடவை இதைக்கண்ட உள்ளூர் வாசிகள் சிலர் பயந்து போய் தனலட்சுமி அம்மையாரின் வீட்டிற்குச்சென்று சுவாமியை யாரோ துண்டு துண்டாக வெட்டி போட்டுள்ளனர் என்று கூற அவர் பதறிப்போய் மடத்திற்கு சென்றுபார்த்தபோது சுவாமி அமைதியாக அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தாராம்


இதுபோன்ற நிகழ்வை அப்போது வாழ்ந்த உள்ளூர்வாசிகள் பலரும் கண்டதாக 
தற்போது உள்ளவர்கள் கூறுகின்றனர். இவரிடம் ஒரு பக்தர் தாம் குஷ்ட நோயால் அவதிப்படுவதாகவும்பல்வேறு வைத்தியங்கள் செய்தும் இது தீர்க்க முடியாத நோய் என வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் சுவாமிகளிடம் முறையிட சுவாமிகள் அவருக்கு ஒரு மருந்து தைலம் கொடுத்து காலை இரண்டு சொட்டு பாலில் விட்டு சாப்பிட்டு விட்டு மருந்தை பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பக்தரும் அதன்படி மருந்து உண்டுவிட்டு அலமாரியில் வைத்து பூட்டி சாவியை தன்னிடம் பாதுகாப்பாக வைத்துள்ளார். 48 நாட்கள் சுவாமி கொடுத்த மருந்தை சாப்பிட்டதில் தீர்க்கமுடியாத நோய் முற்றிலும் நீங்கிய அதிசயம் நடந்துள்ளது. மேலும் ஒரு அதிசயமாக மருந்து பூட்டி வைத்திருந்த 

அலமாரியின் இரும்பு சாவி தங்க சாவியாக மாறிவிட்டிருந்தது. மீதமிருந்த
மருந்தையும்சாவியையும் சுவாமியிடம் கொண்டுவந்து கொடுத்து சுவாமி எனக்கு நோய் பூரணமாக குணமாகிவிட்டது. ஆனால் இந்த இரும்புச்சாவி பொன்னிறமாக மாறிவிட்டது எனக்கூறசுவாமிகள் அந்த மீதமிருந்த மருந்தினையும்சாவியையும் வாங்கி மடத்தில் சுவாமிகள் தன் தவ வலிமையால் பல தீர்த்தங்களை உள்ளடக்கி உருவாக்கிய கிணற்றில் போட்டுவிட்டார்.


இப்போது அந்த கிணற்று நீர் நோய் தீர்க்கும் தீர்த்தமாக பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இங்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். பலனும் அடைந்து உள்ளனர்.

கிணற்று நீர் மருந்தாக பயன்படுத்துவது வேறு எங்கும் இல்லாத அதிசயம் ஆகும். மேலும் சுவாமிகள் மூலஸ்தான கோபுரம் முற்றிலும் செப்பு ஓட்டினால் வேயப்பட்டது 100வருடங்களுக்கு பிறகு அதே நிலையில் பழுதடையாமல் உள்ளது 

அதிசயமாகும். இப்படி பல சிறப்புகள் கொண்ட விராலிமலை சதாசிவ மடத்தை புனரமைத்து திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது..


சுவாமிகள் 06.12.1929ம் வருடம் சோமவார திங்கள் மூல நட்சத்திரத்தில் மகா 

சமாதி எழுந்தருளியுள்ளார்.


சுவாமிகள் நோய் தீர்க்கும் மருத்துவராக வேண்டுவோர்க்கு வேண்டுவதை அருளும் அற்புத சக்தியோடு விளங்குகிறார். இங்கு சற்குருநாதருக்கு எல்லா 
வியாழக்கிழமைகளிலும் மற்றும் மாத மூல நட்சத்திரத்திலும்,அபிஷேக 
ஆராதனைகள் செய்யப்பட்டு பிரசாத அன்னம் வழங்கப்படுகிறது. கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தன்று சுவாமிகளுக்கு மகா குருபூஜை செய்யப்பட்டு 
ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.



இத்தகைய சிறப்புகளைக்கொண்ட விராலிமலை ஸ்ரீ சதாசிவசுவாமிகள்  மடத்தின் திருப்பணித் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பக்தர்கள் இந்த திருப்பணிகைங்கர்யத்தில் பங்குகொண்டு ஸ்ரீ விராலிமலை சதாசிவ சுவாமிகளின் அருளாசிபெற வேண்டுகிறோம்.




ஸ்ரீ விராலிமலை சாம்பசதாசிவ சுவாமிகள் டிரஸ்ட்,  திருபுவனம்.