Wednesday, January 24, 2024

பௌத்த (புத்தன் ) அவதராம் ??

 அயோத்யா, இராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் திருக்கோயில் கருவறையில், பிரதிஷ்டையான ஸ்ரீ பாலராமர் திருமேனித் திருவாசியில் பௌத்த அவதராம் அமைக்கப்பட்டுள்ளது.



இதுபற்றிய கருத்துகள், பதிவுகள் சமூக வலை தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.அதுபற்றிய விளக்கந்தரவே இப்பதிவு.
முதற்கண், ஸ்ரீ பாலராமர் திருமேனி பற்றிய சிறுவிளக்கம்:
தற்போது அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளஸ்ரீ பால ராமர் விக்ரகமானது, சுமார் 300 கோடி ஆண்டுகள் பழைமையான கருமை நிறக்கல்லால் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ஸ்ரீ பால ராமர் விக்ரகம் செய்யப்பட்டுள்ளது.ஏழு வயது நிரம்பிய ராமரின் திருவுருவாகவே இந்தத் திருமேனி வடிக்கப்பட்டுள்ளது. இந்த விக்ரகத்தின் எடை சுமார் 200 கிலோ. உயரம் 4.24 அடி. அகலம் 3 அடி. நவகிரகங்கள் திருமேனியின் அடிப்பகுதியில் உள்ளன. அதற்கு மேலாக தாமரைப் பீடம் அமைந்துள்ளது. திருமேனியைச் சுற்றிக் கல்லால் ஆன திருவாசியும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திருவாசியில் அனுமன், வசுதேவர், பிரம்மா, ஓம், பத்மம், சக்கரம், கதை, சுவஸ்திக், ருத்ரன், கருடன் போன்ற திருவடிவங்களுடன் தசாவதாரத் திருவுருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தசாவதாரத் திருக்கோலங்களான மத்சயர், கூர்மர், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியனவும் வடிக்கப்பட்டுள்ளன.
திருமாலின் பௌத்த அவதாரம். -- சனாதனதர்மத்தைச் சார்ந்த செய்திகள்.
இப்பதிவில் குறிப்பிடப்படும் பௌத்த அவதாரம், புத்தமதத்தைத் தோற்றுவித்த புத்தர் அல்லர்;ஆயினும் அவருக்குச் சம்பந்தம் உடையவர். இதனை இப்பதிவில் விளக்கமாகக் காண்போம்.
சற்று நீண்ட பதிவு; பொருத்தருளுக.
முதற்கண் தசாவதாரம் பற்றிய சுருக்கமானப் பார்வை =
தசாவதாரம் :
மச்சம் ---என்னும் மச்சாவதாரம்
கூர்மம் ---என்னும் கூர்மாவதாரம்
வராகம்என்னும் வராகாவதாரம்
நரசிங்கம்என்னும் நரசிங்காவதாரம்
வாமனன்என்னும் வாமனாவதாரம்
பரசுராமன்என்னும் பரசுராமாவதாரம்
இராமன்என்னும் இராமாவதாரம்
பலராமன்/புத்தன்...பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும்
கிருட்டிணன் என்னும் கிருஷ்ணாவதாரம்
கல்கி-- திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம்---கல்கியவதாரம்
திருமாலின் பிரதானமான பத்து அவதாரங்கள் எவை என்பதில் பலவேறு கருத்துகள் நிலவுகின்றன..சில நூல்கள் கிருட்டிணனை எட்டாவதாகவும், புத்தனை ஒன்பதாகவும் கொள்கின்றன...ஆனால் 17- ஆம் நூற்றாண்டின் 'யதீந்திரமததீபிகா' என்னும் வைணவக் கொள்கையை விவரிக்கும் நூலின்படி, பலராமன் எட்டாவதாகவும், கிருட்டிணன் ஒன்பதாவதாகவும் கொள்ளப்படுகின்றனர்.
சில தீவிர வைணவர்கள் புத்தனை திருமாலின் அவதாரமாகவே ஒப்புக்கொள்வதில்லை...அவர்களுக்குப் பலராமன் மட்டுமே திருமாலின் எட்டாவது மற்றும் கிருட்டிணன் ஒன்பதாவது அவதாரங்களாகும்.
மராத்தி, கோவா சம்பிரதாயத்தில் இறைவன் பாண்டுரங்க விட்டலனையும், ஒரிசாவில் இறைவன் ஜகன்னாதனும் புத்தனுக்கு மாற்றான திருமாலின் அவதாரமாக சில சிற்ப, சோதிட மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தில் கருதப்படுகிறார்கள்.
கீத கோவிந்தம் இயற்றிய ஜெயதேவர், பலராமன், புத்தன் இருவரையுமே அவதாரங்களாக்கி, கிருட்டிணனை ஓர் அவதாரமாகவேக் கருதாமல், நேரடியாக திருமாலாகவே அதாவது முழுமுதற் கடவுளாகவே உருவகப்படுத்திப் பாடியுள்ளார்.(கீதகோவிந்தம் பற்றிய நடுவணரசு வெளியிட்ட அஞ்சல் தலைகளில் இஃது பதிவாகியுள்ளது. )
விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத் குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான இலிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை ஸ்ரீமத்வ சம்பிரதாயத்தின் இரண்டாவது குருவாக விளங்கிய ஸ்ரீவாதிராஜர், தனது தசாவதாரஸ்துதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீமத்வர் தமது தந்த்ரசார சங்க்ரஹம் மற்றும் இதர சர்வமூல கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள திருமாலின் அவதாரங்கள் பற்றிய செய்திகளில் ,பௌத்த அவதாரம் திருமாலின் ஒரு அவதாரமாகவே கூறப்பட்டுள்ளது.
அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.
24 அவதாரங்கள்
பாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:
1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).
இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.
தசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.
சரி,பௌத்த அவதாரம் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.
" ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் " என்னும் நூலில் இருந்து...
கன்னட மூலத்தை எழுதியவர்:
பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
கேள்வி பதில் வடிவில் அமைந்த புத்தகம்.
படிக்க மிகவும் எளிதானது
ஸ்ரீமத்வர் தமது தந்த்ரசார சங்க்ரஹம் மற்றும் இதர சர்வமூல கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள அவதாரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
புத்தாவதாரத்தை ஸ்ரீவாதிராஜர் தனது தசாவதாரஸ்துதியில் இப்படி வர்ணித்திருக்கிறார்=
" புத்தாவதாரகவி புத்தானுகம்பகுரு பத்தாஞ்சலௌ மயி தயாம்
ஷௌத்தோதனிப்ரமுக ஸைத்தாதிகாசுகம பௌத்தாகம ப்ரணயன |
க்ருத்தாஹிதாஸுஹ்ருதி ஸித்தாஸிகேடதர ஷுத்தாஷ்வயான கமலா
ஷுத்தாந்தயாம்ருசிபி னத்தாகிலாங்க நிஜமத்தாSவ கல்க்யபித போ: || 32 ||
முன்னர் உலகத்தில் பல அசுரர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் வைதிக தத்வஞானத்தையே பின்பற்றினர். அதனால் பாலில் விஷம் கலந்ததுபோல், தத்வஞானமே அழியும் நிலை ஏற்பட்டது.
அப்போது சுத்தோதனன் என்னும் ராஜனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தையை மாற்றிவிட்டு, ஸ்ரீஹரி குழந்தையாக அவதாரம் எடுத்து அங்கு படுத்துக்கொண்டான்.
உலகத்தில் சூன்யம், அனைத்தும் தற்காலிகமானவை / அழியக்கூடியவை மற்றும் பொய் என்று உபதேசித்தார். தாம் உபதேசித்த அனைத்தும் உண்மையே என்று அனைவரையும் நம்பவைத்தார்.
தேவர்களுடன் போர் புரிந்து அவர்கள் எய்த பாணங்களை முழுங்கினார். சுத்தோதனன் முதலானோர் இந்த குழந்தை சொல்லும் மதமே உண்மை என்று நம்பி, வைதிக மார்க்கத்தை விட்டுவிட்டனர். சொர்க்கத்தில் இந்த புத்தன் தேவர்களுக்கு உண்மையான ஞானத்தை உபதேசித்தார்.
அதுவே பிரஷாந்த வித்யா என்று பெயர்கொண்டு புகழ்பெற்றது. பூலோகத்தில் உபதேசித்த பொய்யான ஞானமே புத்தமதம் என்று பரவிற்று. ஞானிகளில் சிறந்தவனே, கருணையுடையவனே, புத்தாவதாரியான ஸ்ரீஹரியே, நான் கை கூப்பி உன்னை வேண்டுகிறேன்.
இப்படியாக ஸ்ரீவாதிராஜ குருசார்வபௌமர் புத்தாவதாரியான ஸ்ரீஹரியை மனமுருகி வேண்டுகிறார்.
ஸ்ரீமத்வ சம்பிரதாயத்தில் பௌத்த அவதாரம் =
" புத்தோ நாம்னா ஜனசுத: கேகடேஷு பவிஷ்யதி "
என்னும் பாகவதத்தின் வாக்கியத்திற்கேற்ப த்ரிபுராசுரர்களில் முதலாமவன் சுத்தோதன என்னும் பெயரில் பிறந்தான். அவனின் மகனாக ஸ்ரீஹரி அவதரித்தார்.( பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான இலிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்)
( இந்த சுத்தோதனன், யார்?
நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய நாட்டில் கபிலவஸத்து என்னும் நகரை ஆண்டு வந்த வேதகால மன்னன்.இவனுடைய மற்றொரு மகனே,பின்னாளில் புத்தரான சித்தார்த்தர். )
சுத்தோதனின் மகனின் இடத்தில் குழந்தையாக காண்பித்துக்கொண்ட விஷ்ணுவின் ரூபமே, தசாவதாரத்தில் சேர்ந்திருக்கும் புத்தன். சுத்தோதனின் நிஜமான குழந்தையாக இருந்தவரே கௌதம புத்தர். இருவரையும் ஒருவரே என்று நினைப்பது தவறு. இந்த விஷயத்தில் ஸ்ரீமத்வாச்சார்யார் தெளிவாக கூறுகிறார். ‘சுத்தோதனனேத்யேவ ஜெனேஸ்பி ஜோக்த:’ என்று தாத்பர்ய நிர்ணயத்தில் 32வது அத்தியாயத்தில் கூறுகிறார். புத்தனாகி அவதரித்த விஷ்ணு பூலோகத்தில் அதிக காலம் இருக்கவில்லை. தன் வேலை முடிந்ததும், சுவர்க்கத்தில் தேவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டி புறப்பட்டுவிட்டார். பிறகு சுத்தோதனன் ஜினன் என்று அழைக்கப்பட்டதாக பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
பௌத்த அவதார உபதேசம்=
அனைத்தும் அழியக்கூடியவையே. அனைத்தும் தற்காலிகமானவையே. அனைத்தும் அசத்யமானவையே என்று உபதேசித்தார்.
தேவர்கள் பௌத்த அவதாரத்துடன் போர் புரிந்தது=
இது ஒரு நாடகம். அங்கிருந்த அசுரர்களுக்கு தன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. விஷ்ணுவும் புத்தனிடம் தோற்றுப் போனதாக நாடகம் ஆடினார்.
சுதர்சன சக்ரத்தின் மேல் பௌத்த அவதாரம் அமர்ந்திருக்கிறது என்கிற கதையின் பின்புலம் =
தேவர்கள் புத்தன் மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தபோது, புத்தன் அவற்றை விழுங்கிவிட்டார். சுதர்சன சக்ரத்தை விஷ்ணு ஏவியபோது, அதையும் உடனே பிடித்து, ஆசனம் போல் செய்து அதன் மேல் அமர்ந்தார். ‘நீயே சர்வோத்தமன்’ என்று தேவர்கள் அனைவரும் கூறி, தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். ஜினன் முதலான தைத்யர்கள் புத்தனின் பேச்சுகளை உண்மையென்று நம்பினர்.
புத்தரூபியான விஷ்ணு ஜடமான இந்த உலகத்தை ஞானம் என்று கூறினார். இது எப்படி?=
‘ஞா’ - அனைத்தையும் அறிந்த ஸ்ரீஹரியிடமிருந்து ‘அன’ - உலகம் ஊக்கத்துடன் வளர்கிறது. ஆகையால் இந்த உலகமானது ஞானரூபம் என்றே பொருளாகுமே தவிர ஜடஸ்வரூபம் என்று பொருளல்ல.
அனைத்து உலகமும் சூன்யம் என்று புத்தன் கூறினார். இதன் பொருள் =
சூன்யன் என்று பெயர் கொண்ட ஸ்ரீஹரியிடமிருந்து தோன்றி வளர்வதால், இந்த உலகத்திற்கு சூன்யம் என்று பெயர். இதுவே இதன் நிஜமான பொருள்.
’அசத்’ மற்றும் ‘அபாவ’ என்பவையின் பொருள் =
அ என்றால் ஸ்ரீஹரி. அவனால் அழியக்கூடியதாக இருப்பதால் இந்த உலகம் அசத் எனப்படுகிறது. அ என்னும் ஸ்ரீஹரியிடமிருந்து உலகம் தோன்றியதால், அபாவ எனப்படுகிறது.
இராமானுஜ மதத்தவரும் புத்தரை ஸ்ரீஹரியின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளாமல், தசாவதாரத்தில் சேர்க்காமல், பலராமனை தசாவதாரத்தில் சேர்த்து, தமக்கென்று ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ஹ, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ண, புத்த, கல்கி - இவையே தசாவதாரங்கள் என்று தெரிந்திருக்கிறோம். இதில் வேறு எதுவும் பிரச்னை இருக்கிறதா?
ஆம். வங்காள தேசத்தில் கிருஷ்ணனை தசாவதாரத்தில் சேர்ப்பதில்லை.
" கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் " என்ற வாக்கியப்படி கிருஷ்ணன் மூலரூபியானவன்.
மத்ஸ்ய, கூர்ம, வராகன் ஆகியன கிருஷ்ணனின் அவதாரங்கள் என்கின்றனர். இப்படியாக தசாவதாரங்களில் பல குழப்பங்கள் உள்ளன. ஆனால் ஸ்ரீமத்வாச்சார்யார், புராணங்களின் ஆதாரங்களின்படி தசாவதாரத்தைத் தெளிவாக, பௌத்த அவதாரத்தையம் சேர்ந்து, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ( இங்கு,இலிங்கபுரணம் கூறும் செய்திகளை ஒப்புநோக்கவேண்டும்)
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் " என்னும் நூலில் உள்ள " பௌத்த அவதாரம் "கட்டுரை இணைப்பு =
ஒரு ஆங்கிலக் கட்டுரையில் திருமாலின் பௌத்த அவதாரம், ஆதி புத்தா என்றிருப்பதைக் கண்டேன்.
Gautama Buddha is not avatar of Vishnu. Avatar of Vishnu is Adi Buddha.
Adi Buddha
Adi Buddha is avatar of Vishnu was born on 1887 BCE to Mother Anjana in Kikata (Bodh Gaya).
The Adi Buddha Established the Philosophy of Ahimsa, Non Violence. He preached against ritual Animal Sacrifices that has crept into Vedic Hinduism. He emphasized the divine in all beings and divinity of all souls arousing compassion for all.
Siddhartha was was born around 560 BCE
கட்டுரை கீழே =
அன்பர்களே,அடியேனுக்குக் கிடைத்தத் தரவுகளைக் கொண்டு இக்கட்டுரையைத் தந்துள்ளேன். வேறு கருதுகோள்கள் இருப்பின் ஆன்றோர் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
சனாதனதர்மம் மிகவும் தொன்மையான ஒன்று;புத்த மதம், சமண மதம் போன்ற மதங்கள் சனாதனதர்மத்திற்குப் பிந்தியவை. அதனால், மற்ற மதங்கள் தாம் சனாதனதர்மத்தின் கோட்பாடுகளைக் கொண்டனவையேயல்லால், சனாதனதர்மம் அவற்றின் கோட்பாடுகளைக் கொண்டது என்பது பொருத்தமற்ற வாதம்.
புகைப்படங்கள் =



திருமாலின் பௌத்த அவதாரச் சிற்பங்கள் நம் பாரத தேசத்தில் பலவிடங்களில் காணக்கிடைக்கின்றன.( நின்றத் திருக்கோலத்திலும் அமர்ந்தத் திருக்கோலத்திலும் ) அவற்றுள் சில அன்பர்களின் பார்வைக்கு.
அயோத்யா, இராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் திருக்கோயில் கருவறையில், பிரதிஷ்டையான ஸ்ரீ பாலராமர் திருமேனி.
சேலம், ஆத்தூர் ஆறகளூர்
திருக்கோயிலில் உள்ள திருமாலின் பௌத்த அவதாரச் சுதை சிற்பம்.


திருமாலின் பௌத்த அவதாரம், அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,தாராசுரம்.
( Buddha as an avatara at Airavatesvara Temple.,Tamil Nadu.)




திருமாலின் பௌத்த அவதாரம், திருமலை,துவரகா திருக்கோயில், ஆந்திரா
(Buddha as an avatar at Dwaraka Tirumala temple, Andhra Pradesh)



திருமாலின் பௌத்த அவதாரம், சென்னகேசவன் திருக்கோயில், சோமநாதபுரா,கர்நாடகா.
(Buddha as Vishnu at Chennakesava Temple, Somanathapura, Karnataka)


திருமாலின் பௌத்த அவதாரம்,குஜராத் பதன் இராணி கி வாவ் ( நூறு ரூபாய் பணத்தாளில் உள்ள இராணியின் கிணறு)


திருமாலின் பௌத்த அவதாரம்,ஓவியம், Buddha as an avatar of Vishnu in a Persian-style


திருமாலின் பௌத்த அவதாரம்- லோட்டஸ் அருங்காட்சியகம், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.




தசாவதாரம்:
இறைவன் திருமாலின் பத்து அவதாரங்கள்-- இடதுபுற தலைப்பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக மச்சம் அவதாரத்திலிருந்து தொடக்கம்.பலராமனுக்குப் பதிலாக புத்தன் காட்சி தருகிறார்...ஒரு மாற்றுக் கருத்தின்படி புத்தாவதாரம் கிருட்டிணனுக்கு அடுத்தபடியாக வந்த அவதாரமாகக் கருதப்படுகிறது.Jayadeva, in his Pralaya Payodhi Jale from the Gita Govinda, includes Balarama and Buddha where Krishna is equated with Vishnu and the source of all avatars.



திருமாலின் அவதாரம் - பூரி ஜெகநாதர் இணைத்து. ஓவியம்.
தசாவதாரம்:
பாண்டுரங்க விட்டலனை திருமாலின் அவதாரமாகக் காட்டும் கோவா (மராத்தி) கலாசாரம்...இடதுபுறம் மேலிருந்துக் கீழாக நான்காவது திருவுருவம்.Temple door depicting Dashavatar with Vithoba, at Sree Balaji Temple, Goa. From leftmost upper corner, clock wise: Matsya, Narasimha, Parashurama, Rama, Krishna, Kalki, Vamana, Vithoba, Varaha and Kurma,Krishna.

பௌத்த அவதாரம் திபெத்திய சிற்பம்.


கீதகோவிந்தம் தசவதார அஞ்சல் தலைகள்,பௌத்த அவதாரம்










No comments:

Post a Comment