அன்பர் வேலுதரன் அவர்கள் [ Veludharan ] காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தூண் சிற்பம் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் .
அதைப்பற்றிய அடியேனின் பின்னூட்டம்.
அச்சிற்பம் மச்ச சம்ஹார மூர்த்தி சிற்பமாகும்.
மச்ச சம்ஹார மூர்த்தி.
சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினைச் சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரம்மாவிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றைக் கூறினார். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார்.
கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மந்தரம் போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்குத் தக்கவாறு உருவம் [கொக்கு வடிவம் கொண்ட மூர்த்தம் ] கொண்டு நின்றார். வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார்.
பின்னர் அதன் கண்னைத் தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி யாகும்.
இவரைக் காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கொக்கின் கூர்மையான மூக்கில் அகப்பட்ட மச்சவவதார மூர்த்தம் கீழ் பாதி மீனாகவும் மேல் பாதி திருமாலாகவும் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் .வேறெங்கும் இத்தகைய வடிவத்தைக் காணவியலாது.
இலக்குமி தேவி சிவப்பரம்பொருளை வேண்டி நிற்பதையும் சிற்பத்தில் காணலாம்.
இவர்க்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று கொடுத்து, எள் தீபமிட தொழில் விருத்தியடையும். பல புதியத் தொழில்கள் தோன்ற ஏதுவாகும் என்பது ஐதீகமாகும் .
அடியேன் வாழும் பேளூர் அருள்மிகு தான்தோன்றி நாதர் திருக்கோயிலில் தூண் ஒன்றில் இவ்வரலாறு சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது;அதில்,கொக்கு மீனைப் [ முழுமீனாக ] பிடித்திருப்பதைப் போலத்தான் காட்டப்பட்டுள்ளது.
காஞ்சீபுரச் சிற்பம் அலாதியானது.
புகைப்படங்கள்=
௧.அன்பர் வேலுதரன் அவர்கள் [ Veludharan ] பகிர்ந்த காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தூண் சிற்பம்.
௨. அதன் பெரிதுபடுத்திய படம் ஒன்று.--கொக்கின் கூர்மையான மூக்கில் அகப்பட்ட மச்சவவதார மூர்த்தம் கீழ் பாதி மீனாகவும் மேல் பாதி திருமாலாகவும் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் .வேறெங்கும் இத்தகைய வடிவத்தைக் காணவியலாது.
௩.அதன் பெரிதுபடுத்திய படம் இரண்டு -இலக்குமி தேவி சிவப்பரம்பொருளை வேண்டி நிற்பதையும் சிற்பத்தில் காணலாம்.
௪.அடியேன் வாழும் பேளூர் அருள்மிகு தான்தோன்றி நாதர் திருக்கோயிலில் தூண் ஒன்றில் இவ்வரலாறு சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது;அதில்,கொக்கு மீனைப் [ முழுமீனாக ] பிடித்திருப்பதைப் போலத்தான் காட்டப்பட்டுள்ளது.
௫. ஓவியம் ஒன்று --மச்சத்தின் கண்ணைச் சிவபெருமான் தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார்.[ இதில் சிவபெருமான் முழு உருவில் காட்டப்பட்டுள்ளார்.]
No comments:
Post a Comment