Tuesday, July 23, 2019

திருக்கோயில் திருமஞ்சனக் கல் தொட்டிகள்!!!



திருக்கோயில் திருமஞ்சன நீர் என்றால்,இறைவனைத் திருமுழுக்கு செய்வதற்குரிய புனிதத் தீர்த்தம்.அந்தந்தத் தலங்களுக்கு உரிய கிணறு,திருக்குளம்,நதி ஆகியவற்றிலிருந்து கொண்டுவந்து சேகரிப்பார்.
'' நெஞ்சகமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே 
மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராமரமே ''

என்பது தாயுமானவரின் பராபரக்கண்ணி .
முற்காலத்தில் திருமஞ்சன நீரைக் கல் தொட்டிகளில் சேகரித்துப் பயன்படுத்தினர்.அத்தொட்டிகள் தற்பொழுது பயன்படுத்தப் படாமல் உள்ளன.அத்தொட்டிகளில் சில அற்புத சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை.
அவற்றுள் அடியேனது தரவுகளில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
புகைப்படங்கள்===
௧ , ௨ , ௩ ..வில்வநாதீஸ்வரர், [வல்லநாதர்] திருக்கோயில்,திருவலம் (திருவல்லம்),திருவலம் அழகான சிவன் கோவில். இரண்டு கல் தொட்டிகள் நுழையும் போதே திண்ணையில் உள்ளன.ஒன்றில் கோலாட்டம் ஆடும் பெண்கள் அழகிய நுணுக்கமான வேலைப்பாடு.பார்க்கப் பார்க்கப் பரவசம்;அற்புதம்.No automatic alt text available.
No automatic alt text available.

௪ , ௫ . .மேல்பாடி சோமநாதர் கோவிலின் பிரகாரத்தில் சுற்றிவரும்போது சிதிலமான லிங்கமும், அழகிய கல் தொட்டியும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
Image may contain: shoes
௬ ..மலேசியா கடாரம் [கடா]தொல்பொருள் ஆய்வகத்தில் உள்ள கல் தொட்டிகள்.
Image may contain: plant

௭ . .ஸ்ரீசைலத்திலிருந்து கர்நூல் வரும் முன் ஆலம்பூர் என்ற ஊரில் உள்ள நவப்பிரம்மா கோவில் கல் தொட்டி
Image may contain: plant, tree, outdoor and nature

௮ . அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோவில்,செட்டியாப்பத்து கல் தொட்டி
No automatic alt text available.
௯ . .வேலூர் கோட்டை,ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல் தொட்டி.
No automatic alt text available.

௧௦ , ௧௧ . கர்நாடகா ,ஹம்பி விருபக்ஷா கோயில் வெளியே உள்ள தொட்டியும் உள்ளே உள்ள தொட்டியும்.
No automatic alt text available.

௧௨ . கர்னூல் , அலம்பூர் நவபிரம்மா திருக்கோயில் வளாகத்தில் தாரக பிரம்மா கோயில் முன் உள்ள கல் தொட்டி .Taraka Brahma temple is the stone bowl with Persian inscription. The boat-shaped bowl is about 4' long x 1½' wide x 2' deep. The bowl's overall height above the ground is about 4'. There's no info as to when or who installed it. This bowl is taken care of by the Maulavi of a Dargah here. The Dargah building is also painted in the same green/red combination.
௧௩ , ௧௪ , ௧௫ . . BHIMAR CHARIYA , HAJO ,ASSAM “Bhimar Charia”, just about one and a half kilometres from the Hayagriva Madav Temple,,Hajo ,Assam . உள்ள கல்தொட்டி .
Image may contain: outdoor
௧௬ . Ramlingesvara Temple Complex, Aihole . Bagalkot district of Karnataka . உள்ள கல்தொட்டி .No automatic alt text available.
௧௭ , ௧௮ . ௧௯ . மகாபலிபுரத்தில் உள்ள கிரேனைட் கல்லில் குடையப்பட்ட எட்டடி விட்டமுள்ள கல் தொட்டி .தமிழனின் அற்புதமான சீரான வடிவமைப்பிற்கு உலகப் புகழ் வாய்ந்தது .அடியேனின் வினா === என்ன உபயோகத்திற்கு இந்த கல் தொட்டி குடையப்பெற்றிருக்கும் ?அறிந்தோர் பதிலளித்தால் அனைவரும் பயன்பெறுவர் .
Image may contain: outdoor
பின்குறிப்பு===
தினமலர் ===09--06--2012 செய்தியில் உள்ளது==
வேலூர்: ராணிப்பேட்டையில் பழமையான பச்சை கல் தொட்டியை அதிகாரிகள் மீட்டனர்.
ராணிப்பேட்டை கால்நடை மருத்துவம்னையில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபூர்வ பச்சை கல் தொட்டி உள்ளதாகவும், சித்தர்கள் உருவாக்கிய இந்த பச்சை கல் தொட்டியை மன்னர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்றும், இந்த பச்சை கல்லில் தண்ணீர் ஊற்றி குடித்தால் பல நோய்கள் குணமாகும் என்றும், அபூர்வ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பச்சை கல் தொட்டி கேட்பாரற்று கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.
கலெக்டர் அஜய் யாதவ் உத்தரவுபடி வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியார் சரவணன் நேற்று (ஜூன் 8) ராணிப்பேட்டை சென்று லாரி மூலம் இதை எடுத்து வந்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பச்சை கல் தொட்டியை கலெக்டர் அஜய் யாதவ் பார்வையிட்டார். இந்த பச்சை கல் தொட்டியை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவர்கள் மூலம் விரைவில் ஆய்வு செய்து உண்மை தன்மை கண்டறியப்படும் என அதிகாரிகள் கூறினர்.

அன்பர்களே!
இந்த செய்தியில் கண்டவாறு ''பச்சை கல் தொட்டி''பற்றிய மேலும் செய்திகள் ,புகைப்படங்கள் இருப்பின் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment