வியாழன், 17/06/2010 - 7:05pm ? vinoth
ஒவ்வொரு ஆசனத்திற்கும் அதற்கேற்ற மாற்று ஆசனங்கள் உள்ளது. ஒரு ஆசனம் செய்த பிறகு அதற்குரிய மாற்று ஆசனத்தை செய்தால் அந்த ஆசன்ததிற்குரிய முழு பலனை பெற முடியும்.
சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம். அதற்கு மாற்று ஆசனம் யோகாசனம் செய்வதை நிறுத்தி சாதாரண நிலைக்கு வருதலாகும். இதைத்தவிர முக்கியமான ஆசனங்களுக்கு அதற்குரிய மாற்று ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசனம் | மாற்று ஆசனம் |
---|---|
பத்மாசனம் | சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல் |
உத்தித பத்மாசனம் | சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல் |
யோகமுத்ரா | புஜங்காசனம், மச்சாசனம, பிறையாசனம் |
பச்சிமோத்தாசனம் | சக்ராசனம், தனுராசனம் |
உத்தான பாத ஆசனம் | சலபாசனம் |
வபரீத கரணி | மச்சாசனம், பிறையாசனம் |
சர்வாங்காசனம் | மச்சாசனம், பிறையாசனம் |
ஹலாசனம் | சக்ராசனம், பிறையாசனம் |
புஜங்காசனம் | யோகமுத்ரா |
சலபாசனம் | உத்தான பாத ஆசனம் |
தனுராசனம் | ஹலாசனம், பச்சிமோத்தாசனம் |
மயூராசனம் | சக்ராசனம் |
உசர்ட்டாசனம் | சர்வாங்காசனம், ஹலாசனம் |
மச்சாசனம் | சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம் |
வலது அந்தர்மத்ச்யேந்தாசனம் | இடது அந்தர்மத்ச்யேந்தாசனம் |
அர்த்தசிரசானம் | நின்ற பாத ஆசனம் |
சிரசாசனம் | நின்ற பாத ஆசனம் |
நின்ற பாத ஆசனம் | அர்த்தசிரசானம், சிரசாசனம் |
வலது திரிகோணாசனம் | இடது திரிகோணாசனம் |
பாதஹஸ்தாசனம் | ஹலாசனம், சக்ராசனம், பிறையாசனம் |
பிறையாசனம் | பாதஹஸ்தாசனம் |
சக்ராசனம் | யோகமுத்ரா, ஹலாசனம் |
உட்டியாணா | நௌலி |
நௌலி | உட்டியாணா |
உட்கட்டாசனம் | பத்மாசனம், உத்தான பாத ஆசனம் |
ஜானுகீராசனம் | பச்சிமோத்தாசனம் |
ஹஸ்தபாதாங்குசாசனம் | தனுராசனம், நின்ற தனுராசனம் |
வஜிராசனம் | மகாமுத்ரா, யோகமுத்ரா |
சப்தவஜிராசனம் | விபரீதகரணி, சர்வாங்காசனம் |
No comments:
Post a Comment