இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டதல்ல. நமது கோப்பில் இவ்வளவு நாட்கள் மறைவாக இருந்துள்ளது. கட்டுரையின் சாரம், எழுத்து நடை கவனிக்கும் போது டாக்டர். ஜெயபாரதி அய்யா கட்டுரை மாதிரி தெரிகிறது. பலரும் படித்து பயன் பெற வேண்டுமென்ற எண்ணத்தில்
இதனை தளமேற்றுகிறேன்
------------------------------
சும்மா #1
திருஞான சம்பந்தப் பெருமான் கூறுகிறார்,
போகம் மறியார் துவர் போர்த்துழல்வார்
ஆகம் மறியா வடியா ரிறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூன்
மீகம் மறிவார் வேணு புரமே
மிக அருமையான பாடல்! இதிலே மூகம் என்பது மௌனம் என்றும் சொலற சும்மா இருத்தல் என்று சொல்லப்படும் நிலையே. மூகம் என்னும் தேனருஞ்சொல்லை தமிழர்கள் உள்ளார்ந்து எடுத்தாளவேண்டும். மூகம் என்னும் சொல் பன்முகப் பொருள் நிறைந்த அருமையான சொல். நான் என்னும் எண்ணம் அற 'தன்மை வாயிலாராய்', தன்னுள் தானாய் ஊன்றி னிற்கும் நிலை.
'ஆகம் அறியா அடியார்' என்பதும் மிக ஆழமான பொருள் கொண்டதுதான்.மௌனகுரு சுவாமிகள் ஒருமுறை நிர்வாணமாக நடந்து செல்கையில், ஒரு போர்வீரன் அவரைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்தான். எவ்வித பிரக்ஞையும் இன்றி நடந்து சென்ற சுவாமிகளின் கையை வெட்டிவிட்டான். அப்போதும் ஏதும் உணராமலேயே சுவாமிகள் நடந்துசென்றார்.
யாரோ கையை எடுத்து வந்து கொடுத்ததாகவும் கையை திரும்பவும் ஒட்டிக்கொண்டதாகவும் சொல்வார்கள். அவதூதர் என்னும் அடியார்கள் உடல் பிரக்ஞை இல்லாதவர்கள். சமணர்களில் 'திகம்பர சமணர்' என்போரும் அப்படித்தான்.
இந்த "சும்மா" என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது? ஒரு பொ¢ய விசேஷம் உண்டு உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது. இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.
முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.
பண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர்.மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் எனபவையே அவை. -- மனசு:
"மனசு" -
புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்புபடுத்தும்.அதனிடம் வந்து சேரும் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும். பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.
நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும்.அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும்,அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை.முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது. மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.ஏதோ ஒரு நல்லது,கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில்தானஎடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்தமாதி¡¢தான்.
மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன். அங்குத்தான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும்.நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious stateஐ மனசு manifest செய்கிறது.
மனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும் கூடியது.
சித்தம்:
"சித்தம்" என்பது சற்று சிக்கலானது.உணர்வுகள்,நினைவுகள்
இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும்.ஆற்றின் அடிமட்டத்தில்
அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல் ஓடும் ஆற்று
நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள்,சுழற்சிகள்,அலைகள், குமிழிகள் போன்றவை மற்ற
அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.
This is a huge pool of sensory impressions and data.
உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ணஎழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.
"அஹம்காரம்"-சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள். ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.
"நான்" என்னும் தன்மைதான் அஹம்காரம். நம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவா? ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள்,வெறுப்புகள், அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே "தான்", "நான்","எனது" என்று தன்னிலைப்படுத்திக்கொள்ளும்.அந்
அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.ஆனால், ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும்.இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.
"புத்தி" என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள், தீர்மானங்கள், தர்க்கங்கள்,நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது, அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும்.நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும். அழகுணர்வு, இசைரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.
சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.--
அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை. அவர் ஒட்டுமொத்தத்தில் "சித்தம்" என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.
"யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ",
என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.
பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், "சித்தம், "மனது" என்பனவற்றுக்குப்
பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)
ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.
எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.
எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.
உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டே இருக்கின்றன.
ஒன்று, நினைப்பு.
இன்னொன்று, மறப்பு.
மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது.
ஆனால், வேறொன்று வந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை. மனதில்
எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.
நினைப்பு" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும்
ஒரு active processதான். ஒன்றை நாம் உணருகிறோம். இன்னொன்றை நாம் உணருவதில்லை.
மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.
"நினைக்கத் தொ¢ந்த மனமே!
உனக்கு மறக்கத் தொ¢யாதா?"
நினைவெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்!
பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த
வாக்குகளில் நான்கு உண்டு. பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகா¢ ஆகியவை. வைகா¢யும் இரண்டாக இருக்கிறது.சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் "வைகா¢" என்கிறோம். அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை"தூல வைகா¢" என்றும், வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை "சூட்சும வைகா¢" என்றும் கூறுகிறோம்.இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம் என்று.
வைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும். இதனை
"மத்யமா" வாக் நிலை என்போம். Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.
இதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன்
ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது. அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றன. அதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.இதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறது. மயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமா. மத்யமா நிலையில் இருக்கும்எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், வைகா¢ நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.
இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை "பஸ்யந்தி" என்று கூறுவார்கள். மத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும். இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று. விதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.
இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பரா" வாக் என்பார்கள். முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி, அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா?
ஆலவிதை - பரா
முளை - பஸ்யந்தி
செடி - மத்யமா
ஆலமரம் - வைகா¢--
இப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது. மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பரா வரைக்கும் சென்று வாக், எண்ணங்களை உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின்பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.
இந்த நிலைதான் "சும்மா" இருக்கும் நிலை.
"சொல் அற; சும்மா இரு!" என்பது அருணகி¡¢யாருக்கு முருகன் கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.
எண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகா¢யை அடக்கி, மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.
இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்" எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டா. புத்தி, சித்தம், அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும். மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதே? ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.
இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.
நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?
இதைத்தான் "சும்மா" இருத்தல் என்பார்கள்.
"தி¡¢புடி ஞானம்" என்று ஒரு விஷயம் இருக்கிறது. காண்பான், காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் தி¡¢புடி என்பது. சும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.
மனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும். ஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.
ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.
"கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை"
நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;
வாக்கும் இல்லை, மனமும் இல்லை;
இரவும் இல்லை, பகலும் இல்லை.
அது ஒரு Twilight Zone.
"வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் உள்ளம் தெளிவித்து"
ஒளவையார் "விநாயகர் அகவ"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான்
"சும்மா இருப்பது".
ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? - பத்திரகி¡¢யார்
அந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான். ஐம்புலன்களின் செயல் பாட்டினைநிறுத்தினால் ஆங்காரமாகிய "தான்" என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா?
"வேட்டை பொ¢தென்றே, வெறி நாய் துணை கொண்டு,
காட்டில் புகுவேனோ? கண்ணே, ரகுமானே!"
ஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார்.
இதனை "ரகுமான் கண்ணி" என்னும் பகுதியில் காணலாம்.
அவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்; யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற ChristianMystics ஆகவோ, சீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோ, அல்லதுநம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும். யாராகவே இருந்தாலும்அவர்களுடையது ஒரு c ommon மொழி.
அதுதான் "சும்மா இருக்கும்" மொழி.
¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத், ஸ்வப்னா, ஸுஷுப்தி, து¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை "அவஸ்தை" கள் என்பார்கள். இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து "பஞ்சாவஸ்தைகள்" என்பர்.
காதெல் பெஸாஸ்ஸெ, காதெல் பெஸாஸ்ஸெ
ஏதோ சவுக்கியம் பெர்வாயில்லை
காதெல் பெஸாஸ்ஸெ, காதெல் பெஸாஸ்ஸெ
நானும் அவெஸ்த்தெயும் பெர்வாயில்லை......
என்பதில் வெரும்...மன்னிக்கவும் வரும் 'அவெஸ்த்தை' வேறு
இது வேறு.
1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும். இதனை தமிழ் சித்தர் மரபு "நனவு" என்று அழைக்கும் மூளையில் தோன்றும் "Electro Encephalography" யில் "beta rhythm" காணப்படும்.
2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது. இதனை "Rapid eye Movement Phase of Sleep" அல்லது "REM Stage of Sleep" என்றும் கூறுவார்கள்
இதன்போது மூளையின் E.E.G.யில் "theta rhythm" பதிவாகும்.
3. ஸுஷுப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை -கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம். தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும். இதில் E.E.G. patternஇல் "delta rhythm" தோன்றும்.
4. து¡¢ய நிலை- இது சமாதி நிலை. சும்மா இருக்கும் நிலை.இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் "alpha rhythm" தோன்றும்.
5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலை. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் அல்லவா?
"போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே"
பிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. 'உயிர்ப்படக்கம்' என்று சித்தர்கள் கூறுவார்கள். இதுதான் "நிர்விகல்ப்ப சமாதி" எனப்படுவது. "சாயுஜ்ஜியம்" என்பதுவும் இதுபோன்றதுதான்.
தமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.
1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவது. அந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.
2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy -களில் சஞ்சா¢க்க விடுவது. சில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. "Day- dreaming".3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது
.4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought. "ஐன்ஷ்டைன்" நிலை.
5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டு, எழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.
வெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,
"போகாதே! போகாதே! என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்ற பாட்டின் நிலை.
6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும்
ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.
7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.
8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.
மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில்இணைக்கவேண்டும்.ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.
இதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லை. எப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கின. என்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.
ஒரு நாள். கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விசித்திரமான கனவு. ஒரு பாம்பு நெளிந்துஆடி வந்தது. பின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாது. அந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டது. அப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.
கெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.
அந்த Hexagon வடிவில் Benzene molecule இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார்,
கெக்கூலே. இதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய
கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை "Lord of the Rings"
என்றோ "Ring-master" என்றோ அழைக்கலாமோ?)
9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.
10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமா, தூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.
11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.
12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான் இந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் கண்டவர்கள் இவைகளை எங்கேயோ விட்டுவிட்டோம்
Biofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை நன்றாக ஆராயலாம்.
இதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும். இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.
சித்தர்கள் நூல்களைப் 'பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள்' என்று நினைக்கும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும். இதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம். அந்தந்த நிலைகளைவெளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா?
எப்படிச் செய்யலாம்? மனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டு? மனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா?
REM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாகத் தூக்கத்தை மூன்று நாட்களுக்குக்
கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.
Relaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா?...etc.
Gentlemen! The sky is the limit!--
சும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்?நம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும். எங்கிருந்து தோன்றுகின்றன?எங்கே செல்கின்றன? என்ன sequence of thought ஏற்படுகிறது?என்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்க வேண்டும்.வேற்றுப்புலனுணர்வுத்தூ
கண்களை லேசாக மூடிக்கொள்ளலாம். வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம். சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque musicபோன்றவற்றைக் கேட்கலாம். நம் பக்கத்து இசையானால் குழல், வீணை, போன்ற கருவிகளில் இசைக்கப்படும் வசந்தா, நீலாம்பா¢, மோஹனம், கானடா, தன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம். அல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம். ஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சில வகையானவாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும். சந்தன எண்ணெய், அரகஜா, ஜவ்வாது, ரோஜா போன்றவை.
இதுதான் ஆரம்ப நிலை ஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.
சும்மா என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா?
சிற்சில பிரயோகங்களைப் பார்ப்போமே?
(1) பேசாமல் இருப்பது:
என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்?
தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்! இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்.
(2) ஒன்றும்செய்யாமல் இருப்பது:
துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!
(3) இயல்பாக normal ஆக இருப்பது:
என்னா மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே? இப்ப எப்பிடி இருக்காலுவ?
இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ.
(4) வெறுமையாக இருப்பது:
அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா? இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது.
அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?
(5) தொழிலின்றி இருப்பது:
ஏனுங்கோ? உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?;இல்லீங்
(6)காரணமின்றி:
அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே? செம்மாதாங்கண்ணு.
(7)பயனின்றி:
ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா? என்னங்கிறேன்?
அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும் அஙிண போயிக்கிணுமா இருக்கான்?
(8)விளையாட்டாய்ச் சொல்வது:
ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன? குருத எங்கனாச்சும் பறக்குமா? சும்மா சொன்னேன்.
(9) கருத்தில்லாமல்:
இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?
(10) இலவசமாக:
இது என்ன விலைக்கு வாங்கினே?
விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது.
(11)ஓய்வு எடுத்தல்; relaxing:
ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்.
(12) அடிக்கடி:
ஏன் சும்மா வந்துண்டே இருக்கேள்?
(13) தடங்கலின்றி:
மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவை. நீங்க சும்மா வாங்க.
(14) பயன்படுத்தப்படாமல்:
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!என்ற சொல் கன்னடத்திலும்
மலையாளத்திலும் இருக்கிறது. வேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.
.
(எங்கே போகிறாய்?)
(சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)
பல வட்டார, சமூக, பேச்சுமரமுகளில் இருப்பதைக்காணலாம். ;சும்மா என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள்
என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.
மேலே உள்ளவற்றுடன் இதையும் சும்மா சேர்த்துக்கொள்ளுங்கள்.
பொண்ணு ஒருத்தி...
சும்மா சும்மா
அவளும் நானும்
சும்மா சும்மா
அஞ்சு மணிக்கி
சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா...சும்மா...சும்மா சும்மாதானே:-)--
No comments:
Post a Comment